ஞாயிறு, 29 நவம்பர், 2020

2021ம் ஆண்டுக்கான கணிப்புகள்

ஜனவரி மாதத்தில் பல  நாடுகளில் மிக அதிகமாக பனிப்பொழிவு ஏற்படும்.
பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் உண்டாகும் 
காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்படும் 
பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் 
மார்ச் மாத்திற்கு பின்,  ஒரு சக்தி வாய்ந்த  தலைவர் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ மர்மமாக இறந்து போவார். மத்திய ஆசியாவின் இரு நாடுகளுக்குள் கடும் போர் ஏற்பட்டு பின்னர் சமாதான ஒப்பந்தம் ஏற்படும்.  ஐரோப்பாவில் ஏற்படும்  சில பொருளாதார சிக்கல்கள் பல இடங்களில் வேலைஇன்மையை ஏற்படுத்தும்.  உணவு தானிய உற்பத்தி மிக அதிக அளவில் ஏற்பட்டு பல வறிய  நாடுகளுக்கு தாராளமாக அனுப்பி  வைக்கப்படும். வானில் பல வினோத நிகழ்வுகள் ஏற்படும். கோடையில் பருவ நிலை மாறுபாடுகள் உண்டாகி பல இடங்களில் கடல் சீற்றங்கள் ஏற்படும்.  சில சூரியனில் ஏற்படும் அலைகளால் மின்காந்த அலைகள் பாதிப்புக்குள்ளாகி, விமான போக்குவரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மக்களுக்கு அச்சம் ஏற்படும். பல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி தடைபடும் 
அமெரிக்க பொருளாதாரம் ஏப்ரல் மாதத்தில் சிறிய சரிவை கண்டு அதன் பின்னர் மிக வேகமாக வளர்ச்சியுறும்.
சீனாவின் பல இடங்களில் இயற்கை சீற்றங்கள் நடக்கும். சீனா பல இடங்களில் தன்  ஆக்கிரமிப்புகளை செயல்படுத்தும்.  இரண்டு மேற்காசிய  நாடுகள் ஒன்றிணைவதற்கு ஒப்பந்தம் ஏற்படும். காட்டுத்தீ ஏற்பட்டு சுற்றுசூழல் மாசுபடும்.  புதிய இரண்டு கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் மத்திய பகுதியில் ஏற்படும் ஒரு மாறுதல் ஒட்டுமொத்த  இந்தியாவிலும் மாற்றத்தை  ஏற்படுத்தும்.  நல்ல மழைப்பொழிவு ஏற்படும். அணைகளும் ஏரிகளும் நிரம்பும். இந்திய பெருங்கடலில் அவ்வப்போது நிலஅதிர்வுகள் ஏற்படும். மே  மாதத்திற்கு பின் இரு பெரிய வல்லரசுகள் பசிபிக் பிராந்தியத்தில் போர் நிலவும் சூழலை ஏற்படுத்தும். ஆப்பிரிக்கா  கண்டத்தில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு நல்ல  முன்னேற்றங்கள் ஏற்படும்.  மதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு  மதத்தை தாண்டிய ஆன்மிகம் உலகில் வளர தொடங்கும். சோசியலிச  கோட்பாடுகளும், பொதுவுடைமை கோட்பாடுகளும்  சமத்துவ கோட்பாடுகளும் புத்துயிர் பெரும்.  லஞ்ச ஊழல், ஏமாற்றுத்தனம் செய்பவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் புதிய ஒரு நோய்  தாக்கும். உலகெங்கிலும் அநீதமான ஆட்சி செய்பவர்களை மக்கள் புரட்சி செய்து பதவியிலிருந்து தூக்கி எறிவார்கள்.  மக்கள் ஆடம்பரத்தை வெறுத்து கடவுளை நோக்கி திரும்புவார்கள்.  . 
கண்டிப்பாக, 2021ம் ஆண்டு முழுவதும்  சூரியன்  கிழக்கே தோன்றி மேற்கே மறையும்.

2020ம்  ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டுக்குள் இன்னும் சில நாட்களில் நுழைய இருக்கின்றோம்.  பல போதகர்கள், சோதிடர்கள், பஞ்சாங்கம் எழுதுவோர் என பலரும் தங்கள் 2021ம் ஆண்டுக்கான  தரிசனங்களை , வாக்குத்தத்தங்களை, கணிப்புகளை எழுத சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் இந்தியாவில் நாளுக்கு ஒருகணிப்பு , ஆளுக்கு ஒரு திணிப்பு என மும்முரமாக இந்த தொழில்  கொடிகட்டும் . அதற்கு முன்பாக, 2021ம் ஆண்டுக்கான எனது  கணிப்புகளை மேலே  கொடுத்துள்ளேன். இப்படித்தான் ஒவ்வொரு யூகங்களும்  அந்தந்த கால கட்டத்திற்கேற்ப கணிக்கப்பட்டு நம்மீது திணிக்க படுகின்றன. தப்பித்தவறி நிகழ்பவற்றை  கொண்டு நாம் சொல்பவரை அல்லது கணிப்பவரை உச்சிக்கு ஏற்றிவிடுகிறோம்.  அவர்கள்  சொன்னதில் நிகழாதவற்றை மறந்து விடுகிறோம். நடப்பவை யாவும் அதனதன் படி நடந்துகொண்டிருக்கும். ஆகவே, நிகழ் காலத்தில் வாழுங்கள், எதிர்காலத்தை தெரிந்துகொண்டு உலகில் நீங்கள் எதுவும் மாற்றிவிட  முடியாது.


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...