கதிரவன் வானில் மறைந்திட
காரிருள் தோன்றும் இவ்வேளை
மதியவன் தோன்றி வட்டமிட
மின்மினி போல் விண்மீன்கள்
அதிசயமாய் விண்ணில் மின்னிட
அலைந்த உடலும் அயர்ந்திட
புதியநாள் ஒன்றைக் காண
பூத்தது அமைதி இரவே
இந்தநாள் இனிய நாளாய்
இறையருள் நிறைந்த நாளாய்
தந்தமைக்கு நன்றி சொல்வேன்
தந்தையாம் இறைவன் உமக்கே
எந்தக்குறை எனக்கின்றி இன்றே
எத்தனை நன்மை செய்தீர்
வந்தன வரங்கள் பலவும்
வாழ்த்துவேன் உம் அன்பிற்காய்
அளித்த வாக்கினை நிறைசெய்து
ஆசிவழங்கி சிறப்புறச் செய்தீர்
களித்த என்மனமும் உமைபாடும்
களைத்த உடலும் துதிபாடும்
துளிர்த்த வாழ்வில் நிந்தன்
துணை யொன்றே கதியென்றேன்
ஒளிர்ந்த உம்முக ஒளியால்
ஓங்கி உயரச் செய்தீர்
அமைதிக் கொண்டது என்மனமும்
ஆற்றல் பெற்றது என்திறனும்
சுமைகளும் எனக்கு சுகமாயின
சூழலும் எனக்குச் சாதகமாயின
இமைமூடும் இவ்வேளை இந்நாளில்
இறைவன் நீர்செய்த நன்மைக்காய்
உமைபாடும் எந்தன் நாவும்
உளமார போற்றுவேன் நானும்
இவ்விரவு முழுதும் உம்தூதர்
இடைவிடாது எமைக் காக்க
எவ்வினையும் தீண்டாது உம்மருள்
எம்முடன் இரவும் நிலைக்க
ஒவ்வாத சிந்தனையும் ஓடிவிட
ஓய்வுதரும் நல்ல உறக்கம்
இவ்வேளை நீரும் தருவீர்
இனியக் காலை மலரும்வரை
புத்துயிர் அளிக்க நித்திரையும்
புதுத்தெம்பு அளிக்க உறக்கமும்
சித்தம் சீர்படுத்த இளைப்பாற்றியும்
சத்தமிலா மனதின் அமைதியும்
நித்தம் உமைக்காணும் கனவுகளும்
நித்திரையில் ஆழ்ந்த ஆழ்மனமும்
வித்தகர் நீர்தரும் ஆறுதலால்
விடியும் மட்டும் கிடைக்கட்டும்
காரிருள் தோன்றும் இவ்வேளை
மதியவன் தோன்றி வட்டமிட
மின்மினி போல் விண்மீன்கள்
அதிசயமாய் விண்ணில் மின்னிட
அலைந்த உடலும் அயர்ந்திட
புதியநாள் ஒன்றைக் காண
பூத்தது அமைதி இரவே
இந்தநாள் இனிய நாளாய்
இறையருள் நிறைந்த நாளாய்
தந்தமைக்கு நன்றி சொல்வேன்
தந்தையாம் இறைவன் உமக்கே
எந்தக்குறை எனக்கின்றி இன்றே
எத்தனை நன்மை செய்தீர்
வந்தன வரங்கள் பலவும்
வாழ்த்துவேன் உம் அன்பிற்காய்
அளித்த வாக்கினை நிறைசெய்து
ஆசிவழங்கி சிறப்புறச் செய்தீர்
களித்த என்மனமும் உமைபாடும்
களைத்த உடலும் துதிபாடும்
துளிர்த்த வாழ்வில் நிந்தன்
துணை யொன்றே கதியென்றேன்
ஒளிர்ந்த உம்முக ஒளியால்
ஓங்கி உயரச் செய்தீர்
அமைதிக் கொண்டது என்மனமும்
ஆற்றல் பெற்றது என்திறனும்
சுமைகளும் எனக்கு சுகமாயின
சூழலும் எனக்குச் சாதகமாயின
இமைமூடும் இவ்வேளை இந்நாளில்
இறைவன் நீர்செய்த நன்மைக்காய்
உமைபாடும் எந்தன் நாவும்
உளமார போற்றுவேன் நானும்
இவ்விரவு முழுதும் உம்தூதர்
இடைவிடாது எமைக் காக்க
எவ்வினையும் தீண்டாது உம்மருள்
எம்முடன் இரவும் நிலைக்க
ஒவ்வாத சிந்தனையும் ஓடிவிட
ஓய்வுதரும் நல்ல உறக்கம்
இவ்வேளை நீரும் தருவீர்
இனியக் காலை மலரும்வரை
புத்துயிர் அளிக்க நித்திரையும்
புதுத்தெம்பு அளிக்க உறக்கமும்
சித்தம் சீர்படுத்த இளைப்பாற்றியும்
சத்தமிலா மனதின் அமைதியும்
நித்தம் உமைக்காணும் கனவுகளும்
நித்திரையில் ஆழ்ந்த ஆழ்மனமும்
வித்தகர் நீர்தரும் ஆறுதலால்
விடியும் மட்டும் கிடைக்கட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக