வெய்யருள் வெய்யன் யான்
வேண்டி உமைக் கேட்பேன்
மெய்யருள் எனக்கு ஈந்தேநின்
மேன்மையைக் காண வேண்டும்
வேண்டி உமைக் கேட்பேன்
மெய்யருள் எனக்கு ஈந்தேநின்
மேன்மையைக் காண வேண்டும்
அணைத்துக் காக்கும் நேயனே !
பெய்யதூம் உன்னருள் மழையில்
பேரின்பம் கொள்ளச் செய்யும்
அனைத்துமாய் எனக்கு நீரே !
உய்வதும் நான் உயர்வதும்
உந்தன் அருளினால் அன்றோ !
ஓயாது உம்புகழ் ஒலிக்கனும்
மேய்ச்சலில் எனை இளைப்பாற்றும்
மேய்ப்பனின் துணை வேண்டும்
சேயனுக்குக் கரம் நீட்டும்
வாய்மொழியும் சிந்தனை யாவும்
வல்லவர் நின்வழி நடக்கட்டும்
எம்மைக் காக்க வேண்டும்
நோய்நொடி தீண்டாது எம்மை
நிந்தன் சிறகால் மூடும்
பகையும் பிணியும் நீக்கி
மாய்ந்து மனிதர் வீழலிலும்
மறைத்து எம்மைக் காப்பீர்
கொடிய உள்வாதை பிணியும்
பொய்புரட்டு பழிப்பு குற்றமென
பொருந்தா யாவும் விலக்கிடும்
தளர்வுறும் வேளை தாங்கிடும்
வாய்மை தூய்மை எம்மை
வழுவாது நித்தம் காத்திடும்
தெவிட்டா அருள் வேண்டும்
தொய்விலா நன்றியை நாங்கள்
தொடர்ந்து செலுத்த வேண்டும்
பெய்யும் மழையென உந்தன்
பேரருள் பொழிய வேண்டும்
மெய்யும் மனமும் உந்தன்
மாண்பைப் போற்ற வேண்டும்
துய்யநின் அன்பில் என்றும்
துய்ப்பு கொளல் வேண்டும்
மாய்ந்தும் உம்திரு நிழலில்
மகிழ்ந்து களிக்க வேண்டும்
மாய்ந்தும் உம்திரு நிழலில்
மகிழ்ந்து களிக்க வேண்டும்
