எதனைநான் எழுதமுடியும் இறைவா?
எதெனக்கு உந்தன் வாக்கு
எத்தனை எண்ணங்கள் வீணில்
எனினும் பிழைத்திட்டேன் உன்னில்
அமைதியோ அக்களிப்போ எனக்கில்லை
அகத்தினிலோ ஐயமும் அச்சமுண்டு
அமைத்திட்டீர் துன்பநிலை ஏனெனக்கு?
அறுதியிட்டு உம்மைநான் சார்ந்திருக்க
உடலோ என்னுள்ளமோ நானறியேன்
உறுத்துவது உயிரென்பது நீரறிவீர்
நீடலாய் வேதனையில் நானிருக்க
நாளும்நான் ஏங்குகிறேன் குணம்பெற
சுகம்பெறும் மருந்தினைக் கண்டறியேன்
சளைத்ததென் முயற்சிப் பலவும்
வகையாதென சொல்லும் என்வேதனைக்கு
வீணில்போகாது என்நம்பிக்கை காப்பீர்
நலன்யாவும் என்னில் நிறைத்தீர்
நலம்தாரும் என்றே வேண்டுகின்றேன்
நிலையுணர்ந்து காக்க விரைவீர் - வேறில்
நின்வல்ல வாக்கினை அனுப்புவீர்
எதெனக்கு உந்தன் வாக்கு
எத்தனை எண்ணங்கள் வீணில்
எனினும் பிழைத்திட்டேன் உன்னில்
அமைதியோ அக்களிப்போ எனக்கில்லை
அகத்தினிலோ ஐயமும் அச்சமுண்டு
அமைத்திட்டீர் துன்பநிலை ஏனெனக்கு?
அறுதியிட்டு உம்மைநான் சார்ந்திருக்க
உடலோ என்னுள்ளமோ நானறியேன்
உறுத்துவது உயிரென்பது நீரறிவீர்
நீடலாய் வேதனையில் நானிருக்க
நாளும்நான் ஏங்குகிறேன் குணம்பெற
சுகம்பெறும் மருந்தினைக் கண்டறியேன்
சளைத்ததென் முயற்சிப் பலவும்
வகையாதென சொல்லும் என்வேதனைக்கு
வீணில்போகாது என்நம்பிக்கை காப்பீர்
நலன்யாவும் என்னில் நிறைத்தீர்
நலம்தாரும் என்றே வேண்டுகின்றேன்
நிலையுணர்ந்து காக்க விரைவீர் - வேறில்
நின்வல்ல வாக்கினை அனுப்புவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக