சனி, 18 செப்டம்பர், 2021

நம் மொழியை அழிக்க சமஸ்கிருதமா ?

 இந்திய பிரதமர் மோடிக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ, இந்தியாவில் மறைமுகமாக பார்ப்பனீயம் பல வருடங்களாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது முக்கியமாக கல்வித் துறையில் அதிகமாகப் புகுத்தப்பட்டு ஹிந்துதுவா  என்ற பெயரில் இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் பார்ப்பனிய மேலாதிக்கமுள்ள ஒரு அரசினை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள மத்திய, மாநில பார்ப்பன அமைச்சர்கள், அமைச்சகத்தில் பணிபுரியும் செயலாளர்கள், பார்ப்பன அதிகாரிகள், பார்ப்பன அமைப்புகள், RSS (Rashtriya Swayamsevak Sangh), வெளிநாட்டில் பணிபுரியும் பார்ப்பனர்களின் கூட்டமைப்புகள், இந்தியாவில் உள்ள சில கல்வி சார்ந்த அமைப்புகளில் குறிப்பாக NTA (National Testing Agency) இல் உள்ள பார்ப்பன உயரதிகாரிகள், இந்திய கார்பொரேட் மற்றும் இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் மேலாண் அதிகாரிகள் மற்றும் திறன் மேம்பாட்டு மேலாளர்கள் எனப் பலவிதமான கோணங்களில் முயற்சிகள் உருவாக்கப்படுகின்றன. 

முதலில் தேசிய மொழியென்று இந்தி திணிக்கப்பட்டு பின்பு ஆங்கிலம் அரசு மற்றும் அலுவல் மொழியிலிருந்து நீக்கப்படும். அதன் மூலம் சமஸ்கிருதம் ஆதிக்கம் பெறும். இது சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை பார்ப்பனர்கள் செய்யத் துடிக்கின்ற ஒரு முயற்சி. இதுவரை கைகூடவில்லை என்றாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் எப்படியாவது அவர்கள் இதை நிறைவேற்றி விடுவார்கள். 94% இந்தியர்களை 6% பார்ப்பனர்கள் ஆள வேண்டும் என்று அவர்கள் எப்போதோ தீர்மானித்து விட்டார்கள். அதனால் தான் ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் (பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள்......) அவர்கள் உயர் பதவிகளில் இருந்து அந்த கட்சியின் கொள்கை முடிவுகளை 
தீர்மானிக்கும் சக்திகளாக இன்றுவரை இருக்கின்றனர். அதனால் தான் உயர்சாதி பிரிவினருக்கான 10% ஒதுக்கீட்டை எல்லா கட்சிகளும் ஆதரித்தன. அந்த 10% ஒதுக்கீடும் பார்ப்பனர் மட்டுமே அனுபவிக்கின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளிலோ அல்லது மாதங்களிலோ நாம் படித்த உலகளாவிய கல்விமுறை ஒழிக்கப்பட்டு சமஸ்கிருத  வார்த்தைகளைக்  கொண்ட புதியக் கல்விமுறை இந்தியா முழுவதும் புகுத்தப்படும். இதற்காக நம்முடைய  ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் (Union Budget) பலகோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இதுவரை இல்லாத புதிய சமஸ்கிருத  வார்த்தைகள் அந்தந்த படிப்புத்துறை அல்லது பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இனிமேல் அவை வேதக்கணிதம், வேதஅறிவியல், வேத தத்துவவியல், வேத உளவியல், வேத மருத்துவம், வேத கணிணியியல், வேதப் பொருளாதாரம், வேத நுண்ணறிவு, வேத சமூகவியல், இப்படி பல்வேறு படிப்புகளும் பெயர் மாற்றம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளின் அறிவியல் மற்றும் இதர கலைச்சொற்கள் நீக்கப்பட்டு புதிதாக உண்டாக்கப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் நுழைக்கப்படும். இந்த புதிய சமஸ்கிருத வார்த்தைகளை உருவாக்க பண்டிதர்கள் உட்பட பல பார்ப்பனர்கள் அதிக ஊதியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  அவர்கள் எந்த வார்த்தைகளை எல்லாம் உருவாக்குகின்றார்களோ, அதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கில கலைச்சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்படும்.  பொருள் வெளிநாட்டு பொருள் ஆனால் அதன் மீதுள்ள முத்திரை அல்லது ஒட்டு வில்லை (label / sticker) எங்கள் பெயரில் எங்கள் மொழியில் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். நாளடைவில் இந்திய வரலாற்றை திருத்தி எல்லாம் வேதகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை என இந்திய சமுதாயத்தை நம்ப வைப்பார்கள். இது அவர்களின் கலாச்சாரம்.  மத்தியபிரதேச பொறியியல் படிப்பில் (Engineering) இவை (ராமாயணம், மஹாபாரதம், குருஷேத்திர போர்) ஏற்கனவே இடம் பெற்று விட்டன.இப்படி கல்வியை மாற்றுவதன் மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களை முற்றிலுமாக கல்வியிலிருந்தும் முக்கிய பணியிலிருந்து சிறிது சிறிதாக நீக்கி மீண்டும் ஆரிய மேலாதிக்கத்தை இந்தியா முழுதும் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது 

திங்கள், 6 செப்டம்பர், 2021

ஏகதேவனே! போற்றி! போற்றி !

 இஸ்ரயேலின்  சர்வவல்ல தேவனே!
     இணையில்லா  ஒரே இறைவனே!
வஸ்திரமென  தூய்மை  அணிந்து 
     வான்மண்ட  லந்தனை  ஆள்பவரே!

நாங்கள்  யெஹோவா  என்றுந்தன்  
   நாமகரணம் எபிரேயத்தில்  சொல்ல 
ஆங்கே  அரபியத்தில் அல்லாவென 
   அழைக்க  உம்பெயர்  மாண்புறும் 

சிந்தனைக்   கெட்டா   வல்லோனே!
    சிலையை  வணங்கும் அறிவீனர்
முந்தைய   தலைமுறை சீர்கேடால் 
    முழுதும்   உம்மை மறந்தனரே!

உம்மையன்றி  இறை  வேறுண்டோ? 
    உன்னதத்தில்  உமக்கு  நிகருண்டோ?
இம்மையும்  மறுமையும்  படைத்து 
    இருப்பது  எல்லாம்  படைத்தவரே!

அம்மையும்  எங்கள்  அப்பனுமாகி 
    ஆயனும்   எங்கள்  அரசனுமாகி 
எம்மையும்   எம்முடை  யாரையும் 
     என்றும்   காக்கும்  ஏகதேவனே!

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...