திருப்பொழிவுச் செய்யும் இறைவா
திருப்பொழிவுச் செய்யும் என்னை
அருட்பொழிவுச் செய்து உந்தன்
அடியானாய் மாற்றச் செய்யும்
இளமையின் குற்றக் கறைநீக்க
இதுவரைச் செய்தப் பாவமவிலக்க
கள்ளமைக் கசடு யாவும்போக்க
கனிவுடன் திருப்பொழிவுச் செய்யும்
உந்தன் வாக்கினை உரைக்க
உண்மைநெறி நாளும் எடுத்துரைக்க
எந்தன் பணியினை உந்தனுக்காய்
எடுத்தளிக்க திருப்பொழிவுச் செய்யும்
எளியோர் தமக்கு உம்செய்தியை
எடுத்து இயம்பவும் வாழ்வுத்
துளிர்விடா அடிமைக்கு விடுதலைநாளை
தூதறிவிக்க திருப்பொழிவுச் செய்யும்
ஆண்டவரின் ஆண்டினைப் பறைசாற்றவும்
ஆறுதல் நலிவுற்றோர் அடையவும்
அண்டம் முழுவதும் உம்நீதியை
அறிவிக்கவும் திருப்பொழிவுச் செய்யும்
ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு
ஓங்கவும் மண்ணில் உயர்வு
தடுக்கப்பட்டோர் நிறை வாழ்வுத்
தழைக்கவும் திருப்பொழிவுச் செய்யும்
அழுவோர்த் தம்மைத் தேற்றிடவும்
அடக்குமுறை யாவும் தூற்றிடவும்
விழுவோர் யாவரையும் தூக்கிடவும்
விழைந்துத் திருப்பொழிவுச் செய்யும்
தூய்மையை ஆடையை அணியவும்
துணிந்துக் கொடுமையை எதிர்க்கவும்
கயமையைக் கருவினில் அளிக்கவும்
கடவுளே எனக்கு அருட்பொழியும்
உந்தன் குரலினைக் கேட்டிடவும்
உரிமையுடன் உம்மிடம் பேசிடவும்
எந்தன் நாவினில் உம்அனலிட்டு
எழும்பி ஒளிவிட அருட்பொழியும்
உம்கட்டளை யாவும் கடைபிடிக்க
உமைஉயிரிலும் உணர்விலும் சேவிக்க
உம்சட்டங்கள் யாவும் எடுத்துரைக்க
உன்னதரே! திருப்பொழிவுச் செய்யும்
புத்துயிர் அளிக்கும் ஆவியை
புதுப்பிக்கும் ஆவியை எனக்கீந்து
புத்தம் புதிய மனம்தந்து
புதுப்படைப்பாய் எனை மாற்றும்
கரடான வழியினைச் சீர்படுத்தவும்
கோணலானப் பாதையை நேர்படுத்தவும்
முரடான மனங்களை மென்படுத்தவும்
முழுமையாய் திருப்பொழிவுச் செய்யும்
திருப்பொழிவுச் செய்யும் என்னை
அருட்பொழிவுச் செய்து உந்தன்
அடியானாய் மாற்றச் செய்யும்
இளமையின் குற்றக் கறைநீக்க
இதுவரைச் செய்தப் பாவமவிலக்க
கள்ளமைக் கசடு யாவும்போக்க
கனிவுடன் திருப்பொழிவுச் செய்யும்
உந்தன் வாக்கினை உரைக்க
உண்மைநெறி நாளும் எடுத்துரைக்க
எந்தன் பணியினை உந்தனுக்காய்
எடுத்தளிக்க திருப்பொழிவுச் செய்யும்
எளியோர் தமக்கு உம்செய்தியை
எடுத்து இயம்பவும் வாழ்வுத்
துளிர்விடா அடிமைக்கு விடுதலைநாளை
தூதறிவிக்க திருப்பொழிவுச் செய்யும்
ஆண்டவரின் ஆண்டினைப் பறைசாற்றவும்
ஆறுதல் நலிவுற்றோர் அடையவும்
அண்டம் முழுவதும் உம்நீதியை
அறிவிக்கவும் திருப்பொழிவுச் செய்யும்
ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு
ஓங்கவும் மண்ணில் உயர்வு
தடுக்கப்பட்டோர் நிறை வாழ்வுத்
தழைக்கவும் திருப்பொழிவுச் செய்யும்
அழுவோர்த் தம்மைத் தேற்றிடவும்
அடக்குமுறை யாவும் தூற்றிடவும்
விழுவோர் யாவரையும் தூக்கிடவும்
விழைந்துத் திருப்பொழிவுச் செய்யும்
தூய்மையை ஆடையை அணியவும்
துணிந்துக் கொடுமையை எதிர்க்கவும்
கயமையைக் கருவினில் அளிக்கவும்
கடவுளே எனக்கு அருட்பொழியும்
உந்தன் குரலினைக் கேட்டிடவும்
உரிமையுடன் உம்மிடம் பேசிடவும்
எந்தன் நாவினில் உம்அனலிட்டு
எழும்பி ஒளிவிட அருட்பொழியும்
உம்கட்டளை யாவும் கடைபிடிக்க
உமைஉயிரிலும் உணர்விலும் சேவிக்க
உம்சட்டங்கள் யாவும் எடுத்துரைக்க
உன்னதரே! திருப்பொழிவுச் செய்யும்
புத்துயிர் அளிக்கும் ஆவியை
புதுப்பிக்கும் ஆவியை எனக்கீந்து
புத்தம் புதிய மனம்தந்து
புதுப்படைப்பாய் எனை மாற்றும்
கரடான வழியினைச் சீர்படுத்தவும்
கோணலானப் பாதையை நேர்படுத்தவும்
முரடான மனங்களை மென்படுத்தவும்
முழுமையாய் திருப்பொழிவுச் செய்யும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக