ஆன்மா எனும் வேதனையுறும்
அபலைப் பெண் நான்
என்னன்புக் காதலரைத் தேடி
ஏங்கும் என்மனம் வாடி
வாடிய எனது உள்ளதை
வசீகரிக்க வாராயோ நான்
தேடியக் காதலனே என்றுத்
தேம்பும் எனதுப் பாடல்
ஓஎன் அன்பரே! என்காதலரே!
ஓடி எங்குப் போனீர் ?
நீர்ஏன் என்னைஉம் காதலில்
நீங்கும் வண்ணம் விட்டீர்?
மையம் கொண்ட உமதுபெரும்
மையலால் எனைஅணைத் தவரே
அபயம் நான் தேடுகையில்- உன்
அடியாள் என்னைக் காணீரோ?
பாசத்தோடு நீர்எனை தேடியபோது
பாராமுகம் காட்டி ஓடியமனது
மோசம் செய்வோர் ஆசைவலையில்
மௌனம் பாராட்டி வீழ்ந்ததே
ஆசை வார்த்தைப் பேசுவோர் - நான்
அழும் வேளை ஏசுவோர்
நீசமனிதன் உறவை நம்பி
நான் அழுதேன் தேம்பி
எங்கிருந்தோ எனைக் காண்கின்றீர்
எனது ஏக்கங்களை அறிகின்றீர்
ஏங்கிய என்மனதிற்கு உந்தன்
எண்ணம் தான் தேற்றம்
எங்கு நான் சென்றாலும்
எப்பொழுதும் உம் நினைவே
இங்கு நான் வாழ்வதிலும்
இன்புறுவேன் உம் நினைவால்
அள்ளிக் கொள்ள வாராயோ - என்
ஆசைதீர அணைப்பாயோ? நின்
துள்ளி விளையாடும் மானென
துரத்திப் பிடிக்க வருவாயோ?
உனைக் காணாது தவிக்கிறேன்
உள்ள மெலாம் தகிக்கின்றேன்
உனைக் கண்டால் உடல்பிரியும் - உன்
உயிரினிலே என்உயிர் சேரும்
அபலைப் பெண் நான்
என்னன்புக் காதலரைத் தேடி
ஏங்கும் என்மனம் வாடி
வாடிய எனது உள்ளதை
வசீகரிக்க வாராயோ நான்
தேடியக் காதலனே என்றுத்
தேம்பும் எனதுப் பாடல்
ஓஎன் அன்பரே! என்காதலரே!
ஓடி எங்குப் போனீர் ?
நீர்ஏன் என்னைஉம் காதலில்
நீங்கும் வண்ணம் விட்டீர்?
மையம் கொண்ட உமதுபெரும்
மையலால் எனைஅணைத் தவரே
அபயம் நான் தேடுகையில்- உன்
அடியாள் என்னைக் காணீரோ?
பாசத்தோடு நீர்எனை தேடியபோது
பாராமுகம் காட்டி ஓடியமனது
மோசம் செய்வோர் ஆசைவலையில்
மௌனம் பாராட்டி வீழ்ந்ததே
ஆசை வார்த்தைப் பேசுவோர் - நான்
அழும் வேளை ஏசுவோர்
நீசமனிதன் உறவை நம்பி
நான் அழுதேன் தேம்பி
எங்கிருந்தோ எனைக் காண்கின்றீர்
எனது ஏக்கங்களை அறிகின்றீர்
ஏங்கிய என்மனதிற்கு உந்தன்
எண்ணம் தான் தேற்றம்
எங்கு நான் சென்றாலும்
எப்பொழுதும் உம் நினைவே
இங்கு நான் வாழ்வதிலும்
இன்புறுவேன் உம் நினைவால்
அள்ளிக் கொள்ள வாராயோ - என்
ஆசைதீர அணைப்பாயோ? நின்
துள்ளி விளையாடும் மானென
துரத்திப் பிடிக்க வருவாயோ?
உனைக் காணாது தவிக்கிறேன்
உள்ள மெலாம் தகிக்கின்றேன்
உனைக் கண்டால் உடல்பிரியும் - உன்
உயிரினிலே என்உயிர் சேரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக