அந்த கிராமத்தில் ஒரு கார்பொரேட் நிறுவனம் தொழிற்சாலை ஒன்றை தொடங்க, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத ஒரு விவசாயி தன் விவசாயத்தை கைவிட, வறுமையில் வாடிய அந்த விவசாயி தன் மனைவி, இரு மகன்களுடன் பிழைப்புக்காக, அந்த மாநகரம் செல்ல, அங்கு அந்த விவசாயிக்கு அந்த கார்பொரேட் நிறுவன மேலாண் அதிகாரியின் மாளிகையில் தோட்டக்காரன் வேலையும் கிடைக்க, மாநகர குடிநீரை தோட்டத்தில் பாய்ச்சிய பின், மாளிகை முழுவதும் நீச்சல் குளத்திலும், சுற்றும் முற்றும் நிறைக்கும் வேலையில் மும்முரமாக பணிபுரிய, பள்ளிப்படிப்பு முடித்த விவசாயியின் இரு மகன்களும் ஒரு கார்பொரேட் வங்கியில் கடன் அட்டை பிரிவில் அழைப்பாளர்களாக சேர, அதே வங்கியில் பல கோடி கடன் வாங்கி தண்ணீர் காட்டும் அந்த மேலாண் அதிகாரியின் ஒரு முதுகலை பட்டம் பெற்ற மகன் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து இயற்கை விவசாயம் என்ற பெயரில் ஒரு சந்தைப்படுத்தலை தொடங்கினான்.
இந்த வலைத்தளமானது என்னுடைய ஆன்மீக கவிதை, பொது கட்டுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன். என்னுடைய கவிதைகள் தூய தமிழ் மரபுவழி கவிதைகளாக எழுதப்பட்டவை. மேலும் திருக்குறள் வடிவிலான என் சொந்த குறள்களும் (கடவுள் வாழ்த்து, இயற்கை சிறப்பு) இங்கு இடம்பெற்றுள்ளன. சில தமிழ் வார்த்தைகள் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தால் mike.xavier.tut@gmail.com (or) mike.xavier@hotmail.co.uk என்ற மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளலாம் Michael Xavier, Chennai (India)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)
வல்லோன் கைவினை யாதும் மாசின்றி எல்லோர் நயம் படும் பொருள்: எல்லாம் வல்லவனாகிய இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...
-
சீயோனின் மீட்பு விளக்கின் சுடரெனவும் அதன் வெற்றி வெய்யோன் விடியல் ஒளியெனவும் வெளிப்படும் வரையில் வாளாவிறேன் வேற்றினம் உ...
-
மாந்தருள் சாதியைப் பேணும் கயவர் மதம்பிடிக் களிறினும் கேடு பொருள்: மனிதர்களுள் சாதியை சாதி வேற்றுமையைக் கடைபிடிக்கும் கயவர்கள் மதம் பிட...
-
ஏற்கனவே நான் முதல் பாகத்தில் சொன்னபடி , கி.மு. 1178 முதல் கி.மு. 650 வரை மத்திய ஆசியாவில் இருந்து கால்நடைகளோடு சிந்து சமவெளி பகுதியில் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக