இறைவா!
உம்
படைப்புகள் அனைத்தும்
உம்
புகழைப் பாடுவதாக
பிரமிக்க வைக்கும்
பிரபஞ்சமும்
பேரண்டமும் பால் வெளியும்
திறம்மிக்க சூரிய மண்டலமும் - அதில்
திரிந்திடும் கோள்கள் யாவும்
விண்ணும் மண்ணும்
விண்மீன்களும்
வியத்திட வைக்கும் விண்விரிவும்
விண்ணின்பிற அதிசயமும் விண்கற்களும்
வியந்து உம்மைப்
போற்றிடுமே
ஆற்றல்மிகு ஆதவனும்
வானில்ஆங்கே
ஆடித் தவழும் வெண்ணிலவும்
போற்றத்தகு உந்தன்
பெருமையினை
புகழ்ந்து உரைத்துப் பறைசாற்றிடுமே
வானில் மிதக்கும் முகில்கூட்டம்
வாழ்த்திடுமே உம் புகழ்நீட்டம்
வேனில் தணிக்கும்
நன்மழையும்
வேந்தன் அருமை சாற்றிடுமே
எங்கள் வீடாம்
பூலோகம்
எம்
உயிர் வளிமண்டலம்
நீங்கள் தந்த
காற்றும்
நித்தம் உமை வணங்கிடுமே
பெருங்கடலும் உறை
நிலமும்
பெருங்குன்றும் உயர் மலையும்
பூங்காற்றும் புவிவளமும்
நின்னருளை
பூரித்துப் பாடி மகிழ்ந்திடுமே
காடும்மேடும் கடும்
பள்ளத்தாக்கும்
காஞ்சொறி வனமும் சமவெளியும்
ஓடும் ஆறும்
வீழும் அருவியும்
ஓயாது உன்புகழ்ப் பாடிடுமே
வளம்மிகு வயல்வெளியும்
வனப்பும்
வறண்டு நிற்கும் வனாந்திரமும்
உளம்கவர் இயற்கை
வளமும்
உந்தன் இனிமைதனை இசைத்திடுமே
கனிதரும் மரங்களும்
குளிர்தருவும்
குணந்தரு செடியும்
கொடியும்
அணிவரும் பருவமும்
காலமும்
அடிபணிந்தே உம்மைத் துதித்திடுமே
வசந்தமும் வாட்டும்பனியும் கோடையும்
வான்தரும் மழைக் காலமும்
வீசுந்தென்றலும் இலையுதிர்க் காலமும்
வீங்கிள வேனிலும் உலர்பருவமும்
நின்தூதராம் நெருப்பும்
பெருங்காற்றும்
நீரும் நிலஅதிர்வும் எரிமலையும்
தன்எல்லை மீறிடா
கடலலையும்
தலைவனின் தயவு சொல்லிடுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக