ஒரு ஊரில் இருந்த மூன்று விதமான குடும்பங்களைப் பற்றிய கதை இது.
முதல் குடும்பம் தந்தை, மகன்கள் என மூவர் சம்பாதிக்கும் குடும்பம். செல்வம், பொன், பொருள், வீடு, நிலபுலம் என சொத்து சேர்ப்பதில் குறியாய் இருந்தார்கள். பிறருக்கு தானம் செய்வது என்னவென்றே தெரியாதவர்கள். கிடைப்பது இலவசம் என்றால் அதை எவ்வளவுக்கு அனுபவிக்க முடியுமோ அனுபவிப்பார்கள்.
இரண்டாவது குடும்பம். ஆடம்பர குடும்பம். குடும்பமே, பலரை ஏமாற்றி கடன் வாங்கி, வங்கியிலும் கடன் வாங்கி ஏமாற்றி சொத்துக்களை பினாமி பெயரில் வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒரு திருட்டு குடும்பம் பிறரை ஏமாற்றி வாழ்ந்து பொய்யான பக்தியில் வாழ்ந்த துரோக குடும்பம்.
மூன்றாவது குடும்பம். நேர்மையாக அரசு வேலையில் பணியாற்றி ஓய்வு பெற்று, பிள்ளைகளை கட்டி கொடுத்து யாதொரு ஆதரவின்றி, பிறரிடம் கடன் கேட்காமல் கைக்கும் வாய்க்கும் என வாழ்க்கை நடத்துகின்ற ஒரு வயதான தம்பதிகள். இதில் இருவரும் நோயில் கூட வருந்தினார்கள். ஆனாலும் பிறர் பணத்தின் மீது சிறிது கூட விருப்பம் கொள்ளாதவர்கள்.
இந்த நிலையில் அந்த ஊரில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் குடும்பம் சேர்த்த சொத்து யாவும் வீணாய் போனதே என்ற ஏக்கத்தோடு சாகும் போதே சொத்து நினைப்போடு செத்து போனார்கள். நிறைவு பெறாத ஆன்மாக்களாய் சுற்றுகிறார்கள்.
இரண்டாவது குடும்பம். நிலநடுக்கத்தில் சிக்கி வதைபட்டு உடல் சின்னா பின்னமாகி வேதனைப்பட்டு இறந்த பின் நேராக நரக நெருப்பிற்குத் தள்ளப்பட்டார்கள்.அவர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை யாரோ அனுபவித்தார்கள்.
மூன்றாவது குடும்பம். இழப்பதற்கு ஏதுமின்றி அமைதியாய் மரித்து இறைவனின் திருமுன்னிலையில் விண்ணுலக பேற்றினை அடைந்தார்கள்.
"வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.
8 வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.
9 எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்." (நீதிமொழிகள் 30:7-9)
"வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது; “அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்”. (சபை உரையாளர் 7:14)
"பொன்னை விரும்புவோர் நீதியைக் கடைப்பிடியார் மேன்மையை நாடுவோர் அதனாலேயே நெறி பிறழ்வர்.
6 பொன்னை முன்னிட்டப் பலர் அழிவுக்கு ஆளாயினர்; அவர்கள் அழிவை நேரில் எதிர்க்கொண்டனர்." (சீராக் 31:5-6)