வியாழன், 16 ஜூலை, 2020

புதிய குறள் - திருக்குறள் வடிவில்

My New “KURAL”  in “Thirukkural” form

தன்மாண்   அளப்பரினும்  இறைமறைத்   திலதனை
வீண்மாண்   மாந்தர்தம்   கொளல்

மெய்யோன் மறையோன்  மாறா  குணத்தோன்
மொய்ம்பில்    யாவும்   அடக்கம்

அன்பின்   மிகுதியான்   பரிவின்றி  மிகும்
துன்பின்   நிலைகடந்    தற்று

ஈவது   அனைத்தும்    இறைவனா   தலின்
ஆவதும்   அவர்தம்   செயல்

அருட்கடல்   ஆண்டவன்   திருவடி வேண்டின்
பொருட்கடல்   போற்றி   இலன்

மாய்நிலை   மாந்தர்   அவர்தம்  நோக்கின்
மெய்நிலை   இறைஉருவு   படைத்து

யாக்கையுள்   உயிரிருத்தி   அவ்வுயிருக்  குள்பல்லுயிர்
யாக்கை    படைத்தான்  கொல்

நயன்நடுவு   நோன்றல்   பெற்றியார்  தம்மின்
நற்றாள்   ஏமாப்பு   உயல்

ஆண்டு  அளறு  வையகம்  விசும்பென
ஆக்கியோன்  ஆக்கம் பெரிது

மிகுநார்   பொறையுடை   வீழுநர்   அவர்தம்
மீக்கூறல்  குன்றி   அனைய

அழல்சுடு தகர்அவி உணவுவிரும் பார்அவர்
அவைநீக்கின் சாலப் பெற்

இம்மையும் மறுமையும் இவறியார் அவர்
அம்மையும் தந்தை அங்கு

ஈண்டில் எஞ்ஞான்றும் எஞ்சாமை நமை
இரீஇ எந்தை தகை

உறுகண் உறாமை உற்றவை நீக்கி
உட்கம் அவித்து புகல்

எண்பதம் ஏங்கி யேற்றம் பெறினும்
நின்பதம் புக்கில் நிறை

தானைத்   தெய்வம்    தயை  நோக்கின்
தலைப்    பட்டார்    ஆதும்

ஏதிலார்  செறுஅழல்  ஆயினும்  தெய்வ
என்ஐ    இகவா   நிழல்

இறையுட்    கம்ஞான    முதலே  அஃது
உறையும்   பிறப்பு   தொட்டு

பேரருட்   பரன்சோதி   அருளாழி  ஏகனாய்
பாரித்த    பேரா    உலகு

படைத்தவ    ரிகழும்   படைத்தது  படைப்பின்
பசியுற்றார்   அகடு   காண்ப

அகக்கண்   நோக்குவர்  அறிவுடையார்  இறைவனை
அஃதிலார்   புறக்கண்   அறிய 


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...