கொஞ்சும் மழலையின் மொழிதான்
கொள்ளை கொள்ளும் இன்பம்
பிஞ்சுக் குழந்தையின் பேச்சில்
பிழைதான் காண்பவர் உண்டோ?
குழலினிது யாழினிது என்பர்
குழந்தையின் சொல் கேளாதவர்
மழலையின் மொழியில் இறைவன்
மயக்கும் ஆற்றலை வைத்தார்
எத்தனை ஆற்றல் கொண்டது
எதிரியை அடக்கும் மொழியது
அத்தனை பகையும் ஒடுக்கிடும்
அற்புதம் உண்டு மழலையில்
பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர். (திருப்பாடல்கள் 8:2)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக