இறைவா! நீரே என் அனைத்தும்
உம் அருளின்றி நானில்லை
வெற்றுக் கரும்பலகை நான்
விரும்பியதை எனில் எழுதும்
வெற்றுப் பாத்திரம் நான்
வழிந்தோடச் செய்து அருளும்
வறண்டப் பாலைவனம் நான்
வளமைப் பொங்கச் செய்திடும்
பிரண்டப் பாதைவழி நான்
பழுதுநீக்கி சீர் படுத்தும்
கருண்ட களிமண் நான்
கலமாக எனை வனைந்திடும்
இருண்ட இல்லம் நான்
இருள் நீக்கி ஒளியேற்றும்
கனிகொடா விருட்சம் நான்
கனிகளால் என்னை நிரப்பிடும்
தனித்திரும் பிள்ளை நான்
தந்தை தாயாய் இருந்திடும்
ஒளிகொடா நிலவு நான்
ஒளிரும் முழுநிலவு ஆக்கிடும்
உளிதொடா பாறை நான்
உகந்த சிற்பமாய் செதுக்கிடும்
வண்ணமில்லா மலர் நான்
வனப்பூட்டும் வண்ணம் வாசமிட்டு
திண்ணமில்லா கொடி நான்
திடப்படுத்திப் படர விடும்
மிளிராத வெள்ளி நான் - என்
மீதிருக்கும் களிம்பு நீக்கும்
தெளியாத சிந்தை நான்
தெள்ளிய ஞானம் தந்திடும்
மழைகொடா மேகம் நான்
மண்ணை நனைக்க பொழியனும்
பிழைகொண்ட புத்தகம் நான்
பிழைத் திருத்தி அச்சிடும்
சிறகில்லாப் பறவை நான்
சிறகடித்துப் பறக்க வையும்
விறகில்லா நெருப்பு நான்
விரைந்து எங்கும் பரவனும்
சுரமில்லா இசையும் நான்
சுருதித் தந்துமீட்டி யருளும்
உரமில்லா நிலமும் நான்
உற்பத்தி ஆக்க செய்திடும்
நரம்பில்லா வீணை நான்
நாதம் இசைத்திட வேண்டும்
வரம்பில்லா வரப்பு நான்
வளைத்து என்னை வேலியிடும்
அழகில்லா அரும்பு நான்
அரிந்து மாலைத் தொடும்
கழனியில்லா அறுவடை நான்
கதிர் பெருக்கச் செய்திடும்
சுவையில்லாக் கரும்பு நான்
சுவை இனிக்க செய்தருளும்
அவையில்லா அரங்கம் நான்
ஆர்ப்பரித்து அதிர வேண்டும்
கலையில்லா ஓவியம் நான்
கவினுற தீட்ட வேண்டும்
தலையில்லா உடல் நான்
தலைநீ நடத்த வேண்டும்
நயம்படா பொருள் நான்
நன்றாக்கி எனை சமைப்பாய்
புயம்படா தறியும் நான்
புணராக்கி புதுமைப் படைப்பாய்
புடம்போடா பொன்னும் நான்
புடமிட்டு மின்னச் செய்யும்
தடம்மாறும் கலமும் நான்
தக்க கரைசேரச் செய்யும்
எண்ணெயில்லா விளக்கு நான்
என்னையும் விளங்கச் செய்யும்
பெண்ணில்லா மானுடம் நான்
பெறும் பேறு பெற்றிடனும்
மகரந்த மில்லாமலர் நான்
மணக்கும் தேன் சுரக்கனும்
அகரமில்லா மொழியும் நான்
அகிலம் முழுதும் ஒலிக்கனும்
அடித்தளமிடாக் கட்டிடம் நான்
அரண் போல்நிலை நிறுத்தும்
படித்தறியா பாமரன் நான்
பாடம் புகட்டும் ஆசானாக்கும்
பார்வையறியா விழிகள் நான்
பரமன் முகம் காணவேண்டும்
கோர்வையிலா கோலம் நான்
கோடிட்டு நிரப்ப வேண்டும்
விளங்காத விடையும் நான்
விளக்கம் எனக்குத் தரவேண்டும்
புளங்காத புதிரும் நான்
புரிவுபெற அறிவு வேண்டும்
கேட்டறியா செவியும் நான்
கேள்வி யறிவுபெற வேண்டும்
கட்டறியா காளை நான் - நின்
கட்டுக்குள் இருக்க வேண்டும்
மொத்தத்தில் நீரின்றி நானில்லை
முடியாது உனதன்பின் எல்லை
நித்ததில் எத்துணை இருப்பாய்
நீக்கமற என்னுள் நிறைந்திருப்பாய்
##########################################
"கடவுளே! மெய்யாகவே நீர் எனக்கு
ஆசி வழங்கி என் எல்லையைப்
பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு
இருப்பதாக! தீங்கு என்னைத்
துன்புறுத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக!"
1 Chronicles 4:10
உம் அருளின்றி நானில்லை
வெற்றுக் கரும்பலகை நான்
விரும்பியதை எனில் எழுதும்
வெற்றுப் பாத்திரம் நான்
வழிந்தோடச் செய்து அருளும்
வறண்டப் பாலைவனம் நான்
வளமைப் பொங்கச் செய்திடும்
பிரண்டப் பாதைவழி நான்
பழுதுநீக்கி சீர் படுத்தும்
கருண்ட களிமண் நான்
கலமாக எனை வனைந்திடும்
இருண்ட இல்லம் நான்
இருள் நீக்கி ஒளியேற்றும்
கனிகொடா விருட்சம் நான்
கனிகளால் என்னை நிரப்பிடும்
தனித்திரும் பிள்ளை நான்
தந்தை தாயாய் இருந்திடும்
ஒளிகொடா நிலவு நான்
ஒளிரும் முழுநிலவு ஆக்கிடும்
உளிதொடா பாறை நான்
உகந்த சிற்பமாய் செதுக்கிடும்
வண்ணமில்லா மலர் நான்
வனப்பூட்டும் வண்ணம் வாசமிட்டு
திண்ணமில்லா கொடி நான்
திடப்படுத்திப் படர விடும்
மிளிராத வெள்ளி நான் - என்
மீதிருக்கும் களிம்பு நீக்கும்
தெளியாத சிந்தை நான்
தெள்ளிய ஞானம் தந்திடும்
மழைகொடா மேகம் நான்
மண்ணை நனைக்க பொழியனும்
பிழைகொண்ட புத்தகம் நான்
பிழைத் திருத்தி அச்சிடும்
சிறகில்லாப் பறவை நான்
சிறகடித்துப் பறக்க வையும்
விறகில்லா நெருப்பு நான்
விரைந்து எங்கும் பரவனும்
சுரமில்லா இசையும் நான்
சுருதித் தந்துமீட்டி யருளும்
உரமில்லா நிலமும் நான்
உற்பத்தி ஆக்க செய்திடும்
நரம்பில்லா வீணை நான்
நாதம் இசைத்திட வேண்டும்
வரம்பில்லா வரப்பு நான்
வளைத்து என்னை வேலியிடும்
அழகில்லா அரும்பு நான்
அரிந்து மாலைத் தொடும்
கழனியில்லா அறுவடை நான்
கதிர் பெருக்கச் செய்திடும்
சுவையில்லாக் கரும்பு நான்
சுவை இனிக்க செய்தருளும்
அவையில்லா அரங்கம் நான்
ஆர்ப்பரித்து அதிர வேண்டும்
கலையில்லா ஓவியம் நான்
கவினுற தீட்ட வேண்டும்
தலையில்லா உடல் நான்
தலைநீ நடத்த வேண்டும்
நயம்படா பொருள் நான்
நன்றாக்கி எனை சமைப்பாய்
புயம்படா தறியும் நான்
புணராக்கி புதுமைப் படைப்பாய்
புடம்போடா பொன்னும் நான்
புடமிட்டு மின்னச் செய்யும்
தடம்மாறும் கலமும் நான்
தக்க கரைசேரச் செய்யும்
எண்ணெயில்லா விளக்கு நான்
என்னையும் விளங்கச் செய்யும்
பெண்ணில்லா மானுடம் நான்
பெறும் பேறு பெற்றிடனும்
மகரந்த மில்லாமலர் நான்
மணக்கும் தேன் சுரக்கனும்
அகரமில்லா மொழியும் நான்
அகிலம் முழுதும் ஒலிக்கனும்
அடித்தளமிடாக் கட்டிடம் நான்
அரண் போல்நிலை நிறுத்தும்
படித்தறியா பாமரன் நான்
பாடம் புகட்டும் ஆசானாக்கும்
பார்வையறியா விழிகள் நான்
பரமன் முகம் காணவேண்டும்
கோர்வையிலா கோலம் நான்
கோடிட்டு நிரப்ப வேண்டும்
விளங்காத விடையும் நான்
விளக்கம் எனக்குத் தரவேண்டும்
புளங்காத புதிரும் நான்
புரிவுபெற அறிவு வேண்டும்
கேட்டறியா செவியும் நான்
கேள்வி யறிவுபெற வேண்டும்
கட்டறியா காளை நான் - நின்
கட்டுக்குள் இருக்க வேண்டும்
மொத்தத்தில் நீரின்றி நானில்லை
முடியாது உனதன்பின் எல்லை
நித்ததில் எத்துணை இருப்பாய்
நீக்கமற என்னுள் நிறைந்திருப்பாய்
##########################################
"கடவுளே! மெய்யாகவே நீர் எனக்கு
ஆசி வழங்கி என் எல்லையைப்
பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு
இருப்பதாக! தீங்கு என்னைத்
துன்புறுத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக!"
1 Chronicles 4:10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக