திங்கள், 24 ஜனவரி, 2022

என்றும் அடிமைகள் என்றானோம் (தமிழ் கவிதை )

மண்ணென்று   மனிதர்   தாமெனவே 
       மயக்கி    மாருதம்   புனைய 
விண்ணென்று   என்மனம்  உம்மருளை 
       வியந்து    விழைந்து   நிற்கும் 

பண்ணென்று  பலநாள்   படைத்திடினும் 
     பற்றவில்லை  பற்றற்ற   பரமன்புகழ் 
கண்ணென்று   காக்கும்  இமையாகி 
     கருப்பையும்   சுமந்த   கர்த்தாவே!

தண்ணென்று    மனிதரைப்    படைக்க 
      தானென்று   தவறியவர்   வீழ்ந்திட 
புண்ணென்று    மனங்கள்    புலம்பிட 
      பூவுலகை    புதுப்பிக்க  வாராயோ?

பெண்ணென்று    பிழைதேடும் பேதையரும் 
      பொன்னென்று   திரிகின்ற   பேராசையும் 
மண்ணோன்றே    தம்முடன்   கலப்பதென 
      மறந்தறிவு    கெட்டழிந்து  நிற்கின்றார் 

திண்ணென்று   திடந்தோள்    திமிரிருக்க 
      திசைதோறும்   முகத்துதி   உடனிருக்க 
வீண்ணென்று   அறிந்தும்  வேந்தன் 
      விரும்பியதைத்    தேடும்  தேசமிது 

வெண்ணென்று   நூலிழைத்த   வேள்வியரும் 
      வெறுப்புணர்     விதைக்கும்  வீணர்களும் 
நாண்நின்று   நச்சுக்கணை   எய்திட 
      நாடோறும்   பகையும்   பழிப்பும்.

வண்ணமாய்   இங்குசாதி   வளர்ப்பார் 
      வன்மமாய்   வன்முறை  மூட்டுவார் 
திண்ணமாய்   தம்மினமே    மேலோங்க 
      தீயிடுவார்   பிறர்குலம்   கெட்டழிய 

எண்ணமெலாம்    சாதியும்  சமயமும் 
     எழுத்திலும்   வன்மமும்   வெறியும் 
கண்ணம்பல    வைத்தே    கபடுடன் 
     கடுஞ்செயல்   புரிந்திடும்  கயவர்கள் 

திக்கெல்லாம்    தீவினை    பரப்பி 
     திக்கற்றோரை   நீதியில்  ஒடுக்கி 
சாக்கெல்லாம்    தேசமென  புனைய 
     சகலரும்  ஏமாந்து  கெட்டார்.

மதமென   மயக்கும்   மருந்தினை 
      மனங்களில்  செலுத்தி  மதியிழந்து 
இதமென   இங்குள்ளோர்   இணங்கிட 
      இன்னாபல  செய்துகுடி  கெடுப்பார் 

காலமும்   காட்சியும்    கடந்திட 
     கண்டுகொள்ள  கடவுள்  எங்கேயென 
பலமும்    ஆட்சியும்   நமதென்றே 
      பல்வகை   கொடுமை  புரிகின்றார் 

எங்கும்   எதிலும்  பாகுபாடு 
     ஏனென்று   கேட்க  எவருமில்லை
மங்கும்   நீதியும்   அநீதிமுன் 
     மருட்டுவார்  காவலர்கள்  அதனோடு
 
பொய்யும்   புரட்டும்  புனைவும் 
     பொருந்தியே   இங்கு  கோலோச்ச 
மெய்யும்    மனமும்   நலிந்திட 
      மெல்லவே  சாகும்  நீதியாவும் 

சுதந்திரம்    நாங்கள்  கண்டதில்லை 
     சுரண்டுவோர்  அடிமை என்றானோம் 
சூதுதந்திரம்   எனச்சூழும்   சதிகாரர் 
     சூழலில்    யாமும்   நிர்கதியானோம் 

இனியும்    பொறுமை  உமக்குண்டோ?
      இறைவா    இதைநீர்   அறியீரோ ?
நுனியும்    நுகத்தால்   நைந்திடவே 
      நூலிழை    எம்மீது   தைத்தீரோ?

தணித்திடும்  வரம்பிலா  பொறுமைதனை 
     தண்டிக்க   விரைந்து   நீர்வாரும் 
அணிந்திடும்   வில்வாள்   ஈட்டியென 
     அடக்கிடும்  ஆதிக்க  அதர்மங்களை 

விரைந்து   வாரும்   பூவுலகில் 
    விடுதலை   எமக்கு  தந்திடவே 
கரைந்து    நாங்கள்   போகுமுன் 
    கனிவாய்   எம்மை  மீட்டருளும்.

இந்திய பிரதமர் நரேந்திர  மோடி ஆட்சியில் தங்கள் தனிப்பட்ட சுய வெறுப்பு,
ஆதிக்க மனநிலை, அரசியல் காழ்ப்புணர்ச்சியை, அரசியல் ஆதாயத்தை 
முன்னிட்டு, இந்திய மக்களிடையே சாதி, மத, இன, மொழி பிரிவினைகளை 
உண்டாக்கி வெறுப்பு பிரச்சாரம் தூண்டி விட்டு அதன் மூலம் தங்கள் ஆட்சி,
அதிகார பலத்தை  திடப்படுத்தி கொள்ளும் அருவெறுப்பான மனநிலை கொண்ட சாதிய, மத பிற்போக்குவாதிகளை எதிர்த்து 2022 ம் ஆண்டு ஜனவரி திங்கள் 
23ம் நாள் எழுதப்பட்ட கவிதை. குறிப்பாக மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழகத்தில் பாஜக என்ற கட்சியின் தலைவர் அண்ணாமலை, H. ராஜா, நாராயணன் திருப்பதி, S.R சேகர், அர்ஜுன் சம்பத் மற்றும் அவர்களோடு மத, இன துவேஷங்களை பரப்பிவிடும் வீணர்களுக்கு எதிரான கவிதை இது. 


வெள்ளி, 7 ஜனவரி, 2022

பொய்மையே வெல்லுமோ?

 அந்தஇனம்   கேடுகெட்ட  இனம்;
    அன்பை  அவர்கள்  விரும்பார்;
தந்திரம்  சூதுநிறைந்த  கூட்டம்;
    தள்ளிவிடும் பலரையும் குழியில்.
 
எங்கள்  மண்ணில் நுழைந்தனர்;
    எங்களோடு  உறவாடி  கெடுத்தனர்.
தங்கஇடம்  தந்தவரை  அவர்கள்,
    தயவின்றி  வீழ்த்தி  மிதித்தனர்.
 
நஞ்சுமிகு  பாம்பினும்  கொடிது
     பார்ப்பனர்  பேச்சும்  எண்ணமும்.
வஞ்சனையோடு எங்கள்  மக்களில்
     வன்முறை மூட்டி  விடுவார்.
 
வேறுசாதி முன்னேற  அனுமதியார்;
      வேறுபாடு  சாதிக்குள் வைத்தார்;
கூறுபோட்டு  எங்கள் மனிதருக்குள்
       குழப்பத்தை உண்டாக்கி  விட்டார்.
 
மேல்சாதி   இடைகீழ்ச்சாதி என்றே
     மெல்லவே  வகுப்புகள்  பிரித்து
காலில்   பிறந்தவர்   என்றே
      காலால்  சிலரை  மிதித்தனர்.
 
இடைசாதி    மக்களை  அவர்கள் 
     இடத்தை  விட்டகற்றி அங்கே
தடைபோட்டு  அதிகார  ஆட்சி
     தங்கள்  பக்கம்  இழுத்தனர்.
 
சாதியென்று  மக்களைப் பிரித்து
    சதித்திட்ட  சாசனம்  எழுதினர்.
ஆதிகுடியென  இருந்த  மக்களை
    ஆதிக்கத்தால் அடிமை படுத்தினர்.
 
சாதிகள்   ஒன்றானால்  அவர்கள்
    சதித்திட்டம்  ஒழிந்து  விடுமென
வீதிதோறும்  இடைகடை  சாதிக்குள்
     வீண்பிளவு   செய்தே  வருகின்றனர்
 
கல்வியிலும்  அவர்கள்  மட்டுமே;
    கருவூலமும் அவர்கள்  உடைமை.
சொல்வினை   யால்பலரை   வீழ்த்தி
     சொத்துபல  சுருட்டிக்  கொண்டார்.
 
கேள்வியென  கேட்டால்  நமக்கு
    கெடுதிபல  செய்து  அழிப்பார்.
வேள்வியென்ற  பெயரில்  பணம்
    வேண்டிய  மட்டும்  கறந்திடுவர்.
 
மதமென்பர்  இனமென்பர்  நம்மை
    மடையராக்கி   அவர்கள் மேலோங்க.
இதமாகப்பேசி  நம்மை ஈர்ப்பார்.
    இறுதியில் நம்மை  அழிப்பார்.
 
நாடென்பர்  நாட்டுப்பற்று  என்பர்;
     நம்மை  நாசமாக்க  நாலும்செய்வர்
ஏடென்றே   எழுத்தென்றே  நாமும்
    எழுச்சிபெற  பார்ப்பனர்  விடமாட்டார்
 
நலிந்தோரும்  கல்விபெற  நினைக்கும்
      நல்லோரை   நசுக்கு  என்பார்
வலிந்து  மதமென  கூட்டம்சேர்த்து
      வகைவகை  பொய்ப்பல  புனைவார்
 
அழிந்திடும்   நமது  மதமென்பார்
     அடுத்தவர்   குடியை  கெடுக்க.
எழுந்திடும்  அறியார்க்  கூட்டம் 
      ஏமாந்து  அவர்கள்  பின்னே.
 
சமயம்  பார்ப்பனருக்கு  பொருட்டல்ல
     சாதியை  காக்கும்  ஆயுதம்தான்
சமயம்  வரும்போது  மட்டுமே
     சாதிக்காக சமயம்  இழுப்பர்.
 
கேடானது  அவர்கள்  நோக்கம்
    கேள்விகேட்க   யாரும்  இல்லை
ஈடான  எவரும்  எமக்கில்லை
    இருப்பதில்  உயர்ந்தவர்  என்பர்
 
பணத்திற்கும்  விலை  போவார்
    பதவிக்கும்  விலை போவார்
பிணத்தைக்  காட்டி  மக்களில்
   பிரிவினை  வளர்ப்பார்  பார்ப்பனர்
 
ஆள்பவர்க்கு  முகத்துதி செய்வார்
     ஆதாயம் தேடகுழியும்  பறிப்பர்.
நாள்பலன்   தோஷம்  பரிகாரமென
      நாட்டிற்கும்  நாடி  பார்ப்பார்.
 
தான்வளர  தன்சாதி  வளர்ப்பார்
     தாழ்த்தியும்  பலசாதி  ஒடுக்குவர்
ஏன்வன்மம்  என்றேக்  கேட்டால்
     எந்தமதம்  நீயென்று  கேட்பார்
 
ஆட்சியிலும்  அவர்கள்  கொட்டம்;
    அதிகாரத்தில்  அவர்கள்  ஆட்டம்;
கட்சிகளிலும்  அவர்கள்  உயர்பதவி
    கல்வியிலும் மேதாவி  என்பார்
 
எங்கும்   எதிலுமே  அவர்கள்தான்
    எட்டுத்திசை  விரிந்து  கிடக்க
மங்கும்  சமத்துவம்   எங்கும்;
    மதிகெட்டவர்  அவர்கள்  பக்கம்
 
 ஊடகத்திலும்  ஊடுருவி  இருக்க
     உண்மையை அழித்து  ஒழிக்க
பாடத்திலும்  பார்ப்பனன்  என்றே
     பாகுபாடு   இங்கு  வைத்திட்டார்
 
நீதித்துறை  நிதித்துறை முழுதும் 
    நீண்டிருக்கும்  அவர்கள் உச்சம்
அநீதிசெய்ய  அத்தனை  செய்வார்
    அடக்குமுறை  கையில் எடுப்பார்
 
பார்ப்பனீயம்  இங்கே  பரப்பிட
    பார்ப்பனர்  எங்கும்  உயர்ந்திட
சர்ப்பம்போல்  விடத்தைக் கக்கி
  சமூகத்தில் அமைதி கெடுப்பார்
   
தம்கொள்கை கல்வியில்  புகுத்திட
    தடையாய் நிற்கும்  யாவரையும்
அம்பெய்து   மதமெனும்  அம்பெய்து
    அக்கிரமம்  செய்து  கெடுப்பார்
 
பொய்களைப்  புனைந்து  கட்டி
     பொல்லாப்பு  புரட்டு  புரளியென
வாய்களை வாளாக்கும்  கொடிய
     வன்மம்  நிறைந்த  வெறிகூட்டம்
 
எங்கேயோ   இருந்து  ஒருவன்
    எப்படியோ பணமீட்ட  உயிர்பல
இங்கே  போனாலும் ஆலைதிறக்க
     இத்தனை  செய்யும் பார்ப்பனர்கள்.
 
கேடுகெட்ட  நீதிபதியே  உந்தன்
     கெட்டபுத்தி  அழிந்து  ஒழியட்டும்
ஆடுகேட்ட   அநீதியுடன்  உந்தன்
      ஆதிக்க  சாதியத்தை  நுழைத்தாயே
 
கெட்டவனே எத்தனைநாள் வன்மமிது;
     கொடும்விடம்  உன்னுடல்  முழுதும்;
சட்டமுன்   கையில்  இருப்பதனால்
      சதித்திட்டம்  நீயும்  வகுப்பாயோ?
 
மனிதத்துடன்  ஊழியம்  செய்யும்
     மனிதரின்  கண்ணீர்  வீழும்போது
புனிதரும்  அஞ்சுவார்  பூமியிலே
     புண்ணியம்  பிறர்க்கு செய்திட.
 
அக்கிரமமென்று  நானும்  புலம்ப
     அநீதியென்று  நாடும்  நிரம்ப
வக்கிரகாரம் வளைத்து  நெருக்க
     வதங்கியது  நீதியும்  இங்கே.

விலைக்கு போனது  நீமட்டுமல்ல 
     விற்று  விட்டாய்  நீதியைசேர்த்து 
ஆலைக்கு  அடிகரும்பாய்  எம்மையும் 
      ஆக்கநீயும் எவ்வளவு துடித்தாய்!

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...