ஞாயிறு, 14 மார்ச், 2021

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்  கைவினை  யாதும்   மாசின்றி
எல்லோர்   நயம் படும்
 
பொருள்:  எல்லாம் வல்லவனாகிய  இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாமும் குறைவின்றி எல்லோருக்கும்  நன்மை பயக்கும்
 
Meaning:   Everything in nature that is the handiwork of Almighty God will benefit
                    everyone without defects.
                                         
                                                #########################
 
 
உணவென்ப   உயிரென்ப   உயர்வென்ப  யாதும்
உள்ளதாம்  இயற்கை   உடைத்து
 
பொருள்:  மனிதரின் உயிர், உணவு மற்றும்  முன்னேற்றம்  யாவும் இயற்கை என்னும் ஒரு ஆற்றலினால் மட்டுமே சாத்தியம்.
 
Meaning:   Human life, food and progress are only possible through an energy called nature.
             
                                          ###########################
                              
 
மாசறு   காற்றும்   அஃகுதிலா  நீருணவும்
மாந்தர்க்கு  அரிய   கொடை.
 
பொருள்:  தூய்மையான  காற்றும்  தீது குறையில்லா  நீரும் உணவுகளும் மனிதர்களுக்கு  ஒரு அரியதான  கொடை
 
Meaning:   Pure air, clean water, and good food are a rare gift to humans
 
                                         ############################
 
 
அனைத்துயிரும்  போற்றல்  புவியின் நோக்கம்
அஃதில்   மாந்தர்தனி  யன்று.
 
பொருள்:  எல்லா உயிரையும்  பேணிக்காப்பது என்பது இந்த பூமியின்
படைப்பிற்கான காரணம். அதில் மனிதன் மட்டுமே  வாழ்வதெற்கென்று எதுவும் இல்லை
 
Meaning:  The purpose of this World and nature is to preserve, protect  all lives on this earth.
There is nothing in it for man to live alone
                                         ############################
செயற்கை  யிலாயிரம் செல்வம்  சேரினும்
இயற்கையின் மேன்மை இல.
 
பொருள்:  செயற்கையாய் பலபொருட்களை உண்டாக்கிய செல்வம் ஆயிரமாயிரம் நம்மிடம் குவிந்து கிடந்தாலும் அவையெல்லாம்  இயற்கையின் சிறப்புக்கு ஈடாகாது 
 
Meaning:  Even though thousands of artificially created objects have accumulated of us,  they do not match the beauty of nature
 
                                       ############################
 
தீயவர்க்கும்   ஆக்கம்   ஈட்டும்  வையம்
யாவர்க்கும்  வைத்தல்  பொது.
 
பொருள்:  பொல்லாதவர்களுக்கும்  நனமையே தரும் இந்த பூமி தன்னை எல்லோருக்கும் பொதுவாய் வைத்திருக்கின்றது. அதன் வளமையும் செல்வமும் எல்லோருக்கும் சேர வேண்டும்
 
Meaning:  This earth, which is giving benefits even for the wicked, has itself in common with all. Its richness and wealth should join everyone
 
                                   ##############################
 
பசும்பொழில் தாலாட்டும் தாயின் மடியை
பகட்டினில்  சிரைத்தல்  கொடிது
 
பொருள்:  பசுமை எழில்  கொஞ்சும்  இயற்கை எனும் தாயின் மடியை பகட்டு எனும் ஆயுதத்தால் வெட்டுவது கொடுமையானது
 
Meaning:  It is cruel to cut the Mother Nature’s lap cherishing greenery
                   with a weapon of greediness for  luxury
 
                                 ##############################
 
மேட்டிமை   நோக்கில் மாசுறுத்தி  வையம்
கேட்டினைக்  காணுதல்  மடமை
 
பொருள்:  செல்வம் பெருக்கும்  ஆதிக்க எண்ணத்தில் பல்வேறு மாசுபாடுகளால் இந்த உலகத்தைக் தீமைக்குள் தள்ளுவது சிறுமைத்தனமும் முட்டாள்தனமுமாகும்
 
Meaning:   It is petty and foolish to plunge this world into evil by various pollutions in the pursuit of wealth.
                              ###############################
மண்நீர்    நீரூபம் காற்றும்  மாசுற
மாந்தர்  குணமாசே  மூலம்.
 
பொருள்:  இந்த உலகில் நிலமும், நீரும், சுற்றுசூழலும்  மாசுபட, மனிதரிடத்தில் உள்ள பேராசை, போட்டிமனப்பான்மை என்னும் குணக்கேடுகளே முதற்காரணமாக இருப்பது.
 
Meaning:  Pollution of land, water and environment in this world is due to the pollution in human minds such as greediness and competition in human beings.
 
                                   ###########################
 
அற்றம்  அவாவெனும்   மாந்தர்  குற்றத்தில்
ஆண்டும்   அலறெனக்   கெடும்.
 
பொருள்:  அழித்தல், பேராசை என்கின்ற  மனிதருடைய  தீதான குற்றங்கள் விண்ணுலகையும் நரகமாக கெடுத்துவிடும்.
 
Meaning:  Man's evil deeds like destruction and greediness will spoil even the heavens to hell
He is changing the beautiful world as hell.
 
                                 ##############################
 
போற்றல் என்ப  பொறுத்தக்க  நிலமும்
சீற்றத்தில்  வாரிக்  கொளல்.
 
பொருள்:   காத்தல்  பொறுமை என்னும்  சிறந்த  குணங்களை இந்த பூவுலகம் கொண்டிருந்தாலும் மனிதரின் தீமையால் அதற்கு உண்டாகும் பெருங்கோபம் மனித உயிர்களையும்  வாரிக் கொண்டுபோகும்
 
Meaning:  Although this world has the best qualities of protecting and patience, the rage caused by human evil will take over human lives as well.
 
                               ################################
 
குணத்தின்கண்   குற்றம்  பெருக்கின் ஆவிநீங்கி
பிணத்திற்குப்    பூவுலகு   ஒப்ப.
 
பொருள்:  தன்னுடைய இயற்கை நிலையில்  இருந்து மாறுபட்டு மனிதரால் இந்த உலகு மாசுபடுமானால் அது உயிரை இழந்த பிணத்திற்குச்  சமமாகும்
 
Meaning:  If this world is polluted by man in a way that is different from its natural state, it is equivalent to a corpse that has lost its life.
                                   ###############################
இருத்தலையும்   இப்போதே  கொள்ளல்  இனிவரும்
ஒருத்தலையும்   அடையும்  தீங்கு.
 
பொருள்:  இருப்பதையெல்லாம், கிடைப்பதையெல்லாம் இப்பொழுதே அனுபவித்து விடவேண்டும் என்ற மனிதரின் போக்கு  இனிவரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் தீங்கை கொண்டு வரும்.
 
Meaning:  Man's tendency to enjoy all that available now and all that what he sees,  will bring harm to every future generation.
 
                                                 ###########################
 
எழுதலை  செல்வம்  சேர்குற்றம்  ஆங்கே
எழில்  பசுமை  கெடுத்து
 
பொருள்:  அழகான  பசுமையும் இயற்கையும் அழித்து  தன்னுடைய  பல தலைமுறைகளுக்கு செல்வம்  சேர்க்கும்  மக்கள் இந்த உலகில் பாவத்தையும் தீங்கையும் சேர்க்கின்றனர்
 
Meaning:  People who destroy the beautiful greenery and nature for adding wealth to their many generations are adding sins and evils to this world
 
                                                      ###########################
 
பருவமும்  பசுமையும்  கெடும்  உலகின்
உருவம்  கெடுத்து  விடின்.
 
பொருள்:  இந்த உலகின் இயற்கையான உருவத்தை மனிதன் மாற்றி அழிக்க முற்பட்டால், பருவக்காலங்களும் , பசுமை வளங்களும்  சீரழிந்து கெட்டு விடும்.
 
Meaning:  If man seeks to destroy the natural appearance of this world, the seasons and green resources will be despoiled.
                                               
                                              ###########################
 
சிற்றுயிரும்  மாந்தரின்  சிறந்த  தென்ப
சுற்றிடம்   போற்றும்  வகை.
 
பொருள்:  தன்னுடைய சுற்றுச்சூழலை  பேணிக் காக்கும்  குணத்தில் மனிதரை விட சிறுசிறு  உயிர்கள் சிறந்தவை
 
Meaning:  Small organisms are better than humans at preserving their environment
                                                 #########################
 
இன்னதொரு  கோள்தனை  ஆள  நினைப்பதினும்
இருப்பதைப்  போற்றல்  பெரிது.
 
பொருள்:  பல்வேறு விண்கலங்களை, விசைஊர்தியை இயக்கி  மற்ற கோள்களை மனிதன் ஆள நினைப்பதை விட தன்னிடம் இருக்கும்  இந்த பூமியை  முறையாக  காப்பது நல்லதும் உயர்ந்ததும் ஆகும்.
 
Meaning:   It would be better and superior for men to properly protect, preserve this planet they possess than to maneuver various spaceships, satellites and rockets on the thought to rule other planets
 
                                                ##############################
 
உணவுஉடை  உறைவிடம் இயற்கைக்  கொடை
ஊறதற்கு   மாந்தர்  கடன்
 
பொருள்:  உலகின் இந்த இயற்கையானது மனிதர்க்கு உணவு, உடை மற்றும் உறைவிடத்தை கொடையாக தருகின்றது. அதற்கு  மாற்றாக மனிதர்கள்  மாசு  என்னும் பிரதிபலனை இந்த இயற்கைக்கு கொடுக்கின்றனர்
 
Meaning :   This nature of the world bestows food, clothing and shelter to man. Instead, humans give pollution to nature as their gratitude and obligation.
 
                                       ###############################
 
பசுமை   யொழித்து   பகட்டை  நோக்கின்
பாலையும்  கிடைத்தற்  கரிது
 
பொருள்: பகட்டையும், ஆடம்பரத்தையும் மட்டுமே கருதி மனிதர்கள்  இந்த பூமியின் பசுமையையும் வளங்களையும் சூறையாடுவார்கள் என்றால், பாலைவனமும் அவர்களுக்கு புகலிடம் கொடுக்காது.
 
Meaning:  If human beings plunder the greenery and resources of this earth for the sake of luxury, then not even the desert will  give them refuge.
 
                                                ############################
 
இயற்கை   தனில்மாசு  சேர்த்தல் பொன்னில்
ஈயம்  சேர்த்த  தென்ப.
 
பொருள்:  இயற்கையான  சுற்றுசூழலில்  மாசுகளை உண்டாக்குவது என்பது,  தூய தங்கத்தில் மாசுபட்ட ஈயத்தை சேர்ப்பது போலாகும். 
 
Meaning:  Polluting in the natural environment is like adding contaminated lead to pure gold.
 
                                       ##########################


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...