பாய்ந்தோடும் ஆறுகள் ஓடைகள்
பள்ளம் வீழ்ந்திடும் நீரருவிகள்
ஓய்ந்திடா காற்றும் கடலும்
ஓங்கியுயர் மலையும் மரமும்
வேய்ந்திடா வானத்தின் கூரையும்
வெம்மை தணிக்கும் கார்மேகமும்
காய்ந்திடா வற்றாத ஆறுகளும்
காடும் மேடும் பள்ளத்தாக்கும்
சாய்ந்திடா புவியின் அச்சும்
சமவெளியும் பாலையும் பனியும்
தோய்ந்திடும் நீர்வழிப் பாதையும்
தோளில் தவழும் இளந்தென்றலும்
மாய்ந்தும் உயிர்பெறும் மாமழையும்
மண்ணில் நல்லதெனக் கண்டீர்
பரந்து விரிந்த பெருங்கடலும்
பரப்பில் சிறிய கடல்களும்
சுரந்து கிடக்கும் ஏரிகுளங்களும்
சுரக்கட்டும் உயிர்பல என்றீர்
ஊர்ந்து செல்லும் ஊர்வனவும்
உயிர்கொல்லும் பாம்பு வகையும்
சார்ந்து வாழும் சிற்றுயிரும்
சகலமும் நிறைந்த நுண்ணுயிரும்
பறந்து திரியும் பறவைகளும்
பாரினில் மேயும் பறவைகளும்
திறந்தவெளி உலவும் கால்நடையும்
திமிறிப்பாயும் காட்டு விலங்குகளும்
பரந்து விரிந்து பலுகச்சொன்னீர்
பாரினை நிரப்ப ஆசியளித்தீர்
சிறந்து விளங்கும் இயற்கை
சீராய் இருக்கக் கண்டீர்
பள்ளம் வீழ்ந்திடும் நீரருவிகள்
ஓய்ந்திடா காற்றும் கடலும்
ஓங்கியுயர் மலையும் மரமும்
வேய்ந்திடா வானத்தின் கூரையும்
வெம்மை தணிக்கும் கார்மேகமும்
காய்ந்திடா வற்றாத ஆறுகளும்
காடும் மேடும் பள்ளத்தாக்கும்
சாய்ந்திடா புவியின் அச்சும்
சமவெளியும் பாலையும் பனியும்
தோய்ந்திடும் நீர்வழிப் பாதையும்
தோளில் தவழும் இளந்தென்றலும்
மாய்ந்தும் உயிர்பெறும் மாமழையும்
மண்ணில் நல்லதெனக் கண்டீர்
பரந்து விரிந்த பெருங்கடலும்
பரப்பில் சிறிய கடல்களும்
சுரந்து கிடக்கும் ஏரிகுளங்களும்
சுரக்கட்டும் உயிர்பல என்றீர்
ஊர்ந்து செல்லும் ஊர்வனவும்
உயிர்கொல்லும் பாம்பு வகையும்
சார்ந்து வாழும் சிற்றுயிரும்
சகலமும் நிறைந்த நுண்ணுயிரும்
பறந்து திரியும் பறவைகளும்
பாரினில் மேயும் பறவைகளும்
திறந்தவெளி உலவும் கால்நடையும்
திமிறிப்பாயும் காட்டு விலங்குகளும்
பரந்து விரிந்து பலுகச்சொன்னீர்
பாரினை நிரப்ப ஆசியளித்தீர்
சிறந்து விளங்கும் இயற்கை
சீராய் இருக்கக் கண்டீர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக