சின்னப் பூ நானல்லவோ
தேவனே நான் சொல்லவோ
என்னை உம் பாதத்திலே
ஏற்றுக் கொண்டால் என்னவோ
வண்ணம் எனக் கில்லையே
வாசம் சிறப்பில்லையே
மண்ணில் உதிரும் முன்னே
வாழ்வு கொடுத்தாலென்ன
அய்யா உம் பாதத்திலே
வீழ்ந்திடும் மலர்களிலே
மெய்யாய் ஒரு மலராய்
பேசும் தரம் இல்லையே
உய்யும் உயிர் பிரிந்தே
ஓடிப் பறக்குமுன்னே
தூய விரல்களாலே
தொட்டுப் பறித்தாலென்ன
தேவனே நான் சொல்லவோ
என்னை உம் பாதத்திலே
ஏற்றுக் கொண்டால் என்னவோ
வண்ணம் எனக் கில்லையே
வாசம் சிறப்பில்லையே
மண்ணில் உதிரும் முன்னே
வாழ்வு கொடுத்தாலென்ன
அய்யா உம் பாதத்திலே
வீழ்ந்திடும் மலர்களிலே
மெய்யாய் ஒரு மலராய்
பேசும் தரம் இல்லையே
உய்யும் உயிர் பிரிந்தே
ஓடிப் பறக்குமுன்னே
தூய விரல்களாலே
தொட்டுப் பறித்தாலென்ன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக