அவர் ஒரு சிறு வர்த்தகர். எளிய முறையில் நேர்மையான வணிகம் செய்து வந்தார். முறையாக அரசாங்கத்திற்கு வரியும் கட்டினார். இவருக்குப் பின் வந்த சிறிய பிற வர்த்தகர்கள் தீடீரென்று முன்னுக்கு வருவதைக் கண்டார். யோசித்தார். "கடவுளே! நீ எனக்கு செல்வதை அள்ளிக் கொடுத்தால் அதிலிருந்து ஐந்தில் ஒரு பங்கு உனக்கு காணிக்கையாக செலுத்துவேன்" என்று வேண்டிக்கொண்டு தன் வேலையைக் காட்ட தொடங்கினார். கள்ள சந்தை, கருப்பு பணம், வரி மோசடி, பதுக்கல், கடன் மோசடி என பல வித்தைகளை செய்து ஒரு ஆண்டிற்குள் நூறு மடங்குக்கு மேலாக வருமானம் ஈட்டினார். அரசாங்க அதிகாரிகளுக்கு வேண்டியதை கொடுத்து சரி கட்டினார். இப்போது கடவுளை சரி கட்ட நினைத்து, சொன்னபடி தான் சம்பாதித்ததில் ஐந்தில் ஒரு பங்கை பணமாகவோ, தங்கமாகவோ வருடா வருடம் அந்த கோவிலுக்கு சென்று நேர்ச்சையாக செலுத்தி வந்தார். இன்று வரையிலும் அப்படியே முறைகேடான வருமானம். ஆனால் முறையாக கோவிலுக்குச் சென்று பொன்னும் பொருளும் செலுத்திவிடுவார்.
அவர் முறைகேடாக சம்பாதித்ததில் கடவுள் எந்த உதவியும் செய்யவில்லை. தனது பாவத்தை போக்க கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க முயலுகிறார். இந்த உலகில் படைக்க பட்டவை அனைத்தும் இறைவனுடையவை அப்படியிருக்க இறைவன் பெயரில் தவறாக தவறான முறையில் வந்த வருமானத்தை உங்கள் காணிக்கைகளை இறைவனுக்கு லஞ்சமாக கொடுக்க முயலாதீர்கள். கொள்ளையடித்தவனும், பல கொலைகளை செய்தவனும், முறைகேடான வருமானத்தை ஈட்டியவனும் இன்று தங்கள் காணிக்கைகளை தங்கமாக செலுத்துகிறார்கள். இதனால் தங்கம் ஒரு இடத்தில வீணாக தேங்கி கிடக்கிறது. ஏழைகளுக்கு தங்கம் வாங்க முடியாத ஒரு பொருளாகிறது. பெண்களை வைத்திருக்கும் ஏழைகட்கு திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில், பயனற்ற முறையில் தங்கம் ஒரு இடத்தில் சேருகிறது. இன்னும் மேலாக, தங்க இறக்குமதியால், நமது நாட்டின் அந்நிய செலவாணி பாதிக்கப்படுகிறது.
பலர் தங்கள் சேமிப்பை தங்கமாக பதுக்கி வைக்கின்றனர்.
"பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும்; நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்." (நீதிமொழிகள் 21:3)
"வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்." (நீதி 12:9)
"நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்".( திருக்குறள் 171 )
எனது குறள்கள்
அழல்சுடு தகர்அவி உணவுவிரும் பாரவர்
அவைநீக்கின் சாலப் பெற்
அழல்சுடு தகர்அவி உணவுவிரும் பாரவர்
அவைநீக்கின் சாலப் பெற்
படைத்தவ ரிகழும் படைத்ததுப் படைப்பின்
பசியுற்றார் அகடு காண்ப

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக