சனி, 26 செப்டம்பர், 2020

விமர்சனங்களும் வாழ்க்கை முறையும் (இன்றைய சிந்தனைக்கு)

முதுகலை பட்ட தத்துவவியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அது அன்று முதல் வகுப்பு.  பேராசிரியர் ஒருவர் வகுப்புக்குள் நுழைந்து கரும்பலகையில் பின்வருமாறு எழுத ஆரம்பித்தார். 
(+)  x (+)  = +
(-)  x  (-)  =  +
(+) x  (-)  =  -
(-)  x  (+)  =  - 
மாணவர்களுக்கு புரியவில்லை. கணித ஆசிரியர் தவறுதலாக நமது வகுப்பிற்குள் நுழைந்துவிட்டாரோ என்று நினைத்து, "சார்!  நாங்க MA (Philosophy)
students"  எனச் சொல்ல பேராசிரியர் சிரித்தார்.  "நானும் கணித ஆசிரியர் இல்லை. தத்துவவியல் ஆசிரியர் தான்.  நான் எழுதியது வாழ்க்கை முறை. 
நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் நம்மை நேர்மறையாக விமர்சித்தால் நாமும் நேரானவர்கள்.  எதிர்மறையானவர்கள் நம்மை எதிர்மறையாக விமர்சித்தாலும் நாம் நேரானவர்கள்.   எதிர்மறையானவர்கள் நம்மை நேர்மறையாக விமர்சித்தாலோ அல்லது நேர்மறையானவர்கள் நம்மை எதிர்மறையாக விமர்சித்தாலோ நாம் நேரானவர்கள் அல்ல.  எனவே நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். இப்படித்தான் நமது நட்பு வட்டாரங்கள், நமது புரிதல்கள், நமது செயல்கள் என பலவும் இந்த formula வில் அடங்கிவிடும்." என்று சொன்னார். 

இந்த formula வை எல்லாவற்றிலும் பொருத்திப் பார்த்தாலும் விடை சரியாக கிடைக்கும். பல எதிர்மறையான மனிதர்களின் எதிர்மறையான விமர்சனங்கள் நமக்கு ஒரு நேர்மறையான உத்வேகத்தை அளித்திருக்கும். இது பல சாதனையாளர்களின் வரலாற்றிலிருந்து ஏன் நம் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

"இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே; அவர்கள் உன்னைப் பகைப்பார்கள். ஞானிகளை நீ கடிந்து கொண்டால், அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர்"  (நீதிமொழிகள் 9 : 8 )
"தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!"  (உரோ  12 : 21 )



கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...