விறகின்மேல் நெருப்பு கொழுந்து
விட்டு எரிவது போன்றும்
விறைக்கும் நீரும் கொதிக்கும்
வண்ணம் நிலைமை இருக்கும்
ஆதலின் உம்பெயர் எதிரிக்கும்
அறிய வேற்றினம் நடுங்கும்
மோதலில் மேகம்தீ பரப்பும்
மலைகள் உம்முன் உருகிஓடும்
தம்மை நம்பும் அடியார்க்கு
தக்கபதில் தரும் கடவுள்
உம்மை அன்றி வேறுயார்?
உதவிடும் புகலிடம் வேறேது?
மகிழ்ச்சியாய் நேர்மை தனைக்
மதிப்போரும் உம்மையும் உம்வழி
புகழ்ச்சி செய்வோரும் உம்துணை
பெற்றிட நீரும் விரைகின்றீர்
நெடுங்காலமாய் பாவம் செய்திருக்க
நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?
கடும்பாவம் உம்முன் செய்தோம்
கண்டித்தீர் உந்தன் சினத்தால்
நாங்கள் தீட்டப்பட்ட வரானோம்
நேரிய எம்செயல்கள் நைந்தன
எங்கள் தீச்செயல் காற்றைப்போல்
எம்மை அடித்துச் செல்கின்றன
உம்பெயர் போற்றுவார் இல்லை
உம்மைப் பற்ற முயல்பவரில்லை
உம்முகம் எமக்குநீர் மறைத்தீர்
உளைசேற்றில் எம்மை அழியவிட்டீர்
ஆயினும் நீரேஎம் தந்தை
ஆயனின் மந்தை நாங்கள்
சேயில்லை களிமண் யாமும்
செய்திடுவீர் குயவனே உம்கையால்
கடுஞ்சினம் கொள்ளாதீர் இறைவா
கருகிப் போவோம் இலைபோல்
கடுமை குற்றமும் நினையாதிரும்
கண்ணோக்கும் உம்மக்கள் எம்மீதே
உம்மக்கள் எமக்கு இழைக்கப்படும்
உளைச்சலை அநீதியைக் கண்டும்
சும்மாக நீரும் இருப்பீரோ ? - மனிதர்
சூழ்ச்சியால் எம்மை வதைப்பீரோ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக