அவர் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். மிகவும் தாராள மனம் படைத்தவர்.அவரிடம் ஏராளமான நிலபுலன்களும், தோப்பு, தோட்டங்களும், கால்நடைப் பண்ணைகளும், வயல் வெளிகளும் இருந்தன. அதில் வேலை செய்ய அநேக வேலையாட்களும் வைத்திருந்தார். தன் தொழிலை வேறு ஒரு ஊரில் விரிவுபடுத்துவதற்காக, தன்னுடைய வேலையாட்கள் அனைவரையும் அழைத்து, "இந்த ஊரில் உள்ள எனது அத்தனைச் சொத்துக்களையும் உங்களிடம் விட்டுச் செல்கிறேன். இவற்றை முறையாக பராமரித்து, இவற்றிலிருந்து வரும் பயனை உங்களுக்குள் சமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று சென்று விட்டார். நாட்கள் சென்றன. வேலைக்காரர்களில் சிலர் மற்றவர்களை விட பலசாலிகள், தந்திரக்காரர்கள். முதலில் அவர்கள் மற்ற வேலையாட்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்பு மொத்த சொத்தில் தங்களுக்கு ஏற்றவாறு பாகத்தை பிரித்து தங்கள் உடைமை ஆக்கிக் கொண்டனர். வேலையாட்களை வதைத்து வேலை வாங்கினர். வருமானத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாகுபாடு. பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த தோட்டம், தோப்பு, வயல்வெளி, கால்நடைப் பண்ணைகள் என எல்லாவற்றையும் சுருக்கி அந்த இடத்தில் மாளிகைகளையும், தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தினர். பின்பு அவர்களுக்குள் தொழிற்போட்டி தொடங்க ஆரம்பிக்க, பாதுகாப்பிற்காக வேலிகளை சுற்றி அமைத்தனர், பாதுகாப்பு கருவிகளைப் பெருக்கினர். வேலையாட்களின் வருமானத்தை பிடித்து அதிலிருந்து பாதுகாப்புக்கு பணத்தை செலவிட்டனர். ஆக்கப் பணிக்காக அன்று நிறைய பணம் அழிவு பணிக்காக செலவிடப்பட்டது. வேலையாட்களுக்குள் ஒரு போட்டி மனப்பான்மையும் உருவாக்கப்பட்டது. ஊழலும், பித்தலாட்டமும், லஞ்ச லாவண்யமும், கள்ளம், கபடு, சூதுவாது என எல்லாம் நிறைந்தன. இப்படியே முதலாளி எதற்காக கொடுத்தாரோ அதனை வீணடித்தனர். பல நாட்களாக இதைக் கண்டு பொறுமையாக இருந்த முதலாளி, ஒருநாள் சினம் கொண்டு பொங்கியெழுந்து அவர்கள் அனைவரையும் தன் ஊரிலிருந்தே துரத்தி அடித்தார்.
இப்படித்தான், இந்த உலகில் பொருளாதார போட்டி என்ற பெயரில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. பாதுகாப்பு என்ற பெயரில் அழிவு சக்திக்காக ஆயுதங்கள் பெருக்கப்படுகின்றன. மக்களுக்குள் போட்டி மனப்பான்மை உருவாக்கப்பட்டு ஏற்ற தாழ்வுகள் அதிகமாய் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அன்பு வற்றி, ஆணவமும் செருக்கும் மேலோங்கி, மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கின்றது.
"இறைவன் கொடுத்ததை
மனிதன் கெடுக்காதிருக்கட்டும்!"
இப்படித்தான், இந்த உலகில் பொருளாதார போட்டி என்ற பெயரில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. பாதுகாப்பு என்ற பெயரில் அழிவு சக்திக்காக ஆயுதங்கள் பெருக்கப்படுகின்றன. மக்களுக்குள் போட்டி மனப்பான்மை உருவாக்கப்பட்டு ஏற்ற தாழ்வுகள் அதிகமாய் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அன்பு வற்றி, ஆணவமும் செருக்கும் மேலோங்கி, மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கின்றது.
"இறைவன் கொடுத்ததை
மனிதன் கெடுக்காதிருக்கட்டும்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக