வியாழன், 3 செப்டம்பர், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 15 (உம்வாக்கு எம்மில் நிறையட்டும்)

எம்இதயம்  திறந்து   வைத்தோம்
         எம்மனம்   ஏங்கித்  தேடும்
உம்வாக்கு எம்மை வந்தடைய
         உவந்து இறைவா அருள்புரியும்

எம்இதயம்  தன்னில்  கோலோச்ச
         எண்ணங்களை  ஆண்டு நடத்த
உம்சித்தம் யாதென  கண்டறிய
          உம்வாக்கை  எமக்கு   அனுப்புவீர்

எம்நடத்தை  யாவும்    சீர்படுத்த
           எம்வாழ்வு   முறையை   மேம்படுத்த
உம்சட்டம்   விதிகளை   கடைபிடிக்க
            உம்வாக்கு  எமக்கு  கிடைக்கட்டும்

இறைவனின் வாக்கு   வந்திடவே
            இனிதே   வாழ்வைத்  தந்திடவே
மறைபொருள்   யாவும்  விளங்கிடவே
           மகிமையில்   விரைத்த வந்திடுக

உள்ளத்தில்   உண்மை   நிலைத்திட
            உரையினில் வஞ்சகம் விலகிட
தெள்ளத்   தெளிவாய்  மொழிந்திட
            தேவரீர்    வாக்கை   தந்திடுவீர்

பாதை      மாறிச்  செல்லாமல்
           பாவம் தீமைக்   கொள்ளாமல்
வாதை  எம்மை   அணுகாமல்
          வாக்கினால்  எம்மைக்  காத்தருளும்

அடிமையாய்  உந்தன்   பணிக்கே
         அர்பணித்தே   என்றும்   வாழ்ந்திட
கேடில்லா   உலகினைப்   படைத்திட
          கொடுப்பீர்   உந்தன்   வாக்கினையே

உம்மொரு   சொல்லும்   உருவாக்கும்
           உண்மையாய்   எமக்கு வாழ்வளிக்கும்
இம்மையில்   எம்மை   வழிநடத்தும்
         இனிவரும்   பிறப்பும்   நேர்படுத்தும்

காலைதோறும்   உந்தன்   பேரன்பும்
         கடும்பகல்   உந்தன்    கருணையும்
மாலைதோறும்   வாக்கின்   நிறைவும்
         மலையென   எம்மில்  நிறைந்தனவே

உம்திரு    வாக்கு    தன்பணியை
           உகந்த   முறையில்  முடிக்கும்வரை
உம்மிடம்  திரும்பி  வந்திடாது
           உலகை  விட்டு  அகலாது

காலம்   பலவும்   மாறிடலாம்
           காணும்   காட்சியும்  மறைந்திடலாம்
ஞாலமும்  ஞாயிறும்  மறையலாம்
         ஞான்றும்  உம்வாக்கு   நிலைத்திடுமே

உம்வாக்கு   எம்மில்   நிறையட்டும்
         உரிய பலனை நிறைவேற்றும்
எம்வாக்கில்  தூய்மை  நிலைபெறவே
         என்றும்   எம்மை  வளைக்கட்டும்

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...