சனி, 1 ஆகஸ்ட், 2020

காதலரைத் தேடி ((தமிழ் கவிதை)) Part-2



ஆன்மா    என்னும்  வாடுகின்ற
      அழகிய   மலர்   நான்
தேன்பா   சுரக்கத்  தெரியா
       தேம்பும்  பாடல்  இசைத்திடும்

காதலரே!   நின்மொழிக்    கேட்பின்
      காடும்   கவி பாடும்
முதலோனே!    நின்முன்   நிற்பின்
      முழுநிலவும்    அழகுக்  குறையும்

வானம்   மெட்டு   இசைக்கும்
      வானவர்க்  குழு  பாட்டிசைக்கும்
தேனமுதும்  சுவையற்றுப்  போம்
      தெய்வக்   காதலரே   நீர்ப்பேசும்

கானக்குயில்    கவிப்    பாட
      காற்றின்   ஒலிக்    குழலாட
எனக்கு    உடையவர்   நீரே
      என்று   இசைத்திடும். பண்பட

நானென்று  எதுவும்   இல்லை
       "நான்"ஆக    நீர்    இருக்க
தானென்று  எனக்கில்லை   நின்
       தாள்படி   அமர்ந்து  இருப்பேன்

என்பிறழில்   நான்  வீழ்வதெனில்
       என்றும்  அதுகோடைக்   காலம்
உன்நிழலில்  நான்   வாழ்வதெனில்
       உள்ளமகிழ்   வசந்த   காலம்

அன்பரே!   உன்மீது   காதல்கொண்டு
       அலைகிறேன்   அங்கு  மிங்கும்
இன்பமுத்தம்   நீர்   எனக்கிட்டு
       இன்பப்    பேறில்   சேர்ப்பாயாக

உயிரும்  நீரன்றோ!  -   என்
     உணர்வும்  நீர்   அன்றோ !
துயிலும்   வேளையும்   நின்
     துதிதனை  பாடுவேன்  நான்

நினைவில்  நீர்நிற்பீர் -  எந்த
      நிலையிலும்   துணை   இருப்பீர்
கனவிலும்   உமைக்   காணத்தான்
      காத்திருந்தேன்   வெகு   நாளாய்

என்   மூச்சாய்நீ    நின்றாய்
      என்பேச்சில்  பொருள்  தந்தாய்
நின்அச்சில்  எனை   வார்த்தாய்
      நெற்றிஉச்சில்  எனை  நுகர்ந்தாய்



கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...