வியாழன், 17 மார்ச், 2022

ஒரு (உரு) வாக்கிய கதை - கார்பொரேட் மேலாண்மை

அந்த கிராமத்தில் ஒரு கார்பொரேட் நிறுவனம் தொழிற்சாலை ஒன்றை தொடங்க, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத ஒரு விவசாயி தன் விவசாயத்தை கைவிட, வறுமையில் வாடிய அந்த விவசாயி தன் மனைவி,  இரு மகன்களுடன் பிழைப்புக்காக, அந்த மாநகரம் செல்ல, அங்கு அந்த விவசாயிக்கு அந்த கார்பொரேட் நிறுவன மேலாண் அதிகாரியின் மாளிகையில் தோட்டக்காரன் வேலையும் கிடைக்க, மாநகர குடிநீரை தோட்டத்தில் பாய்ச்சிய பின்,  மாளிகை முழுவதும் நீச்சல் குளத்திலும், சுற்றும் முற்றும் நிறைக்கும் வேலையில் மும்முரமாக பணிபுரிய, பள்ளிப்படிப்பு முடித்த விவசாயியின் இரு மகன்களும் ஒரு கார்பொரேட் வங்கியில் கடன் அட்டை பிரிவில் அழைப்பாளர்களாக சேர, அதே வங்கியில் பல கோடி கடன் வாங்கி தண்ணீர் காட்டும் அந்த மேலாண் அதிகாரியின் ஒரு முதுகலை பட்டம் பெற்ற மகன் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து இயற்கை விவசாயம் என்ற பெயரில் ஒரு சந்தைப்படுத்தலை தொடங்கினான். 

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...