வியாழன், 18 ஆகஸ்ட், 2022

மாக்களாகும் மக்கள் இவர்கள்

ஒன்றும் புரியவில்லை எனக்கு 
    ஒருவழி  சொல்லும் இறைவா
என்றும்  எனைநீர்  மறப்பீரோ!
    ஏதுமக்கு  இத்தனை கோபம்?
 
மனிதரை  நம்பியே   நானும்
    மதியிழந்து போனேனா? -  நீரும்
ஏனிதனை என்மேல் சுமத்தி
    ஏங்கும்  வண்ணம்  கைவிட்டீர்?
 
வாழ்க்கை  எனக்குப்  புரியவில்லை
    வாழும்   வழியும்  தெரியவில்லை
சீழ்க்கை  ஒலியெழுப்ப  யானும்
     சிலை   ஒன்றை வார்க்கவில்லை
 
தனித்து  நிற்கிறேன்  நானிங்கு
    தாங்குவார் எவரும் இன்றி
மௌனித்து  மறந்துநீர்  போக
     மெல்ல  சோர்ந்து வீழ்ந்தேன்
 
உம்மைத்தான் எண்ணித்தான் உருகத்தான்
     உலகிலெனை  வைத்தீரோ நீரும் ?
இம்மைத்தான் இறங்கித்தான்  என்னைத்தான்
      இணங்கித்தான் ஏற்பீரே  வாரும் !
 
மண்ணைத்தான் பொன்னைதான்  பெண்ணைத்தான்
     மயங்கிகண்டு  வாழ்ந்தேனோ  இங்கு ?
விண்ணைத்தான் விரித்துத்தான்  விந்தைத்தான்
     வினையாற்றி இருப்பீரோ  அங்கு !
     
அருளைத்தான் ஆக்கத்தான்
இருளைத்தான் போக்கத்தான்
பொருளைத்தான் புதைத்துத்தான்
மருளைத்தான் மிதித்துத்தான்
உருகியுமைத்  தேடினேன் நானும் !
அருகியெனை அணைக்க வாரும் !
 
பட்டம்தான்  பதவித்தான்
சட்டம்தான்  சதியும்தான்
திட்டம்தான்  தீங்கும்தான்
ஆட்டம்தான்  ஆதிக்கம்தான்
கொட்டம்தான் கொடுமைதான் - என
வட்டம்போடும் வல்லூறுபோல் மனிதரும்
வேட்டையாடி திரிவதை காண்கிறேன்
 
அரிகளும்  நரிகளும்  வேட்டையாட
    அரவமும்  வராகமும்  ஆட்டமாட
கரிகளும்  பரிகளும்  பங்குபோட
    காடானது  நாடும் வீடும்கூட
 
நாய்களும் பேய்களும்  நாட்டாமை
     நீதியும் நியாயமும்  எட்டாமை
வாய்களும்  பொய்களும்  ஆள்கையில்
     வாய்மைக்கு இங்கு  வாழ்வுண்டோ?
 
தன்னலம் தாண்டவமாட  பலரும்
    தனக்கென்றே  வாழ  நினைக்க
அன்னமென்று வாழ்ந்த  நாட்டில்
    ஆடம்பரம்  ஆளுகை  கொண்டது
 
தன்பசிக்கு வேறோர்  பலரின்
   தசையும் உண்ணும் மாக்கள்
இன்பத்தைத் தேடும் வேட்டையில்
   இன்னும் பலரை அழிப்பார்
 
மனிதத்தை இழந்த மாக்களிவர்
    மிருகத்தினும்  கொடுந் குணத்தார்
ஏனிதனை  செய்தீரேனக் கேட்டால்
     எட்டி  நம்நெஞ்சில் மிதிப்பார்
 
மற்றவனும் பார்த்துக் கெடுவான்
     மொத்தமும் இங்கே கேடானது
உற்றவரையும் சேர்த்துக் கெடுக்கும்
     ஊழல் இங்குதான் வளர்கிறது 


புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...