வெள்ளி, 18 டிசம்பர், 2020

இறைவன் என் காவியத் தலைவன் (தமிழ் கவிதை) பாகம் - 4

ஓ மனிதா !

படைத்தவரின் கட்டளை பணியாது 
   படைப்புப்  பொருளையே நம்பி 
தடையான   தீதுறு   தருவின்கனி 
   தன்நிலை  உயர்த்துமென  நினைத்தாய்

எழிலாய்   இறைவன்    அளித்த 
   எல்லாமும்    உன்னால்  இன்றே 
அழியும்     நிலைக்கு  போனது. 
   அறிவுப்   பெருக்கம்  அழிவுக்கா?

கீழ்ப்படியாது  செய்த  அதேபாவம் 
    கீழ்மட்டும்   இன்றுவரை  தொடர்கிறது 
சீழ்ப்பிடித்து   சீர்கெட்டு   உலகத்தில் 
     செய்கையால்  நியதிதனை  கெடுத்தாய் 

காரணம்   யாதெனக்   கேட்டால் 
    காட்டுவாய்   பல்வேறு   காரணமதை 
மரணம்    என்றென   உன்பாவம் 
    மண்ணிற்கே   விரட்டும்  உன்னை 

உலகம்   என்பாய்   உறவுஎன்பாய் 
   உலகின்போக்கு  ஆடம்பரம் என்பாய்  
பாலகர்   தம்மிடமும்  உந்தன் 
   பாவத்தை  அந்தஸ்து  என்பாய் 

வெளிப்பட்டது   உன்பாவம்  எனினும் 
    வெளிவேடம்  போட்டு  மறைப்பாய் 
வெளிப்பட்டது   நிர்வாணம்  அதனை 
    வெட்கி    தலைக்  குனிந்தாயோ?

எங்கே     நீயுமென   இறைவன் 
   எதிரில்   நின்றுனைக்  கேட்டால் 
எங்கே   நீயும்ஒளிந்து  கொள்வாய்?
   எத்தனை   சாபம்   சேர்த்தாய்!



கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...