மண்கொண்டு நிறையும் பாதாளம் நிறையாது
எண்கொள்ளா பேராசை மனது
எண்கொள்ளா பேராசை மனது
அட்டைப்பூச்சி அருந்தும் குருதிபோல் உறிஞ்சும்
வேட்டையார் அடுத்தவர் நலன்
பேராசையெனும் கொடுந்தீ எரிக்கும் இல்லான்
பேணும் ஒற்றைக் குடி(ல்)
இல்லாரை வாட்டும் பசியின் கொடுமை
செல்வரைக் கொல்லும் சாபம்
எழுதலை முறையினும் நீங்காப் பாவம்
ஏழையை வஞ்சிக்கும் செயல்
கள்வரினும் கேடு செல்வம் சேர்க்கயவர்
கடுங்கோடை ஏழைக்கு அவர்
தானம் தர்மமெனினும் பாவம் தீராது
தன்தேவை மிஞ்சிய அவா
கோயிற்சிலை கொடை கையூட்டு கொடுப்பர்
கொடியவர் கொள்ளையில் கொண்டு
அகடுக்கு ஊண்தேடும் ஏழையர் இருக்க
பகட்டுக்கு சேர்ப்பவன் சவம்
செல்வம் கருத்துடை மாந்தர் எவ்வழியினும்
செல்வர் மற்றவர் தீதுற
அவாவெனும் தொற்று தன்னுடன் சேர்க்கும்
அழுக்காறு அகந்தை என்றே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக