ஒரு மனிதர் தன் வீட்டினைச் சுற்றி ஒரு அழகானத் தோட்டம் அமைத்திருந்தார். அதில் பலவகையான பழமரங்களையும் காய்கறிச் செடிகளையும், அழகானப் பூக்களையுடைய செடிகளையும் கண்கவர் குரோட்டன்ஸ் செடிகளையும் வளர்த்து வந்தார். சில புல்பூண்டுகள், சில செடிகள் பறவைகள் மூலமாகவோ நீர் அல்லது காற்றின் மூலமாக அவற்றோடு வளர்ந்து வரும். இப்படி வளர்ந்தவற்றை அவர் களைந்து எறிந்து விடுவார். சிலநேரம் கண்ணுக்குத் தப்பி அவை வளர்ந்து விடும். அவருக்கு உடம்பு முழுவதும் ஒரு தோல் வியாதி உண்டானது. மிகுந்த எரிச்சலுடன் வேதனையும் ஏற்படுத்தியது. தோல் மருத்துவரிடம் சென்று பல ஆயிரங்களை செலவழித்தும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த அவருக்கு, (உடனே, அற்புத குணமளிக்கும் ஆராதனைக்கு சென்றார் என்று சொல்ல வருகின்றேன் என்று நினைக்க வேண்டாம்), ஒருநாள் இரவில், அவர் வீட்டிலிருந்த தானாகவே வளர்ந்த ஒரு குப்பைச் செடி பிரகாசமாய் ஒளிர்வதைப் போல் கனவு கண்டார். மறுநாள் காலையில் எழுந்த அவர், அதன் இலைகளைப் பறித்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசினார். சிறிது நேரத்தில் அவர் உடம்பில் இருந்த எரிச்சல் குறையத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாதமாக இப்படி பூசி வரவே, அவர் உடம்பிலிருந்த அந்தத் தோல்நோய் முற்றிலுமாக நீங்கியது. எதை அந்த மனிதர் குப்பைச் செடி என்று நினைத்தாரோ அதுவே அவருக்கு பெரிய விலைமதிப்பில்லா பலனைத் தந்தது.
இப்படி பல மூலிகைச் செடிகள் நம்மைச் சுற்றி இருக்கும். அவற்றை நாம் குப்பைச் செடிகள் என்று ஒதுக்கி விடுவோம் அதன் உண்மையான மருத்துவ குணம் தெரியாமல். குறிப்பாக, கீழாநெல்லி பல இடங்களில் சிறிது சிறிதாக வளர்ந்து நிற்கும். அது மஞ்சள் காமாலைக்கும், கல்லீரல் நோய்களுக்கும் ஒரு சிறந்த மருந்து. இப்படி பல பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கடவுள் நம்மைச் சுற்றிலும் வைத்திருக்கின்றார். ஆனால் நாம் அவற்றை உணர தவறி விடுகின்றோம். ஒரு சிறுவிதையில் அடர்ந்து விரியும் மரங்கள் உருவாகவில்லையா? ஒரு சிறுஅணுவும் ஒரு உயிரை உண்டாக்கவில்லையா? ஒரு சிறு நீர்த்துளியும் மேகமாகி மழைத் தரவில்லையா? ஒருசிறு பொறியும் பெரிய காட்டையே அழிக்கவில்லையா? ஒருசிறு கூறும் (molecule) திசுவும் (Tissues) பொருளாகவில்லையா? நம்மைச் சுற்றிலும் எத்தனை எத்தனை அதிசயங்களைக் காணமுடிகிறது. பூமிப்பந்து அந்தரத்தில் இருப்பது, காற்று, மழை, செடிகள், மரங்கள், காடுகள் என எவ்வளவு அதிசயங்கள். மனிதனின் மூளை, அவன் ஞானம், அவன் அறிவு, உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கங்கள், உடலியல், வேதியியல், உளவியல் மாற்றங்கள் இப்படி நமக்குள் நடப்பதைப் பற்றி சொல்வதற்கே பல புத்தகங்களை எழுத வேண்டும். அப்படிபட்ட விந்தையான பல அதிசயங்களை இறைவன் படைத்துள்ளார்.
நாமோ, அற்புதங்களையும் அதிசயங்களையும் தேடி ஒவ்வொரு மனிதர்களிடம் (அற்புத குணமளிக்கும் ஆராதனைக்கு கூட்டங்கள், இரட்சிப்பு கூட்டங்கள், வல்லமை மிக்க போதகர், அருங்குறி ஆற்றுபவர்.......) அவர்களின் போதனைகளுக்காகவும் அவர்களின் விந்தைகளுக்காகவும் அலைகின்றோம். இவையெல்லாம் மாஜிக் போல நம் கண்களைத் திருப்திபடுத்துமேயொழிய, மனதை சிலநேரம் உறங்கவைக்குமே ஒழிய, உண்மையில் இவை நமக்கு உடல், மன ரீதியாக ஒரு நிரந்தர உண்மையான மாற்றத்தை, விடுதலையைத் தருவதில்லை.

உண்மையில், நமக்குள் நம்மில் இறைவன் அந்த குணமளிக்கும் செடியை வைத்திருக்கின்றார். நாம் அவற்றை இன்னும் கண்டுணரவில்லை.
விவிலியத்தை முறையாக படித்து தனிமையில் தியானிப்பதே சிறந்த வழி.
"ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்." (சங்கீதம் 139:13-14)
"சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்; நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்." (சங்கீதம் 20:7)
"இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள். “என்றார்." (யோவான் 4: 48)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக