வியாழன், 17 டிசம்பர், 2020

இறைவன் என் காவியத் தலைவன் (தமிழ் கவிதை) பாகம் - 1

 கற்றறிவும்   கவிமொழியும்   நயம்பட 
   காவியம்    படைத்திடுவேன்  இறைவா !
நற்றமிழால்   நாவும்    உரைக்கும் 
   நன்றிபல   என்றே   இறைவா!

முத்தமிழும்   முழுமை   பெறும் 
   முதலோன்   புகழினை   இசைத்திட 
வித்தகமாய்     உம்கரம்   ஆற்றும் 
   விந்தைதனை   நாளும்   இசைப்பேன் 

வான்கோள்   மண்டலம்   அமைத்தீர் 
   வான்மதி    கதிரவன்     படைத்தீர் 
தன்மையாய்   இல்லா    உலகை 
   தக்கஉரு   கொள்ளச்   செய்தீர் 

விரிந்த    வான்விரிவில்  மின்னிடும் 
    விண்மீன் கதிரவன் சந்திரனென்றே 
திரிந்து    வானில்   ஒளிவீசிட
    தினத்தை பகலிரவாக  பிரித்தீர் 

அகண்ட    பூவுலகை  அளந்து - அதில் 
    ஆழ்கடலும்  நிலமும் அமைத்தீர் 
உகந்த   இனத்தின்படி   தாவரத்தை 
     உலகமும்  பிறப்பிக்கச் செய்தீர்.

புற்பூண்டு   தானியம்  செடிகொடி 
    பழம்தரு நிழல்தரு  மரங்கள் 
குற்றைப்   புதர்முதல்  காய்கறி 
    குணம்தரு  செடிவரை விளைவித்தீர் 

நாள்மாதம்   பருவம்   ஆண்டுயுகமென 
    நாழிகை    காலமென   பிரித்தீர் 
தெள்ளிய    படைப்பு    யாவும் 
    தேர்ந்தவை   நன்றெனக்  கண்டீர்.


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...