மகரந்தம் மணம்பரப்பும் மலர்களும்
மனம் கவரும் வண்ணஇதழ்களும்
நுகர்ந்தால் நோய்தீரும் மூலிகையும்
நிந்தன் நிறைவினை இயற்றும்
எழில்கொஞ்சும் பச்சைப் புல்வெளியும்
எண்ணில்லாத தாவர வகையும்
செழிப்பூட்டும் உணவுப் பயிர்களும்
செய்தவன் உன்னைத் துதித்திடுமே
வானில் பறக்கின்ற பட்சிகளும்
வண்ண மயமான பறவைகளும்
தேனில் தள்ளாடும் வண்டினமும்
தேனீக்களும் தேவஉனைப் போற்றிடுமே
துள்ளித் தாவும் மானினமும் - வண்ணத்
தோகை விரிக்கும் மயிலினமும்
அள்ளிக் கொஞ்சும் கிளியினமும்
அன்பர் என்றுனைச் சொல்லிடுமே
சீறிப்பாயும் சிங்கமும் புலியும்
சிறுத்தை வேங்கை இனங்களும்
தறிக்கெட் டோடும்காட்டு விலங்குகளும்
தலைவன் உன்பெயர் விளம்பிடுமே
வீட்டில் வளர்க்கின்ற செல்லப்பிராணி
வீதியில் திரிகின்ற விலங்குயாவும்
நாட்டில் உலவுகின்ற கால்நடைகளும்
நாதன் நாமம் இசைத்திடுமே
ஊர்ந்து செல்லும் உயிரினமும்
ஊனை மெல்லும் உயிரினமும்
கூர்ந்துக் கவ்வும் கழுகினமும்
கூடிக் களித்து மகிழ்ந்திடுமே
நீரில்நீந்திச் செல்லும் மீனினமும்
நீர்நிலம் வாழும் உயிரினமும்
சேறில் முளைத்த செந்தாமரையும்
செவ்விதழ் அழகு அன்னங்களும்
உயர்வாய்ப் படைத்திட்ட மாந்தரும் - தம்
உயர்வு தேடும் மக்களினமும்
உயிர் கொல்லும் நுண்ணுயிரும்
உந்தன் படைப்பு எல்லாமே
மடியில் வளர்கின்ற மழலைகளும்
மழலைச் சொல் குழந்தைகளும்
ஓடியாடும் செல்லப் பிள்ளைகளும்
ஓதுவார் உந்தன் புகழ்தனையே
வாலிபரும் வாலிபக் கன்னியரும்
வயது மூத்தப் பெரியோரும்
கோலில் ஆளும் மன்னவனும்
கோன் சான்றோர் சாமானியரென
இறைவா!
உம் படைப்புகள் அனைத்தும்
உம் புகழைப் பாடுவதாக
மனம் கவரும் வண்ணஇதழ்களும்
நுகர்ந்தால் நோய்தீரும் மூலிகையும்
நிந்தன் நிறைவினை இயற்றும்
எழில்கொஞ்சும் பச்சைப் புல்வெளியும்
எண்ணில்லாத தாவர வகையும்
செழிப்பூட்டும் உணவுப் பயிர்களும்
செய்தவன் உன்னைத் துதித்திடுமே
வானில் பறக்கின்ற பட்சிகளும்
வண்ண மயமான பறவைகளும்
தேனில் தள்ளாடும் வண்டினமும்
தேனீக்களும் தேவஉனைப் போற்றிடுமே
துள்ளித் தாவும் மானினமும் - வண்ணத்
தோகை விரிக்கும் மயிலினமும்
அள்ளிக் கொஞ்சும் கிளியினமும்
அன்பர் என்றுனைச் சொல்லிடுமே
சீறிப்பாயும் சிங்கமும் புலியும்
சிறுத்தை வேங்கை இனங்களும்
தறிக்கெட் டோடும்காட்டு விலங்குகளும்
தலைவன் உன்பெயர் விளம்பிடுமே
வீட்டில் வளர்க்கின்ற செல்லப்பிராணி
வீதியில் திரிகின்ற விலங்குயாவும்
நாட்டில் உலவுகின்ற கால்நடைகளும்
நாதன் நாமம் இசைத்திடுமே
ஊர்ந்து செல்லும் உயிரினமும்
ஊனை மெல்லும் உயிரினமும்
கூர்ந்துக் கவ்வும் கழுகினமும்
கூடிக் களித்து மகிழ்ந்திடுமே
நீரில்நீந்திச் செல்லும் மீனினமும்
நீர்நிலம் வாழும் உயிரினமும்
சேறில் முளைத்த செந்தாமரையும்
செவ்விதழ் அழகு அன்னங்களும்
உயர்வாய்ப் படைத்திட்ட மாந்தரும் - தம்
உயர்வு தேடும் மக்களினமும்
உயிர் கொல்லும் நுண்ணுயிரும்
உந்தன் படைப்பு எல்லாமே
மடியில் வளர்கின்ற மழலைகளும்
மழலைச் சொல் குழந்தைகளும்
ஓடியாடும் செல்லப் பிள்ளைகளும்
ஓதுவார் உந்தன் புகழ்தனையே
வாலிபரும் வாலிபக் கன்னியரும்
வயது மூத்தப் பெரியோரும்
கோலில் ஆளும் மன்னவனும்
கோன் சான்றோர் சாமானியரென
இறைவா!
உம் படைப்புகள் அனைத்தும்
உம் புகழைப் பாடுவதாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக