புதன், 14 அக்டோபர், 2020

நானொரு நாடோடி மனிதன் (தமிழ் கவிதை )

 நானொரு  நாடோடி  மனிதன் 
   நிரந்தர வசிப்பிடம்  எனக்கில்லை 
இன்னொரு  இடம்   என்றாலும் 
   இறைவன்  தந்தால்  அங்கிருப்பேன் 

பாலையோ  சோலையோ  கவலையில்லை 
   பரமனின்   துணை   எங்குமுண்டு 
காலையோ  மாலையோ  எப்போதும் 
   காண்பவர்   எந்தன்   அருகிலுண்டு 

தூரம்பல   கடந்து   வந்தேன் 
   துயரம்   என்னை  ஆழ்த்தவில்லை 
பாரம்பல   சுமந்தாலும்  எந்தன் 
   பாரத்தையும்  சுமப்பவர்  இறைவன் 

பாதையில்  கற்களும்  முட்களும் 
   பரவிதான்  கிடந்தாலும்  எந்தன் 
பாதம்    சேதம்   அடையாது 
   பாதுகாப்பவர்   இறைவன் அன்றோ!

வானம்பாடி  பறவையைப்   போன்றே 
   வானில்    பறக்க   ஆசிக்கிறேன்
கானம்பாடி   இறைவன்  புகழை 
   காற்றில்    ஒலிக்க   யாசிக்கிறேன் 

நானொரு  நாடோடி  மனிதன் 
   நாள்தோறும்  பயணம் கண்டேன் 
ஏனொரு   மனிதனாய்  பிறந்தேன்?
   என்னும்  ஏக்கம்   கொண்டேன்.

காலையில்  மலரும்  மலர்போல 
   காட்சிக்கு  எழிலாய்   ஆசிக்கிறேன் 
மாலையில்   தொடுத்து  உந்தன் 
    மலரடி   கிடைக்க  யாசிக்கிறேன் 

நானொரு   நாடோடி   மனிதன் 
   நடந்துக்   களைத்து  சோர்வுற்றேன் 
தானொரு   பிறவி    உண்டெனில் 
   தருவாய்  இருக்க   ஆசிக்கிறேன்

கிளைகள்  பரப்பி   இருக்கணும் 
   கனிகள்   நிறைந்து  கிடைக்கணும் 
களைத்துப்   போன  உயிர்களுக்கு 
   கனிந்த   புகலிடம்  கொடுக்கணும் 

என்னுள்    ஆயிரம்  ஏக்கங்கள்  
   எழுத்தில்   வடிக்க   இயலாது 
சின்னதாய்   சிறகுகள்  இருப்பினும் 
   சிட்டுக்குருவி  போல  பறக்கணும்

நானொரு  நாடோடி  மனிதன் 
   நாட்டுவேன்  எந்தன் கூடாரத்தை 
பின்னொரு   கட்டளை  என்றால் 
   பின்பற்றிச்  செல்வேன்  இறைவனை 

குறைகள்  ஒன்றும்  எனக்கில்லை 
   குசலம்  இறைவன்  பேணும்போது 
பறைகள்    தட்டி   முழங்கிடுவேன் 
   பாறையாம்  மீட்பருக்கு நன்றியினை 

ஆயினும்  ஆசைகள்   அதிகமுண்டு 
    அதில்   ஆகாய   விண்மீனுண்டு 
கையினில்  எட்டா  வானத்தில் 
    கண்சிமிட்டி   மின்ன  வேண்டும் 

படர்ந்திடும்  கொடிபோல்  உம்மை 
   பற்றிப்பிடிக்க    ஏக்கம்  உண்டு 
தொடர்ந்திடும்  நிழல்  போன்றே 
   தொட்டுப்    பின்வர  ஆசையுண்டு 

மழைதரும்  மேகம்   போன்றே 
   மண்ணின்   தாகம்  தீர்க்கணும்
தழைத்திடும்   தளிர்  போலவும் 
   தானியம்    கொடுக்கவும் ஆசை 

நானொரு  நாடோடி  மனிதன் 
   நாழிகை   நானும்  அறியேன் 
மானொடு  கால்கள்   இருப்பின் 
   மாநிலம்  சுற்றித்  திரிவேன்  

மகரந்தம்  சேர்க்கும்  தேனியாய்
   மண்டாது  ஊறும்  கேணியாய் 
சிகரத்தை   மூடும்  பனியாய்
   சீராய்    பணிசெய்ய  வேண்டும் 

நானொரு  நாடோடி  மனிதன் 
   நாடுவேன்  இறைவனைத் தாமே 
தேனொழுகும்  அவரின்  வார்த்தை 
   தெவிட்டாது   உண்ண  ஆசிக்கிறேன் 
Hunter Gatherer Societies: eng, gatherer, hunter, prehistory, social,  societies, studies, tp | Glogster EDU - Interactive multimedia posters
 

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...