சனி, 1 ஆகஸ்ட், 2020

காதலரைத் தேடி (தமிழ் கவிதை) Part-3


ஆன்மா   எனும்   நொறுங்கிய
       அடியாள்  நான்   -  எந்தன்
தண்மான்   தலைவனை  நோக்கித்
        தவித்திடும்   பாடல்  இது

நேசரே !   உந்தன்  நேசத்தில்
       நான்   என்னை மறந்தேன்
தாசமாய்   உன்னடிச்  சேர
       தாமதம்   அன்றி  விரைகிறேன்

உன்காதலில்  வீழ்ந்தோர்   பலகோடி
      உவப்புற    நானும்    அதைத்தேடி
காதலை   நீயும்  விரும்பியேற்றுக்
      கனிவாய்  வாழ்வில் ஒளியேற்று

குன்றா   குணத்தோனே !   என்றும்
       குறையா  அருளோனே!  நான்
மன்றாடும்    வேளை  என்னகம்
       மகிழ      நீயே   அருள்வாய்

தலைவ !    தழுவிடும்  என்னை
       தலைவணங்கும் உன் பணிப்பெண்
மலைபோல்  துயர்வரினும்  யான்
       மலைத்திடேன்   நின்  துணையிருக்க

நோய்கண்டு   போனேன்     காதல்
        நோக்கண்டு   போனேன்  -- சாதல்
மெய்யுண்டு   எனினும்  நிந்தன்
        மேல்சாய்ந்து  சாதல்  எனக்கினிது

வருந்தினேன்  மெய்  வருந்தினேன்
      வதங்கிய   மலர்   என்றுநானும்
அருந்திய    அமுதும்  விடமென்ப  - நின்
      அருகாமை   எனை   விட்டகல

காதலரே !   காணும்   என்நிலையை
       கானல்நீர்    போல்  வறண்டிருக்க
ஆதலால்  உனைத்தேடும்  அடியாள்
       அகம்குளிர   நீர்   பொழிவாய்

களிப்பூட்டும்  எனைநின்  பார்வையால்
        கவிப்பாடும்   எனது   சிறுநாவும்
சலிப்படையா   கருணை   உனது
        சகித்திடும்    என்குறை   யாதும்

தனியளாய்   தானிருக்க  நானும்
       தவிக்கிறேன்  தனிமை உணர்வால்
இனியனாய்     வந்து   என்னை
       இறுக   அணைத்திடுவாய் அன்பே !



கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...