வல்லவராம் ஆண்டவரில் எனதுளம்
வாஞ்சித்து மகிழும் நித்தமும்
நல்லவை யாவும் என்வாழ்வில்
நாளும் நிலைத்து நிற்கும்
அல்லவர் ஆயிரமென நின்றாலும்
அஞ்சிடேன் அவர் துணையிருக்க
இல்லமதில் இன்பமும் அமைதியும்
இறைவன் அருளால் நிலைத்திடும்
பொல்லா இம்மண்ணில் எங்கள்
பொறுமைக்கு நியாயம் சேர்ப்பார்
செல்லாக்காசு என்றென நானிருக்க
செல்லும் வழிதனில் சேதமுறேன்
நில்லாக்கொடை பேரருள் எனக்கு
நித்தம் அளிப்பவர் இறைவனே
எல்லாத் தலைமுறை இதுமுதலாய்
என்னைப் பேறுடையான் என்பர்
கல்லாதவர் கற்றவரென என்னில்
கடவுளின் திருவுளம் கண்டிடுவர்
எல்லாமுமான இறைவனில் தாமே
என்மனமும் உயிரும் களிக்கும்
வல்லமை எனக்குள் உடுத்தினார்
வருத்திடும் துயரை நீக்கினார்
அல்லலுற்று அழுத வேளையில்
அமைதியாய் என்னைச் சுமந்தார்
பல்லாயிரம் புகழ்தனைப் பாடினாலும்
படைத்தவர் கொடைக்கு தூசியே
வாஞ்சித்து மகிழும் நித்தமும்
நல்லவை யாவும் என்வாழ்வில்
நாளும் நிலைத்து நிற்கும்
அல்லவர் ஆயிரமென நின்றாலும்
அஞ்சிடேன் அவர் துணையிருக்க
இல்லமதில் இன்பமும் அமைதியும்
இறைவன் அருளால் நிலைத்திடும்
பொல்லா இம்மண்ணில் எங்கள்
பொறுமைக்கு நியாயம் சேர்ப்பார்
செல்லாக்காசு என்றென நானிருக்க
செல்லும் வழிதனில் சேதமுறேன்
நில்லாக்கொடை பேரருள் எனக்கு
நித்தம் அளிப்பவர் இறைவனே
எல்லாத் தலைமுறை இதுமுதலாய்
என்னைப் பேறுடையான் என்பர்
கல்லாதவர் கற்றவரென என்னில்
கடவுளின் திருவுளம் கண்டிடுவர்
எல்லாமுமான இறைவனில் தாமே
என்மனமும் உயிரும் களிக்கும்
வல்லமை எனக்குள் உடுத்தினார்
வருத்திடும் துயரை நீக்கினார்
அல்லலுற்று அழுத வேளையில்
அமைதியாய் என்னைச் சுமந்தார்
பல்லாயிரம் புகழ்தனைப் பாடினாலும்
படைத்தவர் கொடைக்கு தூசியே