ஆய்ந்து என்னைநீர் அறிகின்றீர்
ஆண்டவரே! எல்லாம்நீர் அறிந்தவர்
சாய்ந்து அமர்வதும் எழுவதும்என்
சிந்தனை அனைத்தும் அறிகின்றீர்
நடப்பதும் படுப்பதும் கிடப்பதும்
நடக்கும் வழிகளும் தெரிந்தவர்நீர்
தேடமுன்பே என்வாயின் சொற்களை
தொலைநின்று முற்றும் அறிகின்றீர்
முன்னும் பின்னுமாய் எனைச்சூழ்ந்து
முடிந்து எனைவைத்தீர் .உம்கைக்குள்
என்னைப் பற்றியஉம் அறிவெனக்கு
எத்துணை வியப்பாய் இருக்கின்றது
உன்னதமானது அறிவுக்கு எட்டாதது
உன்னதரின் மாபெரும் எண்ணங்கள்
என்னைத்தான் என்னிலும் எவ்வளவு
எங்குமெதிலும் அறிந்து உள்ளீர் .
திருசமூகம் விட்டெங்கே நானும்
தப்பிச் செல்ல முடியும்?
அருள்மிகு ஆற்றலை விட்டுநான்
அலைந்து எங்கே செல்லக்கூடும்?
ஆகாயம் பறந்துநான் சென்றாலும்
அங்கேயும் நீர் இருக்கின்றீர்!
புகாதப் பாதாளம்போய் படுத்தாலும்
பார்த்திருந்தீர் அங்கும் என்னை
கதிரவன் எல்லைக்குச் சென்றாலும்
கடலுக்கு உள்ளே வசித்தாலும்
அதிலும் உம்கைதான் எனைநடத்தும்
அருட்கரம் எனைப்பற்றி கொள்ளும்
உண்மையில் இருளென்னை சூழாதோ
உறுத்தும் இருட்டும் எனைமூடாதோ
என்றுநான் உரைத்தாலும் இருளுமிருட்டும்
என்றும் உமக்குஒளி போலிருக்கும்
என்னுள் அவயங்களை அமைத்தவர்
என்தாயின் கருவினில் உருத்தந்தவர்
என்னைநீர் அற்புதமாய் படைத்ததால்
என்றும் உமக்குநன்றி சொல்வேன்
எனதுமனம் அறியும் முற்றிலும்
என்னே வியப்பூட்டும் செயல்யாவும்!
எனதெலும்பும் மறைவில்லை உமக்கு
என்னைநீர் மறைவாய் உருவாக்கினீர்
கருமுளையில் உம்கண்கள் எனைக்கண்டன
குறித்திட்டீர் என்நாளை தோன்றும்முன்
அரியதுஉம் எண்ணங்களை அறிவது
அளவிடற்கரிது அவைதம் எண்ணிக்கை
என்னிறைவா! என்மனதை ஆய்ந்தறியும்
எண்ணங்கள் யாவும் சோதித்தறியும்
இன்னாவழியில் நான் செல்லாது
இனியஉம் வழியில் எனைநடத்தும்
ஆண்டவரே! எல்லாம்நீர் அறிந்தவர்
சாய்ந்து அமர்வதும் எழுவதும்என்
சிந்தனை அனைத்தும் அறிகின்றீர்
நடப்பதும் படுப்பதும் கிடப்பதும்
நடக்கும் வழிகளும் தெரிந்தவர்நீர்
தேடமுன்பே என்வாயின் சொற்களை
தொலைநின்று முற்றும் அறிகின்றீர்
முன்னும் பின்னுமாய் எனைச்சூழ்ந்து
முடிந்து எனைவைத்தீர் .உம்கைக்குள்
என்னைப் பற்றியஉம் அறிவெனக்கு
எத்துணை வியப்பாய் இருக்கின்றது
உன்னதமானது அறிவுக்கு எட்டாதது
உன்னதரின் மாபெரும் எண்ணங்கள்
என்னைத்தான் என்னிலும் எவ்வளவு
எங்குமெதிலும் அறிந்து உள்ளீர் .
திருசமூகம் விட்டெங்கே நானும்
தப்பிச் செல்ல முடியும்?
அருள்மிகு ஆற்றலை விட்டுநான்
அலைந்து எங்கே செல்லக்கூடும்?
ஆகாயம் பறந்துநான் சென்றாலும்
அங்கேயும் நீர் இருக்கின்றீர்!
புகாதப் பாதாளம்போய் படுத்தாலும்
பார்த்திருந்தீர் அங்கும் என்னை
கதிரவன் எல்லைக்குச் சென்றாலும்
கடலுக்கு உள்ளே வசித்தாலும்
அதிலும் உம்கைதான் எனைநடத்தும்
அருட்கரம் எனைப்பற்றி கொள்ளும்
உண்மையில் இருளென்னை சூழாதோ
உறுத்தும் இருட்டும் எனைமூடாதோ
என்றுநான் உரைத்தாலும் இருளுமிருட்டும்
என்றும் உமக்குஒளி போலிருக்கும்
என்னுள் அவயங்களை அமைத்தவர்
என்தாயின் கருவினில் உருத்தந்தவர்
என்னைநீர் அற்புதமாய் படைத்ததால்
என்றும் உமக்குநன்றி சொல்வேன்
எனதுமனம் அறியும் முற்றிலும்
என்னே வியப்பூட்டும் செயல்யாவும்!
எனதெலும்பும் மறைவில்லை உமக்கு
என்னைநீர் மறைவாய் உருவாக்கினீர்
கருமுளையில் உம்கண்கள் எனைக்கண்டன
குறித்திட்டீர் என்நாளை தோன்றும்முன்
அரியதுஉம் எண்ணங்களை அறிவது
அளவிடற்கரிது அவைதம் எண்ணிக்கை
என்னிறைவா! என்மனதை ஆய்ந்தறியும்
எண்ணங்கள் யாவும் சோதித்தறியும்
இன்னாவழியில் நான் செல்லாது
இனியஉம் வழியில் எனைநடத்தும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக