என்மீது இறங்கும் இறைவா!
என்மீது பேரன்பு கொண்டே
என்பாவம் குறைகள் பாராது
என்னை மன்னித்து ஏற்றருளும்
மனம்போன போக்கில் வாழ்ந்தேன்
மதிகெட்டு குழியில் வீழ்ந்தேன்
சினம்கொள்ளா இறைவனைத் தான்
சினம்கொள்ள வைத்தேனே நான்
என்பாவம் பெரிதென்று நானறிவேன்
என்குற்றம் தலைமேல் அழுத்துகிறது
என்பாவம் முழுதும் நீர்க்கழுவி
என்னை சுத்தம் செய்தருளும்
சேயனாய் எனைநீர் தெரிந்தீர் - நானோ
சேற்றினில் விழுந்து புரண்டேன்
ஆயனே! என்னை மன்னித்தருளும்
அடிமையாய் இனியெனை ஏற்றருளும்
எழுந்து உம்மிடம் வந்தேன்
என்கதை முழுதும் அறிவீர்
விழுந்து உம்முன்னே கதறுகிறேன்
விழிகளில் கண்ணீர் வழிந்தோட
விண்ணிற்கு எதிராய் நான்
விளைத்த தவறுகள் பலவுண்டு
மண்ணின் ஆசையில் உம்மை
மறுதலித்த நாட்கள் பலவுண்டு
வழிதவறிச் சென்ற ஆடென
வகைதெரியா அலைந்து திரிந்தேன்
பழிகளைச் சுமந்து அலைந்தேன்
பரிவுக் காட்டும் என்மீதே
பாவத்தில் நான் பிறந்தேன்
பாவியை நான் வளர்ந்தேன்
தவத்தில் பிறந்தவன் நானன்று
தோஷத்தில் பிறந்தது தானுண்டு
தீச்செயல் நானும் மறந்தேனில்லை
தீவினை உம்கண் முன்னிலையே
துச்சமென கட்டளை வெறுத்தே
துணிந்தே பலபிழைப் புரிந்தேன்
புனிதத்தைப் போக்கிப் பாவியானேன்
பொல்லாங்கு நோக்கிப் பாவித்தேன்
இனியஉம் அன்பை விடுத்தேன்
இடர்வரின் உம்மைப் பிடித்தேன்
குற்றம் மட்டில் நீரென்னை
கண்டித்து அகற்றும் என்பிழையை
அற்றம் இல்லா உம்தீர்ப்பை
ஆகாதென சொல்வர் எவர்?
உள்ளமதில் உண்மை விரும்புகிறீர்
உள்ளொளியை என்னுள் நிரப்பும்
வெள்ளையென என்மனம் கழுவும்
வெண்பனி மேலாய் சுத்தமாக்கும்
மகிழ்வூட்டும் உம்திரு வாக்கால்
மனமும் மகிழ்ந்து களிக்கும்
நெகிழும் நொறுங்கிய எலும்பும்
நெருப்பான நெஞ்சமும் குளிரும்
எனதுக் குற்றம்நீர் பாராது
என்தோஷம் யாவும் துடைத்திடுவீர்
உனது திருவடி நிழலில்
உறைந்திட எனக்கு அருள்செய்வீர்
என்மீது பேரன்பு கொண்டே
என்பாவம் குறைகள் பாராது
என்னை மன்னித்து ஏற்றருளும்
மனம்போன போக்கில் வாழ்ந்தேன்
மதிகெட்டு குழியில் வீழ்ந்தேன்
சினம்கொள்ளா இறைவனைத் தான்
சினம்கொள்ள வைத்தேனே நான்
என்பாவம் பெரிதென்று நானறிவேன்
என்குற்றம் தலைமேல் அழுத்துகிறது
என்பாவம் முழுதும் நீர்க்கழுவி
என்னை சுத்தம் செய்தருளும்
சேயனாய் எனைநீர் தெரிந்தீர் - நானோ
சேற்றினில் விழுந்து புரண்டேன்
ஆயனே! என்னை மன்னித்தருளும்
அடிமையாய் இனியெனை ஏற்றருளும்
எழுந்து உம்மிடம் வந்தேன்
என்கதை முழுதும் அறிவீர்
விழுந்து உம்முன்னே கதறுகிறேன்
விழிகளில் கண்ணீர் வழிந்தோட
விண்ணிற்கு எதிராய் நான்
விளைத்த தவறுகள் பலவுண்டு
மண்ணின் ஆசையில் உம்மை
மறுதலித்த நாட்கள் பலவுண்டு
வழிதவறிச் சென்ற ஆடென
வகைதெரியா அலைந்து திரிந்தேன்
பழிகளைச் சுமந்து அலைந்தேன்
பரிவுக் காட்டும் என்மீதே
பாவத்தில் நான் பிறந்தேன்
பாவியை நான் வளர்ந்தேன்
தவத்தில் பிறந்தவன் நானன்று
தோஷத்தில் பிறந்தது தானுண்டு
தீச்செயல் நானும் மறந்தேனில்லை
தீவினை உம்கண் முன்னிலையே
துச்சமென கட்டளை வெறுத்தே
துணிந்தே பலபிழைப் புரிந்தேன்
புனிதத்தைப் போக்கிப் பாவியானேன்
பொல்லாங்கு நோக்கிப் பாவித்தேன்
இனியஉம் அன்பை விடுத்தேன்
இடர்வரின் உம்மைப் பிடித்தேன்
குற்றம் மட்டில் நீரென்னை
கண்டித்து அகற்றும் என்பிழையை
அற்றம் இல்லா உம்தீர்ப்பை
ஆகாதென சொல்வர் எவர்?
உள்ளமதில் உண்மை விரும்புகிறீர்
உள்ளொளியை என்னுள் நிரப்பும்
வெள்ளையென என்மனம் கழுவும்
வெண்பனி மேலாய் சுத்தமாக்கும்
மகிழ்வூட்டும் உம்திரு வாக்கால்
மனமும் மகிழ்ந்து களிக்கும்
நெகிழும் நொறுங்கிய எலும்பும்
நெருப்பான நெஞ்சமும் குளிரும்
எனதுக் குற்றம்நீர் பாராது
என்தோஷம் யாவும் துடைத்திடுவீர்
உனது திருவடி நிழலில்
உறைந்திட எனக்கு அருள்செய்வீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக