என்னே உந்தன் பேரன்பு
எல்லையே இல்லாப் பேரன்பு
முன்னே நிறைந்த பேரன்பு
முழுதும் ஆக்கியப் பேரன்பு
இறைவா உந்தன் பேரன்பு
ஈடிணை இல்லாப் பேரன்பு
பாறையாய் காக்கும் பேரன்பு
பாவிகட்கும் உண்டும் பேரன்பு
உலகைப் படைத்தப் பேரன்பு - அதில்
உயிர்களைத் தந்தப் பேரன்பு
பலவகைப் பல்லுயிர் படைத்திட்ட
பரிவுமிகு உந்தன் பேரன்பு
இயற்கையை இயன்றப் பேரன்பு - அதில்
இன்பம் சேர்க்கும் பேரன்பு
இயங்குவதும் இருப்பதும் பேரன்பால்
இயங்கும் உலகமும் பேரன்பால்
காற்றைக் கொடுத்து விரிந்தக்
கடலைக் கண்டப் பேரன்பு
ஆற்றை அளந்தப் பேரன்பு - அதில்
ஆவனச் செய்யும் பேரன்பு
மண்ணை உண்டாக்கியப் பேரன்பு
மண்ணான மனிதனை மாண்பாய்
மண்ணில் படைத்தப் பேரன்பு - அவன்
மற்றவைக் கீழ்ப்படுத்திய பேரன்பு
உயிருடல் ஈந்து அதில்தன்
உயிர்மூச்சு தந்தப் பேரன்பு
பயிருடன் காய்கனிப் படைத்துப்
பல்லுயிர் ஓம்பும் பேரன்பு
உணவுஉடை உறைவிடம் யாவும்
உகந்து அளித்தப் பேரன்பு
வானவர் உணவினை மானிடர்க்கே
வாரி இரைத்திட்டப் பேரன்பு
நன்னெறி மாந்தர் மண்ணில்
நலமுடன் வாழ நம்பிக்கை
ஈன்றிடும் இனியநல் பேரன்பு
இஃது இறைவனின் பேரன்பு
அடிமை நிலையில் உந்தன்
அடியாரை மீட்டது பேரன்பு
குடிமைக் கொண்ட தேசத்தில்
குறைவின்றிப் பேணும் பேரன்பு
அல்லல்பட்ட அடியாரின் நிலைகண்டு
அவதிப் பட்டப் பேரன்பு - உடன்
வல்லச் செயல்கள் பலவும்
வடித்து விடுவித்தப் பேரன்பு
அதிசயம் ஆற்றியப் பேரன்பு
அற்புதம் நிகழ்த்தியப் பேரன்பு
நீதித்தலைவர் கொண்டு மக்களை
நிறைவாய் நடத்தியப் பேரன்பு
கடையனை முதலாக்கும் பேரன்பு
கருவினில் தேர்ந்தப் பேரன்பு
இடையனை வேந்தனாய் இருத்தியே
இறைபற்றில் இயக்கியப் பேரன்பு
வாக்கை நிறைவேற்றும் பேரன்பு
வாழ்க்கைக் கரையேற்றும் பேரன்பு
ஊக்கம் அளிக்கும் பேரன்பு
உயிரோட்டம் மிகுந்தப் பேரன்பு
அகதியாய் திரிந்த அடியார்க்கு
அகிலம் வியக்க ஆற்றலறிவு
மிகுதியாய் ஆக்கியப் பேரன்பு
மீளவும் மீட்கும் பேரன்பு
பொறுமை மிகுந்தப் பேரன்பு
பெருஞ்சினம் தணிக்கும் பேரன்பு
வெறுமை மனிதரே என்றாலும்
வெறுத்து விலகாப் பேரன்பு
இன்னும் நான் வாழ்வதில்
இணைந்து இருப்பதுப் பேரன்பு
தின்னும் உணவிலும் என்பெயர்
திண்ணமாய் எழுதியப் பேரன்பு
துயில் கொண்டு விழிப்பதும்
தூதரால் காப்பதும் பேரன்பு
கையின் காரியம் யாவிலும்
கொழிக்கச் செய்வதும் பேரன்பு
நொறுங்கிய எந்த(ன்) நிலையிலும்
நேசம் கொண்டதுப் பேரன்பு
சுருங்கிய எனது வாழ்நாளை
சுகமாக்கி நீட்டியது பேரன்பு
குழியில் வீழ்ந்த என்னைக்
குனிந்து எடுத்தப் பேரன்பு
ஆழியில் அகப்பட்ட கலமெனை
ஆக்ககரைச் சேர்த்தப் பேரன்பு
உடைந்து உருக்குலைந்த மனதை
உருப்பெறச் செய்தது பேரன்பு
கடைந்து எனைஎழில் வடிவம்
கொடுத்து உயர்த்தியப் பேரன்பு
ஒடுக்குவர் முன்னிலை என்னை
ஓங்கி நிறுத்தியப் பேரன்பு
தடுக்கும் எவரையும் என்முன்
தவிர்த்திடச் செய்தப் பேரன்பு
எமதுக் குற்றத்தின் நிமித்தம்
ஏதுவாய் தண்டனைப் பெறினும்
உமதுப் பேரன்பின் பொருட்டு
உயிரோடு நாங்கள் உள்ளோம்
தமதுப் பாவத்தின்படித் தீர்ப்புப்பெறின்
தரணியில் எவரும் இரார்
உமதுப் பேரன்பு எங்கும்
உலகை நிரப்பி உள்ளது
எல்லையே இல்லாப் பேரன்பு
முன்னே நிறைந்த பேரன்பு
முழுதும் ஆக்கியப் பேரன்பு
இறைவா உந்தன் பேரன்பு
ஈடிணை இல்லாப் பேரன்பு
பாறையாய் காக்கும் பேரன்பு
பாவிகட்கும் உண்டும் பேரன்பு
உலகைப் படைத்தப் பேரன்பு - அதில்
உயிர்களைத் தந்தப் பேரன்பு
பலவகைப் பல்லுயிர் படைத்திட்ட
பரிவுமிகு உந்தன் பேரன்பு
இயற்கையை இயன்றப் பேரன்பு - அதில்
இன்பம் சேர்க்கும் பேரன்பு
இயங்குவதும் இருப்பதும் பேரன்பால்
இயங்கும் உலகமும் பேரன்பால்
காற்றைக் கொடுத்து விரிந்தக்
கடலைக் கண்டப் பேரன்பு
ஆற்றை அளந்தப் பேரன்பு - அதில்
ஆவனச் செய்யும் பேரன்பு
மண்ணை உண்டாக்கியப் பேரன்பு
மண்ணான மனிதனை மாண்பாய்
மண்ணில் படைத்தப் பேரன்பு - அவன்
மற்றவைக் கீழ்ப்படுத்திய பேரன்பு
உயிருடல் ஈந்து அதில்தன்
உயிர்மூச்சு தந்தப் பேரன்பு
பயிருடன் காய்கனிப் படைத்துப்
பல்லுயிர் ஓம்பும் பேரன்பு
உணவுஉடை உறைவிடம் யாவும்
உகந்து அளித்தப் பேரன்பு
வானவர் உணவினை மானிடர்க்கே
வாரி இரைத்திட்டப் பேரன்பு
நன்னெறி மாந்தர் மண்ணில்
நலமுடன் வாழ நம்பிக்கை
ஈன்றிடும் இனியநல் பேரன்பு
இஃது இறைவனின் பேரன்பு
அடிமை நிலையில் உந்தன்
அடியாரை மீட்டது பேரன்பு
குடிமைக் கொண்ட தேசத்தில்
குறைவின்றிப் பேணும் பேரன்பு
அல்லல்பட்ட அடியாரின் நிலைகண்டு
அவதிப் பட்டப் பேரன்பு - உடன்
வல்லச் செயல்கள் பலவும்
வடித்து விடுவித்தப் பேரன்பு
அதிசயம் ஆற்றியப் பேரன்பு
அற்புதம் நிகழ்த்தியப் பேரன்பு
நீதித்தலைவர் கொண்டு மக்களை
நிறைவாய் நடத்தியப் பேரன்பு
கடையனை முதலாக்கும் பேரன்பு
கருவினில் தேர்ந்தப் பேரன்பு
இடையனை வேந்தனாய் இருத்தியே
இறைபற்றில் இயக்கியப் பேரன்பு
வாக்கை நிறைவேற்றும் பேரன்பு
வாழ்க்கைக் கரையேற்றும் பேரன்பு
ஊக்கம் அளிக்கும் பேரன்பு
உயிரோட்டம் மிகுந்தப் பேரன்பு
அகதியாய் திரிந்த அடியார்க்கு
அகிலம் வியக்க ஆற்றலறிவு
மிகுதியாய் ஆக்கியப் பேரன்பு
மீளவும் மீட்கும் பேரன்பு
பொறுமை மிகுந்தப் பேரன்பு
பெருஞ்சினம் தணிக்கும் பேரன்பு
வெறுமை மனிதரே என்றாலும்
வெறுத்து விலகாப் பேரன்பு
இன்னும் நான் வாழ்வதில்
இணைந்து இருப்பதுப் பேரன்பு
தின்னும் உணவிலும் என்பெயர்
திண்ணமாய் எழுதியப் பேரன்பு
துயில் கொண்டு விழிப்பதும்
தூதரால் காப்பதும் பேரன்பு
கையின் காரியம் யாவிலும்
கொழிக்கச் செய்வதும் பேரன்பு
நொறுங்கிய எந்த(ன்) நிலையிலும்
நேசம் கொண்டதுப் பேரன்பு
சுருங்கிய எனது வாழ்நாளை
சுகமாக்கி நீட்டியது பேரன்பு
குழியில் வீழ்ந்த என்னைக்
குனிந்து எடுத்தப் பேரன்பு
ஆழியில் அகப்பட்ட கலமெனை
ஆக்ககரைச் சேர்த்தப் பேரன்பு
உடைந்து உருக்குலைந்த மனதை
உருப்பெறச் செய்தது பேரன்பு
கடைந்து எனைஎழில் வடிவம்
கொடுத்து உயர்த்தியப் பேரன்பு
ஒடுக்குவர் முன்னிலை என்னை
ஓங்கி நிறுத்தியப் பேரன்பு
தடுக்கும் எவரையும் என்முன்
தவிர்த்திடச் செய்தப் பேரன்பு
எமதுக் குற்றத்தின் நிமித்தம்
ஏதுவாய் தண்டனைப் பெறினும்
உமதுப் பேரன்பின் பொருட்டு
உயிரோடு நாங்கள் உள்ளோம்
தமதுப் பாவத்தின்படித் தீர்ப்புப்பெறின்
தரணியில் எவரும் இரார்
உமதுப் பேரன்பு எங்கும்
உலகை நிரப்பி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக