அன்பு நிறைக் கடலே !
ஆற்றல் மிகு அரசே !
இன்பம் தரும் ஊற்றே !
ஈடிணை இலா நிறையே !
உன்னத பெரும் அருளே !
ஊண்உயிர் காக்கும் இறையே !
என்னகம் சூழ்ந்திடும் எழிலே !
ஏற்றம் அருளும் ஏகனே !
ஐயம் தெளியுணர் அறிவே !
அய்யனே என் அம்மையே !
ஓயா உறங்கா காவலனே !
ஒளிவீசும் பெருஞ் சுடரே !
அவ்வையம் ஆளும் அதிபதியே !
ஒளடதமே பிணிதீர் மருந்தே !
இவ்வையம் காக்கும் கடவுளே !
இறைவனே! போற்றி! போற்றி !
கருணையே! கருணைக் கடலே !
காண இயலாக் காருண்யமே !
கிருபை பொழியும் மாமழையே !
கீர்த்தியில் குன்றா மாமலையே !
குடும்பத் தலைவனே ! கோனே !
கூர்மதி பெருக்கும் நிறைகடலே !
கெடுமதி நீக்கும் குணக்கடலே!
கேட்போருக்கு வழங்கும் வள்ளலே !
கைவினை தேர்ந்த கர்த்தாவே !
கொடுமை ஒழிக்கும் கொற்றவனே !
கோவிலாய் எளியவர் உள்ளம்
கௌரவம் பாராது வருபவரே!
சனங்களின் சகாய சத்துவரே !
சாந்த குணத்தின் சாத்திரமே !
சினம் கொள்ளா சிநேகிதரே !
சீரிய பண்பின் சிகரமே !
சுத்தம் புனிதம் நிறைந்தவரே !
சூரியனை மிக்க பிரகாசமே !
செத்தல் தன்மை மாந்தரையும்
சேர்த்து அணைக்கும் சேவித்தரே !
சைரிகம் இல்லாது உலகை
சொர்க்க வனமாய் படைத்தவரே !
சோரிகை இல்லா மனங்களில்
சௌந்தரம் காணும் செம்மானே !
தரணியைத் தாங்கும் தலைவனே !
தாயுள்ளம் கொண்ட தகப்பனே !
திராணியற்ற மாந்தரின் துணைவனே !
தீவினை அழிக்கும் தீப்பிழம்பே !
துளியும் குறைகாணா தூயவனே !
தூதர்கள் துதிக்கும் நாயகனே !
தெளியும் ஞானத்தின் ஆழியே !
தேவனே! எந்தன் ஜீவனே !
தைஇ பாமாலைச் சூட்டி
தொடர்ந்து பண் இசைப்பேன் !
தோயதம் கைகள் நீட்டி
தௌட்டகம் நீக்கி எழுவேன் !
ஆற்றல் மிகு அரசே !
இன்பம் தரும் ஊற்றே !
ஈடிணை இலா நிறையே !
ஊண்உயிர் காக்கும் இறையே !
என்னகம் சூழ்ந்திடும் எழிலே !
ஏற்றம் அருளும் ஏகனே !
அய்யனே என் அம்மையே !
ஓயா உறங்கா காவலனே !
ஒளிவீசும் பெருஞ் சுடரே !
ஒளடதமே பிணிதீர் மருந்தே !
இவ்வையம் காக்கும் கடவுளே !
இறைவனே! போற்றி! போற்றி !
காண இயலாக் காருண்யமே !
கிருபை பொழியும் மாமழையே !
கீர்த்தியில் குன்றா மாமலையே !
கூர்மதி பெருக்கும் நிறைகடலே !
கெடுமதி நீக்கும் குணக்கடலே!
கேட்போருக்கு வழங்கும் வள்ளலே !
கொடுமை ஒழிக்கும் கொற்றவனே !
கோவிலாய் எளியவர் உள்ளம்
கௌரவம் பாராது வருபவரே!
சாந்த குணத்தின் சாத்திரமே !
சினம் கொள்ளா சிநேகிதரே !
சீரிய பண்பின் சிகரமே !
சூரியனை மிக்க பிரகாசமே !
செத்தல் தன்மை மாந்தரையும்
சேர்த்து அணைக்கும் சேவித்தரே !
சொர்க்க வனமாய் படைத்தவரே !
சோரிகை இல்லா மனங்களில்
சௌந்தரம் காணும் செம்மானே !
தாயுள்ளம் கொண்ட தகப்பனே !
திராணியற்ற மாந்தரின் துணைவனே !
தீவினை அழிக்கும் தீப்பிழம்பே !
தூதர்கள் துதிக்கும் நாயகனே !
தெளியும் ஞானத்தின் ஆழியே !
தேவனே! எந்தன் ஜீவனே !
தொடர்ந்து பண் இசைப்பேன் !
தோயதம் கைகள் நீட்டி
தௌட்டகம் நீக்கி எழுவேன் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக