ஐயகோ! என்பொல்லா பாவமே!
ஐந்தறிவு விலங்கினும் கீழாய்
ஆயனுக்கு எதிராய் என்னையும்
ஆட்டுவித்தாயே! ஒழிந்துபோ நீயும்
குயவனுக் கெதிராய் மண்கலமும்
குறைகள் சொல்லுதல் நீதியோ?
சுயமாய் அவர்தம் தயவின்றி
சுழலுமோ எந்தன் வாழ்க்கை
தீயவர் வாழ்க்கைக் கண்டு - இறைவன்
தீதினை பொறுப்பார் என்பதோ?
தூயவர் எளிய வர்க்கு என்றும்
துணை செய்யார் என்பதோ ?
சேயனுக்குத் தந்தை செவிகொடாரோ?
செய்தருள்வார் காலம் ஒன்றில்.
ஓ என் இறைவா !
மனிதர்தம் மீறுதலால் எத்துணை
மனம் வருந்தி இருப்பீர் !
கனிதரும் தருவாய் நட்டீர்
காய்த்ததோ எம்மில் விடக்கனி
இனியநல் உறவைக் கெடுத்தோம் - எம்
இன்பத்திற்காய் பலரைக் கொன்றோம்
மானிட மாண்பை மறந்தோம்
மறுபடியும் தவறு செய்தோம்
வாணிபம் என்ற பெயரில் - பிறர்
வாழ்வை கெடுத்து அழித்தோம்
அணிகள் சேர்த்து உலகில்
ஆயுதம் பெருக்கச் செய்தோம்
கோணிய வில்லென குறிமாறி - நீவிர்
கொடுத்த இயற்கையும் கெடுத்தோம்
பணிய மறுத்து உம்திருமுன்
பகட்டைப் பெரிதென நினைத்தோம்
தனித்துவம் பெற்ற மானுடரை
தயவினால் பொறுத்துக் கொண்டீர்
புனிதம் நிறைப்பெருங் கடலே!
புல்போன்று உம்முன் நாங்கள்
இனியும் உன்சினம் அடக்காது
இயன்ற மட்டும் கண்டிப்பீர்
மேனியும் மனமும் வருத்தி
மனிதரை நீதியால் தண்டிப்பீர்
ஐந்தறிவு விலங்கினும் கீழாய்
ஆயனுக்கு எதிராய் என்னையும்
ஆட்டுவித்தாயே! ஒழிந்துபோ நீயும்
குயவனுக் கெதிராய் மண்கலமும்
குறைகள் சொல்லுதல் நீதியோ?
சுயமாய் அவர்தம் தயவின்றி
சுழலுமோ எந்தன் வாழ்க்கை
தீயவர் வாழ்க்கைக் கண்டு - இறைவன்
தீதினை பொறுப்பார் என்பதோ?
தூயவர் எளிய வர்க்கு என்றும்
துணை செய்யார் என்பதோ ?
சேயனுக்குத் தந்தை செவிகொடாரோ?
செய்தருள்வார் காலம் ஒன்றில்.
ஓ என் இறைவா !
மனிதர்தம் மீறுதலால் எத்துணை
மனம் வருந்தி இருப்பீர் !
கனிதரும் தருவாய் நட்டீர்
காய்த்ததோ எம்மில் விடக்கனி
இனியநல் உறவைக் கெடுத்தோம் - எம்
இன்பத்திற்காய் பலரைக் கொன்றோம்
மானிட மாண்பை மறந்தோம்
மறுபடியும் தவறு செய்தோம்
வாணிபம் என்ற பெயரில் - பிறர்
வாழ்வை கெடுத்து அழித்தோம்
அணிகள் சேர்த்து உலகில்
ஆயுதம் பெருக்கச் செய்தோம்
கோணிய வில்லென குறிமாறி - நீவிர்
கொடுத்த இயற்கையும் கெடுத்தோம்
பணிய மறுத்து உம்திருமுன்
பகட்டைப் பெரிதென நினைத்தோம்
தனித்துவம் பெற்ற மானுடரை
தயவினால் பொறுத்துக் கொண்டீர்
புனிதம் நிறைப்பெருங் கடலே!
புல்போன்று உம்முன் நாங்கள்
இனியும் உன்சினம் அடக்காது
இயன்ற மட்டும் கண்டிப்பீர்
மேனியும் மனமும் வருத்தி
மனிதரை நீதியால் தண்டிப்பீர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக