ஆண்டவரில் நான் மகிழ்ந்திருப்பேன்
ஆதலின் குறை எனக்கில்லை
மீண்டென் ஆத்துமம் தன்னை
மிகுந்தக் களிப்பில் நிறைத்தார்
அவரே எனது ஆற்றலுமானார்
அதனால் எனதுள்ளம் அக்களிக்கும்
எவரே என்னை எதிர்த்தாலும்
எதற்கும் அஞ்சிடேன் நான்
என்துணை நீராய் இருப்பதனால்
எக்கவலை இன்றி இளைப்பாறுவேன்
எத்துணை இடர் வரினும்
என்னுள்ளம் துயர் காணாது
களைப்புற்ற ஆன்மாவும் களிகூரும்
கர்த்தரே என்னை மேய்ப்பதனால்
இளைப்பாறும் எந்தன் உள்ளமும்
இறைவன் சமூகம் இருப்பதனால்
துயருற்ற வேளையில் துணையானார்
தூக்கியெனை தோளில் சுமந்தார்
அயருற்றவர் அன்றுஎன் இறைவன்
அல்லும் பகலும் காத்திடுவார்
இருளும் இடுக்கணும் சேர்ந்தாலும்
இனியேதும் அஞ்சாது உள்ளம்
அருளும் இரக்கமும் எனைசூழும்
ஆண்டவர் இல்லம் செல்வேன்
திக்கற்றோர் துணையும் ஆனார்
தீயோரின் பகையும் ஆவார்
நீக்கமற எங்கும் நிலைத்து
நிறைந்த அவர்தம் பேரன்பு
நீதியும் அன்பும் நிறைந்தவராம்
நீடித்தப் பொறுமை உடையவராம்
ஆதியும் அந்தமும் ஆனவராம்
அனைத்தும் ஆனவர் என்னிறைவன்
ஒளியும் வாழ்வின் வழியுமானவர்
ஒருவராய் எல்லாம் படைத்தவர்
குளிரும் உள்ளங்கள் ஆறுதலால்
கூப்பிடும் குரல் கேட்டிடுவார்
வலிமை மிகுந்தவர் என்தலைவர்
வல்லச் செயல்கள் செய்திடுவார்
வலிகள் யாவும் நீக்கிடுவார்
வாஞ்சையாய் நம்மை தேற்றிடுவார்
உன்னதர் நிழலில் வாழ்ந்திடுவேன்
உறைவிடம் எனக்கு அவரிடமே
முன்னவர் முகவொளி நோக்கி
முனைந்து நான் நடந்திடுவேன்
பணிந்திடும் என்சிரம் தாழ்ந்து
பண்பாய் என்கரம் உயர்ந்து
அணிந்திடும் என்செவி அவர்குரலை
அழைத்திடும் என்வாய் அவர்புகழை
வாயார நான் வாழ்த்திடுவேன்
வானவர் தலைவரை நோக்கி
தீயாகப் பரவும் வண்ணம்
தித்திக்க உம்புகழ் உரைப்பேன்
கவித்திறன் அளித்தவர் அவரே
களித்துப் பாடும் என்மனமே
குவிந்திடும் கைகள் அவரிடமே
குனிந்திடும் புறமும் அவர்பதமே
ஆதலின் குறை எனக்கில்லை
மீண்டென் ஆத்துமம் தன்னை
மிகுந்தக் களிப்பில் நிறைத்தார்
அவரே எனது ஆற்றலுமானார்
அதனால் எனதுள்ளம் அக்களிக்கும்
எவரே என்னை எதிர்த்தாலும்
எதற்கும் அஞ்சிடேன் நான்
என்துணை நீராய் இருப்பதனால்
எக்கவலை இன்றி இளைப்பாறுவேன்
எத்துணை இடர் வரினும்
என்னுள்ளம் துயர் காணாது
களைப்புற்ற ஆன்மாவும் களிகூரும்
கர்த்தரே என்னை மேய்ப்பதனால்
இளைப்பாறும் எந்தன் உள்ளமும்
இறைவன் சமூகம் இருப்பதனால்
துயருற்ற வேளையில் துணையானார்
தூக்கியெனை தோளில் சுமந்தார்
அயருற்றவர் அன்றுஎன் இறைவன்
அல்லும் பகலும் காத்திடுவார்
இருளும் இடுக்கணும் சேர்ந்தாலும்
இனியேதும் அஞ்சாது உள்ளம்
அருளும் இரக்கமும் எனைசூழும்
ஆண்டவர் இல்லம் செல்வேன்
திக்கற்றோர் துணையும் ஆனார்
தீயோரின் பகையும் ஆவார்
நீக்கமற எங்கும் நிலைத்து
நிறைந்த அவர்தம் பேரன்பு
நீதியும் அன்பும் நிறைந்தவராம்
நீடித்தப் பொறுமை உடையவராம்
ஆதியும் அந்தமும் ஆனவராம்
அனைத்தும் ஆனவர் என்னிறைவன்
ஒளியும் வாழ்வின் வழியுமானவர்
ஒருவராய் எல்லாம் படைத்தவர்
குளிரும் உள்ளங்கள் ஆறுதலால்
கூப்பிடும் குரல் கேட்டிடுவார்
வலிமை மிகுந்தவர் என்தலைவர்
வல்லச் செயல்கள் செய்திடுவார்
வலிகள் யாவும் நீக்கிடுவார்
வாஞ்சையாய் நம்மை தேற்றிடுவார்
உன்னதர் நிழலில் வாழ்ந்திடுவேன்
உறைவிடம் எனக்கு அவரிடமே
முன்னவர் முகவொளி நோக்கி
முனைந்து நான் நடந்திடுவேன்
பணிந்திடும் என்சிரம் தாழ்ந்து
பண்பாய் என்கரம் உயர்ந்து
அணிந்திடும் என்செவி அவர்குரலை
அழைத்திடும் என்வாய் அவர்புகழை
வாயார நான் வாழ்த்திடுவேன்
வானவர் தலைவரை நோக்கி
தீயாகப் பரவும் வண்ணம்
தித்திக்க உம்புகழ் உரைப்பேன்
கவித்திறன் அளித்தவர் அவரே
களித்துப் பாடும் என்மனமே
குவிந்திடும் கைகள் அவரிடமே
குனிந்திடும் புறமும் அவர்பதமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக