இறைவா! உம்கட்டளை வழிதரும்
இவற்றால் என்கண்கள் ஒளிபெறும்
இறைவனின் கட்டளை வலிமைமிக்கது
இதனால் பேதையரும் ஞானியாவர்
இறைவனின் சட்டங்கள் நம்பத்தக்கவை
இருபுறமும் கூர்மிக்க வாள்போன்றவை
குறையேதும் காணவியலா பொன்னினும்மேல்
குதுகளிக்கும் என்மனம் அதனால்
கடவுளின் ஒழுங்குமுறை சீரானவை
கீர்த்தியும் நீதியும் நிறைந்தவை
கடவுளின் நியாயங்கள் தூய்மையது
காதலாய் இதயத்தை இன்புறுத்தும்
இறைவா! உன்சட்டங்கள் எனக்கு
இன்பம் தருவதாய் இல்லாதிருப்பின்
மறைந்து போயிருப்பேன் எத்துன்பத்தில்
மடிந்துபோகாது ஆறுதல் தந்தவை
உம்கட்டளையில் என்னை மகிழ்விக்கின்றீர்
உண்மையில் எனக்குஅவை அருமருந்து
உம்சட்டம் என்னைநேர் வழிப்படுத்தும் - அதை
உறுதியாய்ப் பற்றுவோர்க்கு பரிசுண்டு
என்காலடிக்கு உம்வாக்கே விளக்கு
என்வழிக்கு ஒளியும் அதுவே
என்வாயில் இனிக்கும் அமிழ்து
என்விழிக்குப் பாவையும் அது
மனங்களை மாசற்றதாய் காப்பதற்கு
மதிநுட்பம் ஞானம் பெறுவதற்கு
தனங்களைப் போன்று குணங்களையும்
தகைவாய் தந்திடும் உம்வாக்கு
இறைவன் உரைத்த கட்டளையிவை
இவற்றை முறையாய் பின்பற்றியே
கறையின்றி மனத்தைக் காப்போம்
கட்டளை முதன்மையில் பின்வருவன
இறைவன் ஒருவர் தாமே
இல்லை வேற்று ஒன்று
இறைவனைப் பணிதல் தவிர
இதரப்பிற பணிதல் ஆகாது
உருவமோ சிற்பமோ சித்திரமோ
உகந்தது அன்று வணங்கிட
உருவமறியா இறைவனை ஏகமாய்
உள்ளத்தே உணர்ந்து தொழுவீர்
படைத்தவர் முன்னரே தாளிடுவீர்
படைத்தவை பின்னமே விலகிடுவீர்
படைத்தவர் திருநாமம் புனிதம்
பயனாக்காதீர் அதனை வீணில்
ஓய்வுநாள் அமைந்தது இறைவனுக்காய்
ஒதுக்குவோம் முழுதாய் அவருக்காய்
தூய்மை உள்ளதோடு தீட்டின்றி
துதிப்போம் இறைவனை அந்நாளில்
தந்தைதாய் இறைவனின் தூதர்
தாழ்மையுடன் அவரைப் போற்றுவீர்
நிந்தையேதும் அவருக்குச் செய்யின்
நித்தியப் பழிக்கு உள்ளாவீர்
சிற்றின்பம் வாழ்க்கைச் சீரழிக்கும்
சிறுமதிக் கொண்டு அலையாதீர்
உற்றஉறவிலே இன்பம் கொண்டு
உன்னதர் ஆசீர் பெற்றிடுவீர்
உயிர்யாவும் இறைவன் உடைமை
உரியவனுக்கே அதில்உரிமை இல்லை
உயிர்நீக்க எவனுக்கு உரிமையேது ?
உயிர்க்கொலை பெருங் கொடியதீது
களவுக் கையூட்டு ஊழல்யாவும்
கயமையின் கொடிய உருவங்கள்
அளவு இல்லாப் பேராசையில்
அடுத்தவர் உரிமை கொல்லுஞ்செயல்
இவையாவும் செய்வோர் விலங்கொப்பர்
இல்லாரின் சாபம்விழும் இவர்மீது
தேவைமீறிச் சேர்ப்பவை அனைத்தும்
திண்டிடாடு வோரிடம் எடுத்ததிருட்டு
வழக்கினில் தீமையைக் கலக்காதீர்
வாய்மையில் பொய்யைத் திரிக்காதீர்
பழக்கியப் பொய்ச்சான்றும் தீதாகும்
படைத்தவரின் நீதிக்குப் பலியாகும்
தீர்ப்பினில் அநீதிச் செய்யாதீர்
திக்கற்றோர் நீதி மறுக்காதீர்
தீர்ப்பின் இறைவன் வரும்போது
திகில்பிடித்து நீரும் விழவேண்டா
அதிகார துர்ப்பயன்பாடு வேண்டாம்
ஆணவத் திமிருதலும் வேண்டாம்
அதிகாரம் பயன்கொட அமைத்ததுவே
அதனில் சுயநலம் சிறிதும்வேண்டா
நீதியைக் கொல்ல முயலாதீர்
நீதியின் தேவன் பொறுக்கமாட்டார்
கதியின்றி இருப்போரின் அழுகுரலைக்
கண்டுத் துடிக்கும் அவர்சினம்
பிறர்மனைக் கவர விரும்பாதீர்
பிறவிப் பாவம் அடையாதீர்
பிறர்பொருள் யாவும் உடைமையும்
பிடித்திட ஆவல் கொள்ளாதீர்
ஏழையின் வாழ்வை வஞ்சிக்காதீர்
எளியவர் தாழ்மை இகழாதீர்
உழைப்பவர் ஊதியம் கொடுப்பீர் - அவர்
உழைப்பின் வியர்வைக் காயும்முன்
அனாதைப் பிள்ளைக்குத் துணைநிற்பீர்
அபலைப் பெண்ணுக்கு ஆதரவளிப்பீர்
வானாதி வானங்களை படைத்தவர்
வானின்று பொக்கிஷம் வழங்கிடுவார்
உம்மை நீரும் நேசிப்பதுபோல்
உம் அயலானையும் நேசிப்பீர்
இம்மை மறுமை இரண்டிலும்
இறைவனே நமக்கு நிரந்தரம்
இவற்றால் என்கண்கள் ஒளிபெறும்
இறைவனின் கட்டளை வலிமைமிக்கது
இதனால் பேதையரும் ஞானியாவர்
இறைவனின் சட்டங்கள் நம்பத்தக்கவை
இருபுறமும் கூர்மிக்க வாள்போன்றவை
குறையேதும் காணவியலா பொன்னினும்மேல்
குதுகளிக்கும் என்மனம் அதனால்
கடவுளின் ஒழுங்குமுறை சீரானவை
கீர்த்தியும் நீதியும் நிறைந்தவை
கடவுளின் நியாயங்கள் தூய்மையது
காதலாய் இதயத்தை இன்புறுத்தும்
இறைவா! உன்சட்டங்கள் எனக்கு
இன்பம் தருவதாய் இல்லாதிருப்பின்
மறைந்து போயிருப்பேன் எத்துன்பத்தில்
மடிந்துபோகாது ஆறுதல் தந்தவை
உம்கட்டளையில் என்னை மகிழ்விக்கின்றீர்
உண்மையில் எனக்குஅவை அருமருந்து
உம்சட்டம் என்னைநேர் வழிப்படுத்தும் - அதை
உறுதியாய்ப் பற்றுவோர்க்கு பரிசுண்டு
என்காலடிக்கு உம்வாக்கே விளக்கு
என்வழிக்கு ஒளியும் அதுவே
என்வாயில் இனிக்கும் அமிழ்து
என்விழிக்குப் பாவையும் அது
மனங்களை மாசற்றதாய் காப்பதற்கு
மதிநுட்பம் ஞானம் பெறுவதற்கு
தனங்களைப் போன்று குணங்களையும்
தகைவாய் தந்திடும் உம்வாக்கு
இறைவன் உரைத்த கட்டளையிவை
இவற்றை முறையாய் பின்பற்றியே
கறையின்றி மனத்தைக் காப்போம்
கட்டளை முதன்மையில் பின்வருவன
இறைவன் ஒருவர் தாமே
இல்லை வேற்று ஒன்று
இறைவனைப் பணிதல் தவிர
இதரப்பிற பணிதல் ஆகாது
உருவமோ சிற்பமோ சித்திரமோ
உகந்தது அன்று வணங்கிட
உருவமறியா இறைவனை ஏகமாய்
உள்ளத்தே உணர்ந்து தொழுவீர்
படைத்தவர் முன்னரே தாளிடுவீர்
படைத்தவை பின்னமே விலகிடுவீர்
படைத்தவர் திருநாமம் புனிதம்
பயனாக்காதீர் அதனை வீணில்
ஓய்வுநாள் அமைந்தது இறைவனுக்காய்
ஒதுக்குவோம் முழுதாய் அவருக்காய்
தூய்மை உள்ளதோடு தீட்டின்றி
துதிப்போம் இறைவனை அந்நாளில்
தந்தைதாய் இறைவனின் தூதர்
தாழ்மையுடன் அவரைப் போற்றுவீர்
நிந்தையேதும் அவருக்குச் செய்யின்
நித்தியப் பழிக்கு உள்ளாவீர்
சிற்றின்பம் வாழ்க்கைச் சீரழிக்கும்
சிறுமதிக் கொண்டு அலையாதீர்
உற்றஉறவிலே இன்பம் கொண்டு
உன்னதர் ஆசீர் பெற்றிடுவீர்
உயிர்யாவும் இறைவன் உடைமை
உரியவனுக்கே அதில்உரிமை இல்லை
உயிர்நீக்க எவனுக்கு உரிமையேது ?
உயிர்க்கொலை பெருங் கொடியதீது
களவுக் கையூட்டு ஊழல்யாவும்
கயமையின் கொடிய உருவங்கள்
அளவு இல்லாப் பேராசையில்
அடுத்தவர் உரிமை கொல்லுஞ்செயல்
இவையாவும் செய்வோர் விலங்கொப்பர்
இல்லாரின் சாபம்விழும் இவர்மீது
தேவைமீறிச் சேர்ப்பவை அனைத்தும்
திண்டிடாடு வோரிடம் எடுத்ததிருட்டு
வழக்கினில் தீமையைக் கலக்காதீர்
வாய்மையில் பொய்யைத் திரிக்காதீர்
பழக்கியப் பொய்ச்சான்றும் தீதாகும்
படைத்தவரின் நீதிக்குப் பலியாகும்
தீர்ப்பினில் அநீதிச் செய்யாதீர்
திக்கற்றோர் நீதி மறுக்காதீர்
தீர்ப்பின் இறைவன் வரும்போது
திகில்பிடித்து நீரும் விழவேண்டா
அதிகார துர்ப்பயன்பாடு வேண்டாம்
ஆணவத் திமிருதலும் வேண்டாம்
அதிகாரம் பயன்கொட அமைத்ததுவே
அதனில் சுயநலம் சிறிதும்வேண்டா
நீதியைக் கொல்ல முயலாதீர்
நீதியின் தேவன் பொறுக்கமாட்டார்
கதியின்றி இருப்போரின் அழுகுரலைக்
கண்டுத் துடிக்கும் அவர்சினம்
பிறர்மனைக் கவர விரும்பாதீர்
பிறவிப் பாவம் அடையாதீர்
பிறர்பொருள் யாவும் உடைமையும்
பிடித்திட ஆவல் கொள்ளாதீர்
ஏழையின் வாழ்வை வஞ்சிக்காதீர்
எளியவர் தாழ்மை இகழாதீர்
உழைப்பவர் ஊதியம் கொடுப்பீர் - அவர்
உழைப்பின் வியர்வைக் காயும்முன்
அனாதைப் பிள்ளைக்குத் துணைநிற்பீர்
அபலைப் பெண்ணுக்கு ஆதரவளிப்பீர்
வானாதி வானங்களை படைத்தவர்
வானின்று பொக்கிஷம் வழங்கிடுவார்
உம்மை நீரும் நேசிப்பதுபோல்
உம் அயலானையும் நேசிப்பீர்
இம்மை மறுமை இரண்டிலும்
இறைவனே நமக்கு நிரந்தரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக