ப்யுகுலே, பசிபிக் பெருங்கடலில் அமைத்த ஒரு குட்டித் தீவு அது. அடர்ந்த காடுகளாலும் செழித்த இயற்கை வளங்களாலும் நிறைந்த ஒரு சொர்க்க பூமி அது. அங்கு நூற்றுக்குச் சற்று குறைவான ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நவநாகரீகம் தெரியாது இயற்கையோடு இயற்கையாய் ஒரே குடும்பமாய் மகிழ்ச்சியாக அமைதியாக கிடைத்ததை கொண்டு பகிர்ந்து உண்டு வாழ்ந்து வந்தனர். அதுவரை அந்தத் தீவை அந்நியர் நெருங்கியது இல்லை.
ஹென்றி ஹிக்கின்ஸ் ஒரு சுற்றுலா ஆராய்ச்சியாளர் (Tourism Explorer). பல்வேறு அரிய இடங்களுக்கு சென்று அதன் அழகை ஒளிப்பதிவிட்டு யூடூப்பில் காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது அவரது தொழில். அன்று வேறு ஒரு இடத்திற்கு செல்வதற்காக தனது இயந்திர படகில் புறப்பட்டார். போகின்ற வழியில் படகு மிதந்து வந்த ஒரு மரத்துண்டின் (Log) மீது மோதி அதன் இயக்கு விசிறி (propeller) பழுதடைய துடுப்பு மூலம் முடிந்தவரை படகை செலுத்தி இளைப்பாற தான் அருகில் கண்ட தீவிற்கு வந்தடைந்தார். அது தான் ப்யுகுலே தீவு. படகிலிருந்த தன் எல்லாப் பொருட்களையும் இறக்கி கடற்கரையில் ஒரு கூடாரம் அமைத்தார். பின்பு சாட்டிலைட் தொலைபேசி மூலம் உதவிக்காக தொடர்பு கொள்ள முயற்சித்த வேளை, திடீரென்று முப்பது முதல் நாற்பது பேர் கொண்ட அந்த ஆதிவாசி கூட்டம் இவரை சூழ்ந்து கொண்டது. இவரை அவர்கள் வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, தன் சைகை மூலம் நடந்ததை எடுத்து கூற முயன்றார்.
அவர்கள் பார்வை பின்பு அவர் கொண்டு வந்த பொருட்கள் ஒவ்வொன்றின் மீதும் விழ ஆரம்பித்தது. இதை பயன்படுத்தி தன் வீடியோ காமிராவால் அவர்கள் ஒளிப்பதிவு செய்ய அவர்கள் அதை கண்டு அஞ்சி அவர்கள் அவரைத் தாக்க முயன்றார்கள். அவர்களுக்கு தான் ஒளிப்பதிவு செய்த அவர்கள் ஒவ்வொரு உருவத்தையும் காண்பித்தபோது வியப்பில் உறைந்து போனார்கள். பின்பு அவரை கூட்டி கொண்டு தங்கள் தீவு முழுதும் சுற்றி காட்டினார்கள். அவரும் அவற்றை ஒவ்வொன்றாக ஒளிப்பதிவு செய்தார். அங்கிருந்த வளத்தின் மதிப்பை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் தங்கள் உறவுகளின் மதிப்பை உணர்ந்திருந்தார்கள். ஆம், அந்த தீவில் விலை மதிக்கமுடியாத அரிய கற்களும், அரிய வகை மரங்களும், விலைமதிப்பில்லா கனிம வளங்களும் நிறைந்திருந்தன. எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்த ஹிக்கின்ஸ் தான் பல்வேறு இடங்களில் ஒளிப்பதிவு செய்த நவநாகரீக உலகின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் உணவு வகைகளையும் அவர்களுக்கு திரையிட்டு காட்டினார்.
இப்படியே ஒரு மாதங்கள் கடந்துவிட்டன.ஒரு மாதமாக திரையில் கண்ட காட்சிகள் அனைத்தும் அந்த ஆதிவாசிகளின் மனதில் ஏதோ ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. அங்கிருந்த வளங்களின் காட்சியும் ஹிக்கின்சின் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த, ஒரு சில வாரங்களுக்குள் அந்த தீவுக்குள் இன்னும் பல புதிய மனிதர்கள். ஆதிவாசிகள் அவர்களையும் ஏற்றுக்கொண்டனர் உண்மை நிலை அறியாது. இன்னும் சில வாரங்களுக்குள் சில கப்பல்கள் வந்தன சில இயந்திரங்களோடும் பல வல்லுனரோடும். அங்கிருந்த ஆதிவாசிகள் தனித்தனியே பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். முடிவில் தீவின் வளங்கள் யாவும் சூறையாடப்பட்டன. மரங்கள் பல வெட்டப்பட்டு பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின. மொத்தத்தில் அந்த தீவு ஒரு வணிக சந்தையாகவும் ஒரு உல்லாசபோக்கிடமாகவும் மாறியது. அந்த ஆதிவாசிகள் தங்கள் உறவை பிரிந்தனர், அழகிய இயற்கை வாழ்வை இழந்து அடிமைகளாய் பல நாடுகளில் தொழில் செய்தனர்.
இப்படித்தான் நம் வாழ்விலும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பல கவர்ச்சிகள் திணிக்கப்படுகின்றன. காணும் கவர்ச்சிகள் நம்மை வருங்காலம் அடிமைப்படுத்தும் என்ற நிலை அறியாது நம்மையே அந்த கவர்ச்சிகளுக்கு இப்போது அடிமையாக்குகின்றோம். இனிய உறவுகளை மறந்து, இறைவன் நமக்கென்று கொடுத்த இயற்கையை மறந்து, அன்பை மறந்து, பகிர்தலை மறந்து, பாசத்தை மறந்து, மனிதாபிமானத்தை மறந்து நாகரீக, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் விலங்குகளாய் மாறிக்கொண்டிருக்கிறோம். மீன்கள் தண்ணீரில் வாழ்ந்தால் தான் வாழ்க்கை. மனிதன் தன் இயல்பில் வாழ்வது தான் வாழ்க்கை. இயல்பை இழந்தால் வாழ்வினை இழப்பது உறுதி. நம்மைச் சுற்றிலும் பலப்பல கவர்ச்சித் திணிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. விழித்து கொள்வோம் இப்பொழுதே. முடிவு செய்வோம் தூண்டிலில் மீனாக அல்லது நம்மை ஆண்டிடும் "நாமாக".
இறைவன் நமக்கென்று கொடுத்த வாழ்வில் நிறைவடைவோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக