உலகம் பெரியக் குடும்பம் - அதில்
உயிர்கள் யாவும் அங்கம்
இலக்கம் மிகுதி எனினும்
இறைவனே பேணிக் காக்கிறவர்
குடும்பத் தலைவன் இறைவன்
குறை யொன்றும் காணோம்
வாடும் உயிர்களுக்கு உணவினை
வாரி வழங்குபவர் அவர்
இயற்கை இவ்வீட்டின் அலங்காரம்
இறைவனே உலகை அலங்கரித்தார்
இயற்கை யில்லா இவ்வுலகம்
இன்னுயிர் இழந்த உடலாகும்
உலகம் மனிதர் உடைமையன்று
உயிர்கள் யாவுக்கும் பொதுவுடைமை
கலகம் செய்யும் மனிதரே
காட்டினை அழிப்பது முறையோ?
உயிர்கள் ஒவ்வொன்றும் உறைந்திட
உறைவிடம் அமைத்தார் இறைவன்
ஆயினும் உங்கள் பேராசையில்
அவற்றின் உறைவிடம் சிதைக்கின்றீர்
காட்டினை அழித்தால் விலங்குகள்
காணும் புகலிடம் எங்கே ?
நாட்டினை நாடிஅவை வரும்
நாசமாகும் சூழல் எல்லாம்
மனிதரே! உணர்வுக் கொள்வீர்
மற்றவரும் வாழ வேண்டும்
தனியாய் நீவிர் வாழ்வதற்கு
தந்ததில்லை உலகின் வளமை
அவசியத்தின் தேவையை அழித்து
ஆடம்பரம் தேடுவது ஏனோ ?
விவசாயத்தின் நிலங்களை அழித்து
வியாபாரம் செய்வதும் ஏனோ?
சுத்தநீர் சுகாதாரக் காற்று
சுற்றுச்சூழல் யாவர்தம் உரிமை
பித்துபிடித்து பேராசையில் மற்றவர்
பிறப்புரிமை நீர்ஏன் மறுக்கின்றீர்?
இறைவன் நம்தந்தை யானால்
இன்னுமேன் பிரிவினை நமக்குள்
கறைபடிந்த சுயநலம் எல்லாம்
கெட்டழித்தது சமத்துவம் தன்னை
மனிதரே! இறைவனின் உடைமையிது
மயங்காதீர் உங்கள் உடைமையென
இனியிதனை இறைவனும் பொறுத்திடார்
இருக்கும் உரிமை அறுத்திடுவார்
காலம் பலவும் பாடங்களே
கண்டீர் அதனில் அனுபவங்களை
புலம்மீறி நீவிர்நெறி பிறழ்ந்தால்
புவியும் பொறுமை இழந்திடும்
கண்ணில் காணும் சுகங்களை
கடமையின்றி களிக்க ஆசித்தால்
கண்ணில் தெரியாக் காரணியால்
காண்பீர் உங்கள் முடிவினையே
பசித்தவர் வயிறு வறண்டிருக்க
பகட்டில் பெருமை அடைவதேன்?
பசித்தவர் யாரும் புசிக்கும்படி
பகிர்ந்து அளித்து பெருமைப்படு
செல்வமும் உன்னிடம் விலகிடும்
செருக்கு யாவும் தொலைந்திடும்
செல்லுமிடம் முடிவில் சவக்குழி
சேர்ந்(த்)தவை உன்னுடன் வந்திடுமோ?
காண்பவை கண்டுக் களித்தபின்
காணாதிருப்பாய் நாள் ஒன்றில்
ஆண்டவை எல்லாம் யாருக்கோ
அடங்கிடும் உன்ஆவி பிரிந்தபின்
சுயநலமாய் உந்தன் வட்டத்தை
சுருக்கிக் கொண்டாய் சிலருக்குள்
அயலானாய் உந்தன் சோதரனையும்
அலட்சியமாய் நீயும் அவமதித்தாய்
இறைவன் நமதுதந்தை யென்பதை
இன்னும் நீயே மறுப்பதனால்
குறையுள்ள மனிதரை நீயும்ஒரே
குடும்பத்தில் ஏற்க மறுக்கிறாய்
நெருப்பும் நீர்,நிலமும் இறைத்தூதர்
நெடுகடலும் காற்றும் பணியாளர்
விருப்பம்போல் வாழ்பவர்க் கவை
விடுக்கும் எச்சரிக்கை கடுமை
மனிதரே! உணர்வுக் கொள்வீர்
மனிதாபி மானம்மங்க விடாதீர்
இனிவரும் நாட்களில் உங்கள்
இதயத்தை மாற்றிக் கொள்வீர்
உயிர்கள் யாவும் அங்கம்
இலக்கம் மிகுதி எனினும்
இறைவனே பேணிக் காக்கிறவர்
குடும்பத் தலைவன் இறைவன்
குறை யொன்றும் காணோம்
வாடும் உயிர்களுக்கு உணவினை
வாரி வழங்குபவர் அவர்
இயற்கை இவ்வீட்டின் அலங்காரம்
இறைவனே உலகை அலங்கரித்தார்
இயற்கை யில்லா இவ்வுலகம்
இன்னுயிர் இழந்த உடலாகும்
உலகம் மனிதர் உடைமையன்று
உயிர்கள் யாவுக்கும் பொதுவுடைமை
கலகம் செய்யும் மனிதரே
காட்டினை அழிப்பது முறையோ?
உயிர்கள் ஒவ்வொன்றும் உறைந்திட
உறைவிடம் அமைத்தார் இறைவன்
ஆயினும் உங்கள் பேராசையில்
அவற்றின் உறைவிடம் சிதைக்கின்றீர்
காட்டினை அழித்தால் விலங்குகள்
காணும் புகலிடம் எங்கே ?
நாட்டினை நாடிஅவை வரும்
நாசமாகும் சூழல் எல்லாம்
மனிதரே! உணர்வுக் கொள்வீர்
மற்றவரும் வாழ வேண்டும்
தனியாய் நீவிர் வாழ்வதற்கு
தந்ததில்லை உலகின் வளமை
அவசியத்தின் தேவையை அழித்து
ஆடம்பரம் தேடுவது ஏனோ ?
விவசாயத்தின் நிலங்களை அழித்து
வியாபாரம் செய்வதும் ஏனோ?
சுத்தநீர் சுகாதாரக் காற்று
சுற்றுச்சூழல் யாவர்தம் உரிமை
பித்துபிடித்து பேராசையில் மற்றவர்
பிறப்புரிமை நீர்ஏன் மறுக்கின்றீர்?
இறைவன் நம்தந்தை யானால்
இன்னுமேன் பிரிவினை நமக்குள்
கறைபடிந்த சுயநலம் எல்லாம்
கெட்டழித்தது சமத்துவம் தன்னை
மனிதரே! இறைவனின் உடைமையிது
மயங்காதீர் உங்கள் உடைமையென
இனியிதனை இறைவனும் பொறுத்திடார்
இருக்கும் உரிமை அறுத்திடுவார்
காலம் பலவும் பாடங்களே
கண்டீர் அதனில் அனுபவங்களை
புலம்மீறி நீவிர்நெறி பிறழ்ந்தால்
புவியும் பொறுமை இழந்திடும்
கண்ணில் காணும் சுகங்களை
கடமையின்றி களிக்க ஆசித்தால்
கண்ணில் தெரியாக் காரணியால்
காண்பீர் உங்கள் முடிவினையே
பசித்தவர் வயிறு வறண்டிருக்க
பகட்டில் பெருமை அடைவதேன்?
பசித்தவர் யாரும் புசிக்கும்படி
பகிர்ந்து அளித்து பெருமைப்படு
செல்வமும் உன்னிடம் விலகிடும்
செருக்கு யாவும் தொலைந்திடும்
செல்லுமிடம் முடிவில் சவக்குழி
சேர்ந்(த்)தவை உன்னுடன் வந்திடுமோ?
காண்பவை கண்டுக் களித்தபின்
காணாதிருப்பாய் நாள் ஒன்றில்
ஆண்டவை எல்லாம் யாருக்கோ
அடங்கிடும் உன்ஆவி பிரிந்தபின்
சுயநலமாய் உந்தன் வட்டத்தை
சுருக்கிக் கொண்டாய் சிலருக்குள்
அயலானாய் உந்தன் சோதரனையும்
அலட்சியமாய் நீயும் அவமதித்தாய்
இறைவன் நமதுதந்தை யென்பதை
இன்னும் நீயே மறுப்பதனால்
குறையுள்ள மனிதரை நீயும்ஒரே
குடும்பத்தில் ஏற்க மறுக்கிறாய்
நெருப்பும் நீர்,நிலமும் இறைத்தூதர்
நெடுகடலும் காற்றும் பணியாளர்
விருப்பம்போல் வாழ்பவர்க் கவை
விடுக்கும் எச்சரிக்கை கடுமை
மனிதரே! உணர்வுக் கொள்வீர்
மனிதாபி மானம்மங்க விடாதீர்
இனிவரும் நாட்களில் உங்கள்
இதயத்தை மாற்றிக் கொள்வீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக