புதன், 9 செப்டம்பர், 2020

இறுதிவரை நம்பிக்கை (இன்றைய சிந்தனைக்கு)

ஒரு கடலோர கிராமத்தில் மீனவன் ஒருவன் தன் குடும்பத்தோடு  வசித்து வந்தான். இரவில், தன் படகில் ஏறி மற்ற மீனவர்களுடன் நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடித்து அதிகாலை வந்து அவற்றை விற்பது வழக்கம்.  சில நாட்களாக இவனுடன் செல்லும் மீனவர்கள் அதிக மீன்பாடுடன் வர, இவனுக்கோ மிகக்குறைவான மீன்களே வலையில்  சிக்கின.   இப்படியே பல மாதங்களாக, வருடங்களாக மீன்பாடு குறைந்து கொண்டே வந்தது. இவனும் குடும்பமும் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் மன்றாடி வந்தனர்.  நாளுக்கு நாள் வருமானம் குறைந்து வறுமையில் தள்ளாடினர்.   செலவுகளோ அதிகமாக கடன்சுமையும் அதிகமானது. 

என்ன செய்வது என்று தெரியாமல் அன்றிரவு அவர்கள் இறைவனிடம் வேண்டினர். "இறைவா! இன்று நான் கடலுக்குச் செல்கிறேன் . என் கடன் தொல்லைகள் தீர்ந்து எங்கள் வாழ்க்கை முன்னேறும்படி இன்று முதல் எனக்கு மீன்பாடு கிடைக்க வேண்டும்.  அப்படி இல்லையென்றால் நாங்கள்  குடும்பத்தோடு விஷம் அருந்தி செத்து போவோம்". குடும்பமாக செபித்தப்  பின் இரவில் மீனவனும் வழக்கம் போல் கடலுக்குச் சென்றான்.  அங்கு ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது.   இதர மீனவர்களின் படகு முழுவதும் மீன்களால் நிரம்பியது   ஆனால் இந்த மீனவனின் வலையிலோ மொத்தமே மூன்றே மீன்கள். 

வெறுத்துப் போன மீனவன் அந்த மூன்று மீன்களையும் எடுத்துக் கொண்டு வரும் வழியில் ஒரு குப்பி விஷத்தையும் வாங்கி வீடு வந்து சேர்ந்தான்.  குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து,  "கடவுளே!  நாங்கள் எவ்வளவு உம்மை நம்பி இருந்தோம்.  ஆனால் நீரோ எங்களை கைவிட்டு  விட்டீர்".  என்று அழுது  புலம்பினர்.  பின்பு மீனவன் மனைவியிடம் மூன்று மீன்களையும் கொடுத்து "மீன்குழம்பு  வச்சி சோத்தோடு விஷத்தைக் கலந்து சாப்பிட்டு செத்து  விடுவோம்". என்றான்.  மீன்களை எடுத்துச் சென்ற மனைவியும் அவற்றை அறுக்க அந்த மீன்களின்  வயிற்றிலிருந்து பளபளப்பான  கற்கள் விழுந்து ஜொலித்தன.  மனைவியும் மீனவனை அழைத்து அதனைக் காண்பித்தாள்.  அவன் அவற்றை எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் விசாரிக்க அவை விலைமதிப்பு மிக்க கற்கள் எனத்தெரிய வந்தது.

இப்போது அவன் யோசித்தான்." அந்த மூன்று  மீன்களையும் யாருக்காவது விற்று பின்பு விஷம் அருந்தி செய்திருந்தால் என் வாழ்க்கை மட்டுமல்ல என் குடும்பத்தாரின் வாழ்க்கையையும் நான் அழித்திருப்பேனே.. கடவுள் தான் இந்த நிலையிலும் எங்களைக்  காப்பாற்றினார்".

இப்படித்தான் பலரும் தங்கள் இறைநம்பிக்கையில்   சோர்வுற்று தங்களை மாய்த்துக் கொள்ள முனைகிறார்கள்.  இறுதிவரை நம்பிக்கைக்  கொள்வோரே வெற்றியடைவர்

விவிலிய வாக்கு:
"இறுதிவரை நம்பிக்கையில் நிலைத்திருப்போரே மீட்புப்  பெறுவர்"

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...