செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அருகதை உண்டோ எனக்கு? (தமிழ் கவிதை)

 என்ன    தகுதி   உண்டெனக்கு 
     என்னை  நீர்   தெரிந்தெடுக்க ?
என்னென்ன  நன்மை  செய்தீர் 
     எவ்வளவாய்  உயர்த்தினீர்  இறைவா 

விந்தையாய்    என்னைப்   படைத்தீர் 
      வியத்தகு   செயல்    புரிந்தீர் 
தந்தையாய்     எனைச்   சுமந்து 
      தரணியில்  எனைக்   காத்தீர் 

விந்தைகள்   செய்தது   மட்டுமன்று -  அதனை
      விரிக்கும்   எண்ணம்  உமக்குண்டு 
கந்தையில்   கிடந்த  இம்மனிதனை 
      கருத்தாய்  உயர்த்தியதும்  சிறிதாயிற்று 

இன்னும்பல     எனக்குச்   செய்வதாய் 
      இனிதாய்    உந்தன்    அடியார்வீடு 
தான்னும்       சிறப்புப்     பெறவே 
      திருவுளம்   நீரும்   கொண்டீரே !

உன்னதர்     நீரே    என்னை 
     உயர்வாய்  மதிக்க   நான் 
என்னதை    சொல்வேன்  நீரும் 
     என்பேரில்  வைத்த  கரிசனைக்கு 

தூசியாம்    மனிதர்    தாமே 
     துச்சமாய்  என்னை   விலக்க
தூசியாய்    இருக்கும்  என்னை 
     தூயவர்    மதிப்பது   முறையோ?

அருகதை   உண்டோ  எனக்கு?
     அனைத்தும்  எனக்கு  நீர்செய்ய 
இருப்பதிலும்   இன்னும்  மேலாய் 
      இறைவன்  நீர்செய்ய  விரும்புகிறீர் 

உமக்கு   ஒப்பானவர்   எவருமுண்டோ?
      உம்மிலும்    வேறே    கடவுளுண்டோ?
தமக்கு    அஞ்சி    நடப்போர்க்கு 
      தயைநீர்    என்றும்   காட்டுபவர் 

உம்மக்கள்    இஸ்ரவேலர்   என்றும் 
      உமது    மக்களாக    இருக்க 
உம்வலிய   கரத்தால்   மீட்டீரே
     உடமையாய்  நாட்டைத்  தந்தீரே 

உமது    அடியானையும்  வீட்டையும் 
     உளமார   ஆசிர்வதிக்க  உறுதிப்படுத்தும் 
உமதுஆசி    பெற்றது    யாவும் 
      ஊழிஊழியாய்   ஆசிப்   பெற்றதுவே 

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...