அழுகிறேன் நான் தொழுகிறேன்
ஆண்டவரே எம்மை
காத்தருளும்
விழுகின்ற சறுகுபோல் மாந்தர்
வீழ்வதை காண
முடிவதில்லை
விதியால் இல்லை சதியால்
விக்கி நிற்கின்றோம் நிர்கதியாய்
பீதியில் உறைந்த மக்கள்யாம்
பிழைத்துப் போக
வழிதாரும்
இயற்கையாய் உண்டோ இல்லை
இவ்வுலகை வசப்படுத்த
தீயவனின்
செயற்கையாய் உண்டானதோ யாமறியோம்
செத்தழிவது உமது
மக்கள்
அபலைக் குரல்கள் கேட்கின்றன
அபயம் நீர்தந்து
உதவிடுமே
அவலக் கேள்விகள் எழுகின்றன
ஆண்டவன் உண்டோ
என்றே
கண்ணுக்குப் புலப்படா இறைவனே
கண்ணுக்குத் தெரியா
எதிரியால்
மண்ணுக்குள் மாயும் நிலையில்
மாந்தரின் நிலைநீர்
காணீரோ ?
வேதனையா இதெமக்கு சோதனையா
வேந்தனே இதெமக்கு
வேண்டாமையா
பாதம்வணங்கி இறைஞ்சும் எந்தன்
பரிதாபத் குரலைக்
கேளீரோ !
கொடியது இந்தக் கொள்ளைநோய்
கொள்ளை கொண்டது
உயிர்பல
கோடிகோடி யாய்மனிதர் தாம்இக்
கொடுமையினை அடைய
வேண்டாம்
வாரும்நீர் விரைந்து வாரும்
வதைபடும் மக்களை
மீட்க
பாரும்நீர் உம்முலகை
பாரும்
படும்அவதி கண்டு
மனமிரங்கி
கேளும் அடியாரின் வேண்டுதலை
கெடுமதி யாவும்
நீங்கிடவே
ஆளும் இவ்வுலகை நீர்தாமே
ஆதலின் சிறந்த
தீர்வாமே
பேராசை பகட்டு ஆர்ப்பரிப்பென
பெருமைக்கு புகழ்ச்
சூட்டி
பொருளுக்கும்
இருளுக்கும் எங்கள்
பொன்னாம் வாழ்வைத் தொலைத்தோம்
பொருளை உறவாய் கருதியே
பாச உறவை
பொருளாக்கினோம்
கருணை அற்றே நாங்கள்
காட்டு விலங்கென
நடந்தோம்
எந்தன் பேராசைக்கு இவ்வுலகின்
ஏழையின் தேவையை
பலியிட்டோம்
எந்தன் ஆடம்பர வாழ்வு
ஏழையின் வாழ்வில்
தாழ்வு
மனிதர்எம் பாவச்செயலே காரணியாய்
மண்ணாசை பொன்னாசை
பெண்ணாசையென
கனிவற்று நெறியற்று குணமற்று
களிப்புறு இயற்கையைக்
கெடுத்தோம்
பொறுத்தருளும் இறைவா பரிவாய்
பொறுத்தருளும் எமை
பேரன்புடனே
வெறுத்திடுவோம் பேராசை இனியும்
வென்றிடாமல் எமை காக்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக