வியாழன், 3 பிப்ரவரி, 2022

மதமாற்றமும் இந்திய அரசியலும் (பாகம் 4)

 ஏற்கனவே நான் முதல் பாகத்தில் சொன்னபடி, கி.மு.1178 முதல் கி.மு.650 வரை மத்திய ஆசியாவில்  இருந்து கால்நடைகளோடு சிந்து சமவெளி பகுதியில் ஆக்கிரமித்த ஆரியர்கள், அங்கிருந்த ஆதிகுடிகளை தங்கள் தந்திரங்களால் வென்று, விரட்டிவிட்டு,  அடிமைப்படுத்தி அந்த சிந்து சமவெளிப்பகுதிகளை கைப்பற்றினர்.  எனவே அந்த பகுதிக்கு ஹிந்து அதாவது (சமஸ்கிருதத்தில் சிந்து )  "அடிமைப்பட்டது" என்று பெயர் சூட்டினர்.  கிமு.5ம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் (ஹெரோடோடஸ் அதனை "இந்தோஸ்" என்றும் ரோமானியர்கள் அதனை "இந்துஸ்" என்றும் தங்கள் வரலாற்றுக் குறிப்புகளில் எழுதியுள்ளனர்.  கிமு.5ம் நூற்றாண்டில் பெர்சியாவை ஆண்ட அஹசூரஸ் காலத்து வரலாற்று குறிப்பில் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் "ய்திய" என்று அந்த பகுதியை குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, இந்து அல்லது இந்தியா என்ற பதமே சிந்து பகுதியை வைத்தே குறிப்பிடப்பட்டுள்ளது.  லுக்ஹ்ட்-இ-கிஸ்வாரி என்ற பெர்சிய அகராதியில் "ஹிந்து" என்ற  சொல்லுக்கு திருடன், கொள்ளைக்காரன், அடிமை என்று வைத்திருந்தனர். எனவே, இங்கு ஆக்கிரமித்த ஆரியர்கள் ஏற்கனவே இருந்த பூர்வகுடிகளை  அவ்வாறே அழைத்தனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கி.பி. 1649 இல் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் பயணம் செய்த மேலைநாட்டு கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர் செபாஸ்டியோ மண்ரிக் என்பவர் இப்போது உள்ள இந்திய துணைக்கண்டத்தில் உள்ள இஸ்லாமியர் அல்லாத அனைவரையும்  (ஆதிசமயம், திராவிட சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம், மூதாதை வழிபாடு,இயற்கை  வழிபாடு) "இந்துக்கள்" என்றே அழைத்துள்ளார். பின்பு கி.பி. 1750க்கு பிறகு இந்த பகுதியை வசப்படுத்திய ஆங்கிலேய ஆதிக்கத்தில், மேற்கு வங்காளத்தில் கோல்கத்தாவில் உச்சநீதிமன்றத்தில் இருந்த தலைமை நீதிபதி சர். ஜோன்ஸ் வில்லியம்ஸ் என்பவர் நிர்வாக வசதிக்காக வர்ணாஸ்ரம தர்மத்தை கொண்ட பிராமண மதத்தை தலைமையாகக் கொண்டு
இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லாத அத்தனை மதங்களையும் "இந்துமதம்" என்று சட்டம் எழுதி அரசு சாசனத்தில் ஏற்றி எழுதிவிட்டார். அந்த காலக்கட்டத்தில் ஆங்கிலேயரின் தலைநகரமாக கொல்கத்தா
இருந்து வந்தது. அங்குள்ள பார்ப்பனர்களின் தவறான செய்திகளை நம்பி
ஜோன்ஸ் வில்லியம்ஸ் இதை செய்தார். இன்றுவரை அது நமது அரசியல் சாசனங்களில், சட்டங்களில் நிலைபெற்றுள்ளது.  ஆனால் ஜோன்ஸ் வில்லியம்ஸுக்கு முன்பாக அதுவரை இந்தப் பகுதியில் "இந்துமதம்" என்று எந்த ஒரு சொல்லாடலும் எந்த ஒரு வரலாற்றுக் குறிப்பிலோ, இலக்கியங்களிலோ இடம்பெறவில்லை. 

Ref: https://advatic.blogspot.com/2018/04/the-name-hinduism-is-coined-by-sir.html#.Yft-wtLhVNA            https://www.hinduismfacts.org/sects-of-hinduism/
 
 
இந்துமதம் என்ற மதத்திற்குள் அடங்கும் சமயங்கள்
 
 ஆரிய மற்றும் ஆரிய,திராவிட கலப்பு மதங்கள்
 
த்வைதம்  -  எல்லாமே சூனியம், பூஜ்யம், மாயை
அத்வைதம்  -   அனந்தமாக இருக்கிற பிரம்மம் ஒன்றே சத்தியம்
 
சுத்த ஆரிய மதம்  -  பார்ப்பனியம் (Brahminism) அல்லது சனாதனம்                                    
 
சைவம்   -  சித்தாந்த சைவம், வீரசைவம், லிங்காயத்துவம், நாத
                                சம்பிரதாயம், காஷ்மீரி சைவம், த்ரிகா சைவம், பாசுபத
                               சைவம்,அகோர சம்பிரதாயம்,  சித்த சைவம், கங்காளம்,
                              காளாமுகம், மாவிரதம், சோமம், இலாகுடம், வாதுளம்,
                              இலாஞ்சனம் , வாமம், வைரவம், காபாலம், காபாலிகம்,
              காலானனம்,சிவ சாசனம்,  பாடாணவாதம், பேதவாதம்,              
                            சிவசமவாதம்,  சிவசங்கிராந்தம், ஈசுவர அவிகாரம்,
                           சிவாத்துவிதம், லாகுலிகம், சோமசித்தாந்தம், மிஸ்ரம்,
                           சிரௌத்த சைவம், ஐக்கியவாத சைவம்.
   
 
வைணவம்  - கயூடிய வைணவம், மணிப்புரி வைணவம், நிம்பர்க்க
                                  சம்பிரதாயம், ஸ்ரீ வைணவ சம்பிரதாயம், ருத்ர சம்பிரதாயம்,
                                 வார்க்காரி சம்பிரதாயம், ராமணாண்டி (தெலுகு) சம்பிரதாயம்,
                                ஒடியா வைணவம், மஹாநுபாவ சம்பிரதாயம்,  சஹாஜியா
                                பஹுல் சம்பிரதாயம், ஏகசரண தர்மம், ராதா வல்லப
                               சம்பிரதாயம், பிரணாமி சம்பிரதாயம், ஸ்வாமிநாராயண
            சம்பிரதாயம், ராமஸ்நேஹி சம்பிரதாயம், ஹரிதாஸப்பிரிவு,
            புஷ்டிமார்க்கப்பிரிவு, சக்தித்துவம், ஸ்மார்த்தம், ஹரிஹரப்பிரிவு,
                         
இதர மதங்கள் :  சாக்தம், காணபத்தியம்,  கௌமாரம், சௌரம்
 
சமணம்    -  ஆரிய மதத்தை எதிர்த்து கி.மு.599-527 இல் மஹாவீரரால்
              தனிமதமாக தோற்றுவிக்கப்பட்டது.
 
பௌத்தம்  -  கி.மு. 563–483 இல் சித்தார்த்த கவுதம புத்தரால் தனிமதமாக
              உருவானது. 
 
சீக்கியம்     -  கி.பி. 15ம் நூற்றாண்டில் ஒருபிரிவினரால் பின்பற்றப்பட்டு
                             கி.பி 18ம் நூற்றாண்டில் (1748-1799) குருநானக் என்பவரால்
              மதமாக தோற்றுவிக்கப்பட்டது. ஒரே கடவுள்
                                  கொள்கையையும், குருவணக்க  முறைகளையும்    
                                  பின்பற்றுகிறது.
 
சுத்த திராவிட மதங்கள்:  நாட்டார் தெய்வ (சிறுதெய்வ) மதம், மூதாதை
                                        வழிபாடு, இயற்கை வழிபாடு, சூரிய வழிபாடு,  
                                வெறியாட்டம், நடுக்கல், தெய்யம், கொற்றவை வழிபாடு,
                               சாந்த கற்பகம், சங்க விரூபம், சத்துவம்
 
மதமற்ற சமயங்கள்: வள்ளலாரின் "ஜோதிவழிபாடு"   -  ஒரே இறைவன் -
                 அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை
                அய்யாவு வைகுண்டரின்   "அய்யாவழி"
                 நாராயணகுருவின்  "ஏகமதம்" - ஓர் இனம், ஒரே       
                                           இறைவன், ஒரே மனிதம்
 
பார்ப்பனிய சமயங்களில் சிலர் உருவ வழிபாட்டை அனுமதிப்பதில்லை
மாறாக ஒருவனே இறைவன் என்ற  "பிரம்ம" (பரம்பொருள்) வழிபாட்டோடு துறவிகள் வணக்க வழிபாடும் பின்பற்றுகின்றனர். சில பார்ப்பன மதங்கள் பிராமணர்களே கடவுள்கள் என்றும் வலியுறுத்துகின்றன.
அஹம், பிரம்மம் என்றே குறிப்பிடுகின்றனர். ப்ராஹ்மணர் அல்லாதவர் அனைவரும் "சூத்திரர்கள்".

இன்று நீங்கள் கோடிக்கணக்கான மக்களுடன் இந்து மதத்திலிருந்து ஒரு தனிமதம் பிரித்தாலும் இந்திய அரசியல் சாசனம் உங்களை தனிமதமாக அங்கீகரிக்காது. இந்திய அரசியல் சாசனப்படி இஸ்லாமியர், கிறிஸ்தவர் அல்லாதவர் அனைவரும் (நாத்திகர்களும், மதமற்றவர்களும் கூட) இந்துக்களே. தாங்கள் மட்டுமே ஆளவேண்டும் என்று கி.பி. 1764ல் ஆங்கிலேயர் காலத்திலேயே பார்ப்பனர்கள் செய்த மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி; சதித்திட்டம். இந்த ஒரு சாசனம் தான் இன்றுவரை மாற்றப்படாமல் உள்ளது. அவர்களே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பதனால் இதை மாற்றவும் விடமாட்டார்கள். மக்கள் மதம் மாறினால் எங்கே தங்கள் ஆளுகைக்கு பிரச்னை வந்துவிடுமோ என்றுதான் அவர்கள் "மதமாற்றம்" என்று கூச்சல் போடுகிறார்கள்.


Sir. Jones Williams -   Chief Justice of India - Kolkata -  1764 


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...