புதிய ஆண்டினைத் தந்தீர்
புதுமைகள் பலவும் செய்து
உதயமாகிய இந்த ஆண்டில்
உம்மோடே இருக்கணும் இறைவா !
புதுமைகள் பலவும் செய்து
உதயமாகிய இந்த ஆண்டில்
உம்மோடே இருக்கணும் இறைவா !
நன்றிகள் பலவும் உமக்கே
நாங்கள் சொல்வோம் என்றுமே
இன்றுவரை மேலாய் எம்மை
இனிதாய் நடத்தி வருகின்றீர்
ஓராண்டு உமக்கோர் நாள்போன்று
ஓய்ந்திடாமல் எமைக் காக்க
பாராண்டு நடத்தும் பரமதந்தை
பாதம் பணிந்து வணங்கிடுவோம்
நாங்கள் உந்தன் அடிமைகள்
நாளும்நீரே கட்டளை இடும்
எங்கள் வாழ்வும் உம்மதே
என்றும் நீரே வழிநடத்தும்
சுயத்தின் வண்ணம் நடக்காது
சூழ்நிலை எம்மை மாற்றாது
தூயத்தந்தை வழிகள் நடந்து
தூதராய் எம்மை மாற்றிடும்
ஆண்டு முழுதும் எம்மோடு
அருகில் நின்று ஆண்டருளும்
தொண்டு உமக்கே யாம்புரிய
தொழுது நின்றோம் உம்மிடமே
வறுமை எங்கும் ஒழியனும்
வாட்டும் பிணிகள் தொலையனும்
ஒருமைப்பாடு உலகில் நிலவணும்
ஓங்கும் வன்முறை சாகணும்
அன்பும் நீதியும் ஆளணும்
ஆதிக்கம் அடக்குமுறை தீரணும்
பண்பும் பாசமும் பெருகணும்
பொய்யும் புரட்டும் நீங்கனும்
உம்மரசு ஒன்றே தீர்வாக
உலகை ஆளும் உம்கரத்தால்
நம்பிக்கை வேர்விட்டு பரவ
நீதியால் எம்மை ஆண்டிடும்.
உம்மை நாங்கள் அறிந்ததுபோல்
உலகம் முழுதும் அறியணும்
செம்மை வாழ்வு அடைந்திட
சேர்ந்திடும் மக்கள் யாவரையும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக