தன்னொளி பரப்பும் ஞாயிறு
திங்கள்உம் முறையாய் வந்திட
திங்கள்உம் முறையாய் வந்திட
பொன்னோடு மிஞ்சும் செவ்வாய்
பூரிப்பு தன்னில் பூத்ததுவே
இன்னருவி யாழன் இசைமீட்டிட
இறையோடு வெள்ளி துதிபாடிட
என்நேச னிடமிங்கு வந்திட்டேன்
எந்தை இறைவா போற்றி
பூரிப்பு தன்னில் பூத்ததுவே
இன்னருவி யாழன் இசைமீட்டிட
இறையோடு வெள்ளி துதிபாடிட
என்நேச னிடமிங்கு வந்திட்டேன்
எந்தை இறைவா போற்றி
ஆசிபெறவே எந்தன் சிரமதை
மாசில்லா மன்னவன் உம்மிடம்
நெஞ்சுப்பங் குனியுமுன் வீழ்ந்து
கெஞ்சித் திரைகடல் போல்நின்றன்
வஞ்சித்தவை காசின்பமென் றலைய
அஞ்சிடும் ஆனிரை கலங்கிநிற்க
எஞ்சியது தன்னுள் ஆடியடங்க
துஞ்சிய தொய்வுற்ஆ வணிகம்
கிஞ்சித்தும் புரட்டா சிந்தனையும்
கஞ்சிக்கும் தீராகொள்ஐப் பசியும்
தக்கார்த் திகைப்பும் திரிபெனவும்
ஊக்கார் உறுமார் கழிந்ததென
எக்காலமும் உண்டோ இதுவென
இக்காலம் வினவினேன் இறையை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக