புதன், 17 பிப்ரவரி, 2021

யாவும் உமக்கு அர்ப்பணம் (தமிழ் கவிதை)

கற்றறிவும்  கவிமொழியும்  நயம்பட 
   காவியம்   படைத்திடுவேன்   இறைவா 
நற்றமிழால்   நாவும்    உரைக்கும் 
   நன்றிபல    என்றே   இறைவா 
முத்தமிழும்   முழுமை   பெறும் 
   முதலோன்   புகழினை  இயம்ப 
வித்தகமாய்    உம்கரம்   ஆற்றும் 
   விந்தைதனை   நாளும்  இசைப்பேன் 
இதழ்    விரிக்கும்   புன்னகை 
     இறைவன்   தாளடி   அர்ப்பணம் 
முதல்   முழுதென்றே   என்னில் 
     முக்கியப்    பங்கே  சமர்ப்பணம் 
எண்ணம்   எழுத்தும்   நல்வாக்கும் 
    என்னில்   தோன்றும்   நல்லறிவும் 
வண்ணம்   காணும்   இருவிழியும் 
    வாழ்த்தி   உமக்கு   அர்ப்பணம் 
யாதுக்கும்   பணியா   என்சிரசும் 
    யாதென்று   கேளும்   என்செவியும் 
தீதுக்கும்   அறியா    நல்மனமும் 
    தீர்க்கமாய்   இறைவனுக்கு  சமர்ப்பணம் 
இதுவரை  ஒலிக்கும்   என்மூச்சும் 
   இன்னா   நீங்கிய   என்பேச்சும் 
முதுமைத்   தொடரும்   முதுகுவரையும் 
   மெய்யோன்   உமக்கு  அர்ப்பணம் 
நேர்மையைத்   தாங்கும்   நெஞ்சுருவும் 
    நீண்டு    வளர்ந்த   என்கரமும்
மார்பினை  அணைந்த   இதயத்துடிப்பும் 
    மாட்சிமிகு இறைவனுக்கு  சமர்ப்பணம் 

புதன், 3 பிப்ரவரி, 2021

என்றும் உம்மோடு இறைவா ! (தமிழ் கவிதை)

வெறுமையில்   நிறைவு படைத்து 
வெளிச்சத்தை   இருளில்  கொடுத்து 
சிறுமையில்    மேன்மை  அளிக்கும் 
சிந்தை   ஆளும்   வேந்தனே !

நுண்ணணுவில்   என்னுடல்   படைத்தீர் 
நூதனமாய்   உயிருருவு   கொடுத்தீர் 
எண்ணமில்லா   தடையும்   தாண்டி 
என்னைஇங்கு   பிறக்க   வைத்தீர் 

கருவினில்  சிதைந்து   இருப்பேன் 
கருத்தாய்    எனைக்  காத்தீர் 
மறுவியும் ஊனுடல்   குன்றாது 
மருந்தாய்    விடத்தை முறித்தீர் 

பிறக்கும் முன்னே  தெரிந்தீரே 
பிறப்பின் தனிலும் நீர்காத்தீர் 
இறக்கும் வரையிலும்   உம்கருணை 
இயன்றமட்டும்   நான்   பெறுவேன் 

அரும்பென   மலரச்  செய்தீர் 
அழகுருவம்    தந்தீர்   எனக்கு 
துரும்பென    இருந்த  என்னை 
துலங்கிடச்   செய்து   மகிழ்ந்தீர் 

விந்தையாய்   எனைநீர்  படைத்தீர் 
வியத்தகு   செயல்பல   செய்தீர் 
கந்தையில்  கிடந்த   என்னில் 
கழிவிரக்கம்   நீரும்  கொண்டீர் 

ஏழையாய்  எளியவனாய்  இருந்தும் 
எனையேற்றித்   தூக்கி   விட்டீர் 
கோழையாய்    இருந்த   என்னில் 
கொழித்த    ஞானம்   அருளினீர்
 
துன்பத்தில்   துவண்ட  போதும் 
தூக்கமின்றி   சளைத்த  போதும் 
அன்பனின்    உள்ளம்   கண்டு
அரவணைத்து  தேற்ற  வந்தீர்
 
அச்சமும்  அழுத்தமும்  வருத்த 
அவசரமும்  ஆத்திரமும் வதைக்க 
உச்சமாய்    உணர்ச்சி  மேலோங்க 
உடைந்து   போனது  என்னுள்ளம்
 
உடைந்த   என்மனதை  மீண்டும் 
உயிர்பெற   செய்தவர்    நீரே 
கடைந்து   எடுக்கும்  கவலையில் 
கரம்கொடுத்து  நீரும்  உதவினீர் 

ஆதரவுதர   யாரும்  உண்டோவென்றே 
அழுதும்  புலம்பியும்    அரற்றிட 
கதறலும்   எவரும்  கேட்டிடாநிலையில் 
கடவுள்நீர்   தாமே  தேற்றினீர் 

இனியும்    வாழ்வில்  உம்மையன்றி 
இதரத்துணை   நான்   அறிவேனோ!
கனியும்   உன்கருணை   ஒன்றில் 
களித்திருப்பேன்   இறுதி  மட்டும். 




புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...