என் நினைவு தெரிந்த நாள் முதல் என் முதல் வேலையில் சேரும் வரை என் தந்தையின் கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்து வந்தேன். என் தகப்பன் என் மீது பல நேரங்களில் சினம் கொள்வார். கண்டிப்பார். தண்டிப்ப்பார். அப்போது அவரைப் பல நேரங்களில் வாய்க்குள் திட்டி இருக்கின்றேன் ஏன், சபித்தும் இருக்கின்றேன். பள்ளி பருவத்தில் நான் சாப்பிட்ட பின்னரும் அவர் சாப்பிடும் போது அருகில் உட்கார்ந்திருப்பேன். அரை வயிற்றுக்கு சாப்பிட்டவர் எனக்காக வேண்டுமென்றே மீதி சாப்பாட்டை தட்டில் வைத்து எழுந்து விடுவார். தன் உடல் இயலாமையிலும் முதியவயது வரை அதாவது இறக்கும் வரை குடும்பத்திற்காக உழைத்தவர். அலுவலகத்திலும் பிறருடைய பணியையும் தானே விரும்பி ஏற்றுத் தலையில் சுமந்தவர். அவர் எனக்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவரைச் சூழ்ந்த அனைவரிடத்திலேயும் நேர்மைக்கும் தியாகத்திற்கும் ஒரு நல்ல வழிகாட்டியாய் திகழ்ந்தவர்.
உண்மையிலேயே, தந்தை, தாய் இறைவன் நமக்கு அளித்த மாபெரும் கொடை. தகப்பன் எந்தப் பிள்ளையின் மீது அதிகம் அன்பும் உரிமையும் காட்டுகிறாரோ அந்தப் பிள்ளையை அதிகம் கண்டிப்பார் என்பதனை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.
இவ்வாறே, கடவுளும் தான் யார் மீது அதிக அன்பும் உரிமையும் வைத்திருக்கிறாரோ , அவர்களை கண்டித்தும் தண்டித்தும் திருத்துவார். இது என் வாழ்நாள் முழுதும் கண்ட உண்மை. கடவுள் கண்டிப்பதையோ, தண்டிப்பதையோ வேண்டாமென்று நினைக்காதீர்கள்.
இன்று பலர் தங்கள் பிள்ளைகளை கண்டிக்க கூட அஞ்சுகிறார்கள். அவர்கள் மனம் விரும்பியதை உடனே வாங்கிக் கொடுக்கிறார்கள். தங்களை போன்றே பிள்ளைகளையும் ஆடம்பரத்தில் வளர்த்து செல்வத்தின் மீது அவர்களுக்கு ஈடுபாட்டை திணிக்கிறார்கள். படிப்பிலும் அரைகுறை அறிவு. பணியிலும் மெத்தனம். அதனால் எவ்வழியிலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வளர்கின்றது. சமுதாயத் தீமைகள் உண்டாகின்றன. பிள்ளைகளைக் கண்டிக்காத தண்டிக்காத பெற்றோர்கள் அவர்களின் எதிர்காலத் தவறுகளுக்குக் காரணமாகின்றனர். தங்களுடைய, அல்லது பிறருடைய கஷ்ட நஷ்டங்களையோ பிள்ளைகளுக்கு காட்ட மறுக்கிறார்கள். இப்படி வளரும் குழந்தைகள் எந்த ஒரு தோல்வியையும் எதிர்மறையாக எடுத்து கொள்ளும்.
"பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே. பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள். நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்." (நீதிமொழிகள் 23 : 12 )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக